Sunday, 23 November 2014

Face Book Posts

https://www.facebook.com/photo.php?fbid=10152560351124296&set=pcb.10152560352169296&type=1


மாவீரர் பலர் பிறந்த மண் எங்கள் மண்ணே அவர் 
தார்மீகப் போர்புரிந்த மண் எங்கள் மண்ணே
பூர்வீக நிலம் காக்கப் புறப்பட்ட மைந்தர் அவர்
போர்வீரர் போலிறந்த மண் எங்கள் மண்ணே.

கார்மேகம் மழைபொழிய குளிரும் எம் மண்ணே
செங்குருதிச் சேற்றினிலே குளிரந்தெழுந்த மண்ணே
தூர்வாரித் துரோகிகளைத் தூக்கியெறி மண்ணே
தீர்வாகத் தீந்தமிழோர் உரிமை பெறு மண்ணே.

மார்மீதும் மனைமீதும் குண்டுமழை பொழிந்தும்
யார்மீதும் தனிப்பகமை காட்டாத பண்பும் 
பார்மீது பலநாடு சென்றடைந்து வாழ்த்தும் 
பாசத்தால் எமை அனைத்த மண் எங்கள் மண்ணே.

கார்த்திகை நிலவினில் ஏற்றிடும் தீபம் 
காற்றினில் ஆடிடும் கார்த்திகைப் புஷ்பம் 
ஊட்டிடும் உணர்வெல்லாம் மண் எங்கள் மண்ணே
மாவீரர் நாள்மறவா மண் எங்கள் மண்ணே.

https://www.facebook.com/photo.php? 
fbid=10152559921584296&set=pcb.10152559923584296&type=1


கண்ணீர் சிந்தும் கார்த்திகை புஷ்பங்கள் 
மண்ணின் மைந்தரை மறப்பதில்லை.
செந்நீர் சிந்தி செத்து மடிந்தனர்
மண்ணில் மாந்தர்கள் மறக்கவில்லை.

பன்னீர் குளிப்பும் பஞ்சு மெத்தையும் பாவிகட்கு
கண்ணீர் குளிப்பும் நஞ்சு குப்பியும் பாரிவர்க்கு
விண்ணில் கார்மேகம் வீசிடும் மாதம் பூத்திடுவாய்
மண்ணில் இவர்தேகம் போர்த்திட நீயுமுதிர்ந்திடுவாய்.

சொன்னீர் சொன்னீர் உம் சோகக் கதைகளை
கேட்டிட இங்கு யாரும் இல்லை
மண்ணில் தர்மம் மாண்டதில்லை
மாபதகம் என்றும் வாழந்ததில்லை.

இருந்தும் இறந்தவர் போல்வாழ்வார் உலகில் 
இறந்தும் இருப்பவர் மேலாவார்.



No comments: