#ஞான மண்டலம்
ஹட யோகம்:
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்" என்பது பழமொழி. வாழ்க்கையின் அடிக்கல் போன்ற அதி முக்கியமான ஒரு காரியத்தை இந்தப் பழமொழி நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை என்பது கர்மங்களின் ஒரு தொகுப்பு. உறங்குவது கூட ஒரு கர்மம் அல்லது ஒரு செயல். சரீர சுகம் இல்லாதவர்களிடத்தில் உறக்கம் என்ற கர்மம் ஒழுங்காக நிகழ்வதில்லை.
இதே போன்று தேகாரோக்கியம் இல்லாதவரால் யாதொரு கர்மமும் சரிவரச் செய்து முடிக்க முடியாததால் ஆரோக்கியத்தைப் பேணி வளர்க்க வேண்டியது மனிதருடைய முதற் கடமையாகும். இதுதான் முன் கூறிய பழமொழியின் அர்த்தம்.
ஜீவித தர்மங்களைச் செவ்வனே செய்வதற்கும், அனுபவிப்பதற்கும் சரீரம் முதற் காரணமாய் இருப்பதால் அதைப் பலப் படுத்திச் சுகமாய் வைத்திருக்க வேண்டும்.
அதில் ஹட யோகம் பிரசித்தமானது. ஹடயோகம் சரீர மன சாஸ்திரங்களுடைய ஒரு சபூர்ண ஞானக் களஞ்சியம்.
ஹட யோகம் முக் கரணங்களிலிருக்கின்ற மலங்களை நீக்கி ஞான மார்க்கத்தி தடையின்றி சஞ்சாரம் செய்வதற்குத் தகுதி உடையவராக்கித் திகழ்வதுதான் இதன் அந்தரங்க நோக்கம்.
எனினும் ஞானயோக மார்க்கங்களைக் கடைப் பிடித்தொழு காதவரும் சரீர மன சுத்திக்கு மாத்திரம் பிரயோசனப் படக்கூடிய பகுதிகளை அப்பியாசித்து சுகமடைவதற்கும் தடையேதுமில்லை.
இதன் ஆரம்பப் பயிற்சிகள் ஒவ்வொருவருக்குப் போதிய மன வலிமையையும் தேகாரோக்கியத்தையும் கொடுக்கத் தக்கது.
தீர்க்காயுள், நோயற்ற வாழ்க்கை, மனச்சாந்தி முதலியவற்றை விரும்புகிறவர்கள் மூப்பு, பிணி, ஆண், பெண் வித்தியாச மில்லாமல் நோக்கத்திற்குரிய சாதனைகளைச் செய்து சுகமாய் வாழலாம்.
இடகலை பிங்கலையை ஒன்று சேர்த்து இணைப்பதற் குரிய யோக மார்க்கத்திற்குக் ஹடயோகம் என்று பெயர்.
வலது இடது கலையில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் சுவாசத்தை பிராணாயாமத்தால் ஜடராக்கினியுடன் சேர்த்து மூலாதார பத்மத்தில் உரக்க நிலையில் கிடக்கும் குண்டலினி என்ற மகா சக்தியைத் தட்டி உணர்த்தி, முது கெலும்பிலி ருக்கும் சுழுமுனைத் துவாரம் வழியாக உச்சியிலிருக்கும் பிரமாந்திர வாசலில் ஏற்றி நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் பிரமாந்திர வாசல் திறக்கப் படும். இது திறந்த பின், பகிர்முக மனம் அல்லது வெளிமனம் அடங்கி, அந்தர்முக மனம் (உள்மனம்) பிரகாசிக்கத் தொடங்கும்.
அந்தர்முக மனப் பிரகாசத்தால் சமாதி என்றொரு அவஸ்தை மூலமாக ஞானம் சித்திக்கிறது.
இந்த இறுதி வைபவத்தை நோக்கித்தான் மனிதனிலிருந்து பிராணிகளீறாக வாழ்க்கை என்ற யாத்திரையைச் செய்து கொண்டிருக்கின்றன.
உடம்பில் ஒரு சில நிமிடங்கள் சுவாசங்கள் ஓடாதிருந்தால் தேகம் உயிரற்று விடுவதால் உயிச்சக்தி சுவாசத்தில் தான் தங்கி இருக்கின்றதென்பதை அறியலாம்.
சகல சராசரங்களும் இந்தப் பிரதான சக்தியால் இயக்கப்படுகின்றன.
தேகம் தனது இயக்கத்திற்குத் தேவையான பிராண சக்தியைப் பஞ்ச பூதங்களிலிருந்து பெறுகின்றது.
சரீரத்தில் பிராண சக்தி குறைந்தால் வியாதி வரும். நின்றால் மரணமும் சம்பவிக்கும்.
இரத்தத்தை ஓடச் செய்வது, உண்ணும் உணவை ஜீரணிக்கக் கூடிய ஜீரண சக்தியைக் கொடுப்பது, ஹிருதயத் துடிப்புண்டாக்குவது, நுண் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் பலவிதமான் ரசங்களை உற்பத்தி செய்வது போன்ற அதி அற்புதகரமான வேலைகள் பிராண சக்தியால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதே பிராண சைதன்னியம் தான் ஜீவிகளுடைய ஜீவனாகவும் அந்தராத்மாவாகவும் குடிகொண்டிருக் கின்றது.
நரம்பு மண்டலங்கள் நாடி நரம்புகளில் இருக்கின்ற வாத, பித்த, கப தொஷங்ககளைச் சமப்படுத்தி அவைகளை நிலை தவறாமல் இயக்குதல், மனம், புத்தி, காயங்களை இணக்கிச் செயல் படுத்துவது போன்ற நுட்பமான கருமங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.
வெளி மனதின் விகாரங்கள் உணர்வுகளை எல்லாம் உள்மனம் வாங்கி அதற்குரிய சுக துக்கங்களை நாடி நரம்புகள் வழியாகச் சரீரம் முழுவதற்கும் அனுப்பி வைப்பதில் நரம்பு மண்டலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்படித்தான் நாம் சுக துக்கங்களை உணர்ந்து கொள்ளு கிறோம்.
ஆசனம், நாடி, சுத்திப் பிராணாயமம், கும்பபகப் பிராணாயாமம், பந்தனம், கிரியைகள் போன்றவை ஹட யோகத்தின் அதிமுக்கியமான பகுதிகள்.
சாஸ்திர ரீதியான ஆசனங்கள் எண்பத்திநான்கு. இவைகள் சரீரத்திற்கும் மனத்திற்கும் உபாதிகளை உண்டாக்குகின்ற ராஜச தமோ குண தர்மங்ககளை நாசஞ் செய்து, சோம்பல், சோர்வு, தடுமாற்றம், சந்தேகம், சஞ்சலம் போன்றவைகளை நீக்கி மனத்திற்கு ஸ்திரத் தன்மையையும், சரீரத்த்ற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.
பிரதான பிராணாயாமங்கள் எட்டு. அவைகள் சூரிய பேதனம், உஜ்ஜாயி, சீல்க்காரி, சீதலி, பஸ்திரிகா, பிராமரி, மூர்ச்சை, ப்ளாவினி, என்பனவைகளாகும்.
இந்த எட்டு வித பிராணாயாமத்தால் வியாதிகள் குணமடைவதுடன் நாடி நரம்புகளிலிருக்கின்ற கொழுப்பையும் கரைத்துச் சுவாசத்தை முழுச் சரீரத்திலும் தட்டுத் தடை இல்லாமல் ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நேரம் வரை சுவாச பந்தனம் செய்வதற்கும் இதனால் முடியும்.
முத்திரைகள் பத்து. அவைகள் மகாமுத்திரை, மகாபந்தம், மகாவேதம், கேசரி, உட்டியாணா, மூலபந்தம், ஜாலந்திர பந்தம், விபரீத கரணி, வச்சிரோளி, சக்தி சாலனம் என்பவைகள்.
இந்தப் பத்து முத்திரைகளையும் குரு சந்நிதானத்தில் தக்க சில நோன்புகளுடனிருந்து சாதனை செய்து சித்தி யடைந்தால் சப்த தாதுக்கள் சுத்திகரிக்கப்பட்டு பெரும் பயன் பெறலாம்.
அதி நுட்பமான சித்திகளால் சகஸ்ராதாரக் கதவுகள் திறந்து அதிலிருக்கின்ற ஞானானந்த ரசத்தைச் சரீரத்திலும் ஜீவனிலும் ஒழுகச் செய்து ஜீவிதம் ஆனந்தமாகித் திகழ்கின்றது.
இப்படி தேகத்திற்கும், தேகிக்கும் பரம சுகத்தைத் தருவதாகிய ஹட யோக வித்தைகள் நமது பூர்வீக சொத்தாகவே இருக்கையில் அவற்றை அறிவதிலும் அப்பியாசிப்பதிலும் உதாசீனர்களாயிருப்பது ஏனோ?
யானையை அங்குசத்தால் மடக்குவது போன்று தொல்லைகளைச் சிருஷ்டிக்கும் மனதைப் பக்தி என்ற அங்குசத்தால் மடக்கிச் சுயாதீனப் படுத்தும் பக்தன், சமுத்திர அலைகளுக் கிடையில் மிகச் சந்தோஷமாக நீந்திக் கரையேறும் சிறந்த ஒரு நீச்சல் வீரனைப் போன்று இம் மண்ணுலக வால்க்கையின் வெப்பம், குளிரால் தாக்கப் பட்டாமல் நீந்திக் கரையேறுகின்றான்.
ஆகையால் பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களைப் பாண்டவர்களைப் போன்று நிலை குலையாமல் உறுதிப் படுத்தினால் இப் பூவுலகப் பிரச்சனைகள் எல்லாம் பக்தனுக்கு அர்ச்சனை மலர்கள் போன்றவையாகவே இருக்கும்.
பாரத மகா காவியம் போன்ற நுல்களைக் கற்றறிவதால் மாத்திரம் பெரும் பயன் என்ன?
பாரதக் கதையை நன்றாகக் கற்றறிந்த ஏழைப் பிராமணன் இருந்தான்.பெருத்த குடும்பம். வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிராமணனுக்கு வறுமையைப் போக்குவதற்கு அவனுடைய மனைவி ஒரு ஆலோசனை கூறினாள்.
"மிகவும் நல்லவராகிய நம் மன்னர் ஒரு பெரும் புலவர் சபையை வைத்திருக்கிறார். நீக்கள் மன்னரிடம் போய் புலவர் சபையில் பாரதக் கதையை விரிவுரை செய்வதற் குரிய ஒரு சந்தர்ப்பத்தைக் கேளுங்கள். கிடைத்தால் அதற் கொரு மானியத்தையும் தந்து கொண்டிருப்பார். அதைக் கொண்டு நாம் சீவிக்கலாம்" என்று கூறிப் பிராமணனை வழியனுப்பினாள்.
பிராமணன் மனனரிடத்தில் சென்று வந்த நோக்கத்தைத் தெரிவித்தான். மன்னர் அதற்கு சம்மதித்தார். ஆனால் அதற்கு முன் பாரதக் கதையை நன்கு மீண்டும் படித்து விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டான்.
ஏகாந்த இடத்திற்குச் சென்று தனிமையிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினான் அந்தப் பிராமணன்.
நாளடைவில் பாரதக் கதையின் உட்பொருளில் இரண்டறக் கலந்து குடும்பம், வறுமை யாவற்றையும் மறக்கலாயினான்.
இறுதியில் இவ் வையக ஆசைகளெல்லாம் பிராமணனை விட்டு அழிந்தொழிந்தன.மாசு படியாத இறையின்பத்தில் லித்தான்.
கற்ற ஞானம் வாழ்வாக மலரும் போதுதான் கற்றதனால் பலன் ஏற்படும்.
இப்பிரபஞ்ச்சத்தைப் பந்தாக்கி விளையாடிக் கொண்டி ருக்கும் இறைவனுடைய திருவிளையாடலை ஞானானுபூதியினால் உணர்ந்தவர்களுக்கு இவ்வியக வாழ்வு பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டு.
பேராசையால் மத யானைகள் போன்று கலகஞ் செய்து திரியும் மனிதர்கள், கற்றவைகளில் நல்லவற்றை ஜீவித மயமாக்கினால் இந்த உலகம் ஆனந்த மயமாயிருக்கும்.
யோக மார்க்கம்:
மனித ஜென்மத்தைக் கடைத்தேற்றி எடுப்பதற்கு அநேக யோக மார்க்கங்கள் இருக்கின்றன.அதில் ஹட யோகம் பிரசித்தமானது. ஹடயோகம் சரீர மன சாஸ்திரங்களுடைய ஒரு சபூர்ண ஞானக் களஞ்சியம்.
ஹட யோகம் முக் கரணங்களிலிருக்கின்ற மலங்களை நீக்கி ஞான மார்க்கத்தி தடையின்றி சஞ்சாரம் செய்வதற்குத் தகுதி உடையவராக்கித் திகழ்வதுதான் இதன் அந்தரங்க நோக்கம்.
எனினும் ஞானயோக மார்க்கங்களைக் கடைப் பிடித்தொழு காதவரும் சரீர மன சுத்திக்கு மாத்திரம் பிரயோசனப் படக்கூடிய பகுதிகளை அப்பியாசித்து சுகமடைவதற்கும் தடையேதுமில்லை.
இதன் ஆரம்பப் பயிற்சிகள் ஒவ்வொருவருக்குப் போதிய மன வலிமையையும் தேகாரோக்கியத்தையும் கொடுக்கத் தக்கது.
தீர்க்காயுள், நோயற்ற வாழ்க்கை, மனச்சாந்தி முதலியவற்றை விரும்புகிறவர்கள் மூப்பு, பிணி, ஆண், பெண் வித்தியாச மில்லாமல் நோக்கத்திற்குரிய சாதனைகளைச் செய்து சுகமாய் வாழலாம்.
ஹட யோகம்:
"ஹ" என்றால் இட கலையில் (இடது நாசியில்) ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தையும், "ட" என்றால் பிங்கலை என்ற வலது நாசியில் ஓடிக் கொண்டிருக்கின்ற சுவாசத்தையும் குறிக்கின்றன.இடகலை பிங்கலையை ஒன்று சேர்த்து இணைப்பதற் குரிய யோக மார்க்கத்திற்குக் ஹடயோகம் என்று பெயர்.
வலது இடது கலையில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் சுவாசத்தை பிராணாயாமத்தால் ஜடராக்கினியுடன் சேர்த்து மூலாதார பத்மத்தில் உரக்க நிலையில் கிடக்கும் குண்டலினி என்ற மகா சக்தியைத் தட்டி உணர்த்தி, முது கெலும்பிலி ருக்கும் சுழுமுனைத் துவாரம் வழியாக உச்சியிலிருக்கும் பிரமாந்திர வாசலில் ஏற்றி நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் பிரமாந்திர வாசல் திறக்கப் படும். இது திறந்த பின், பகிர்முக மனம் அல்லது வெளிமனம் அடங்கி, அந்தர்முக மனம் (உள்மனம்) பிரகாசிக்கத் தொடங்கும்.
அந்தர்முக மனப் பிரகாசத்தால் சமாதி என்றொரு அவஸ்தை மூலமாக ஞானம் சித்திக்கிறது.
இந்த இறுதி வைபவத்தை நோக்கித்தான் மனிதனிலிருந்து பிராணிகளீறாக வாழ்க்கை என்ற யாத்திரையைச் செய்து கொண்டிருக்கின்றன.
உயிர்ச் சக்தி:
சரீரத்தில் அதி பிரதான பகுதி சுவாசம். பரிபாஷையில் இதைக் கலையென்றும் சரமென்றும் கூறுவார்கள்.உடம்பில் ஒரு சில நிமிடங்கள் சுவாசங்கள் ஓடாதிருந்தால் தேகம் உயிரற்று விடுவதால் உயிச்சக்தி சுவாசத்தில் தான் தங்கி இருக்கின்றதென்பதை அறியலாம்.
சகல சராசரங்களும் இந்தப் பிரதான சக்தியால் இயக்கப்படுகின்றன.
தேகம் தனது இயக்கத்திற்குத் தேவையான பிராண சக்தியைப் பஞ்ச பூதங்களிலிருந்து பெறுகின்றது.
சரீரத்தில் பிராண சக்தி குறைந்தால் வியாதி வரும். நின்றால் மரணமும் சம்பவிக்கும்.
இரத்தத்தை ஓடச் செய்வது, உண்ணும் உணவை ஜீரணிக்கக் கூடிய ஜீரண சக்தியைக் கொடுப்பது, ஹிருதயத் துடிப்புண்டாக்குவது, நுண் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் பலவிதமான் ரசங்களை உற்பத்தி செய்வது போன்ற அதி அற்புதகரமான வேலைகள் பிராண சக்தியால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதே பிராண சைதன்னியம் தான் ஜீவிகளுடைய ஜீவனாகவும் அந்தராத்மாவாகவும் குடிகொண்டிருக் கின்றது.
நரம்பு மண்டலம்:
மனித சரீரத்தில் அநேகம் கரந்திகள் அல்லது நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன.நரம்பு மண்டலங்கள் நாடி நரம்புகளில் இருக்கின்ற வாத, பித்த, கப தொஷங்ககளைச் சமப்படுத்தி அவைகளை நிலை தவறாமல் இயக்குதல், மனம், புத்தி, காயங்களை இணக்கிச் செயல் படுத்துவது போன்ற நுட்பமான கருமங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.
வெளி மனதின் விகாரங்கள் உணர்வுகளை எல்லாம் உள்மனம் வாங்கி அதற்குரிய சுக துக்கங்களை நாடி நரம்புகள் வழியாகச் சரீரம் முழுவதற்கும் அனுப்பி வைப்பதில் நரம்பு மண்டலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்படித்தான் நாம் சுக துக்கங்களை உணர்ந்து கொள்ளு கிறோம்.
ஆசனம், நாடி, சுத்திப் பிராணாயமம், கும்பபகப் பிராணாயாமம், பந்தனம், கிரியைகள் போன்றவை ஹட யோகத்தின் அதிமுக்கியமான பகுதிகள்.
சாஸ்திர ரீதியான ஆசனங்கள் எண்பத்திநான்கு. இவைகள் சரீரத்திற்கும் மனத்திற்கும் உபாதிகளை உண்டாக்குகின்ற ராஜச தமோ குண தர்மங்ககளை நாசஞ் செய்து, சோம்பல், சோர்வு, தடுமாற்றம், சந்தேகம், சஞ்சலம் போன்றவைகளை நீக்கி மனத்திற்கு ஸ்திரத் தன்மையையும், சரீரத்த்ற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.
பிரதான பிராணாயாமங்கள் எட்டு. அவைகள் சூரிய பேதனம், உஜ்ஜாயி, சீல்க்காரி, சீதலி, பஸ்திரிகா, பிராமரி, மூர்ச்சை, ப்ளாவினி, என்பனவைகளாகும்.
இந்த எட்டு வித பிராணாயாமத்தால் வியாதிகள் குணமடைவதுடன் நாடி நரம்புகளிலிருக்கின்ற கொழுப்பையும் கரைத்துச் சுவாசத்தை முழுச் சரீரத்திலும் தட்டுத் தடை இல்லாமல் ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நேரம் வரை சுவாச பந்தனம் செய்வதற்கும் இதனால் முடியும்.
முத்திரைகள் பத்து. அவைகள் மகாமுத்திரை, மகாபந்தம், மகாவேதம், கேசரி, உட்டியாணா, மூலபந்தம், ஜாலந்திர பந்தம், விபரீத கரணி, வச்சிரோளி, சக்தி சாலனம் என்பவைகள்.
இந்தப் பத்து முத்திரைகளையும் குரு சந்நிதானத்தில் தக்க சில நோன்புகளுடனிருந்து சாதனை செய்து சித்தி யடைந்தால் சப்த தாதுக்கள் சுத்திகரிக்கப்பட்டு பெரும் பயன் பெறலாம்.
அதி நுட்பமான சித்திகளால் சகஸ்ராதாரக் கதவுகள் திறந்து அதிலிருக்கின்ற ஞானானந்த ரசத்தைச் சரீரத்திலும் ஜீவனிலும் ஒழுகச் செய்து ஜீவிதம் ஆனந்தமாகித் திகழ்கின்றது.
இப்படி தேகத்திற்கும், தேகிக்கும் பரம சுகத்தைத் தருவதாகிய ஹட யோக வித்தைகள் நமது பூர்வீக சொத்தாகவே இருக்கையில் அவற்றை அறிவதிலும் அப்பியாசிப்பதிலும் உதாசீனர்களாயிருப்பது ஏனோ?
அங்குசம்:
யானையை அங்குசத்தால் மடக்குவது போன்று தொல்லைகளைச் சிருஷ்டிக்கும் மனதைப் பக்தி என்ற அங்குசத்தால் மடக்கிச் சுயாதீனப் படுத்தும் பக்தன், சமுத்திர அலைகளுக் கிடையில் மிகச் சந்தோஷமாக நீந்திக் கரையேறும் சிறந்த ஒரு நீச்சல் வீரனைப் போன்று இம் மண்ணுலக வால்க்கையின் வெப்பம், குளிரால் தாக்கப் பட்டாமல் நீந்திக் கரையேறுகின்றான்.
ஆகையால் பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களைப் பாண்டவர்களைப் போன்று நிலை குலையாமல் உறுதிப் படுத்தினால் இப் பூவுலகப் பிரச்சனைகள் எல்லாம் பக்தனுக்கு அர்ச்சனை மலர்கள் போன்றவையாகவே இருக்கும்.
பாரத மகா காவியம் போன்ற நுல்களைக் கற்றறிவதால் மாத்திரம் பெரும் பயன் என்ன?
பாரதக் கதையை நன்றாகக் கற்றறிந்த ஏழைப் பிராமணன் இருந்தான்.பெருத்த குடும்பம். வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிராமணனுக்கு வறுமையைப் போக்குவதற்கு அவனுடைய மனைவி ஒரு ஆலோசனை கூறினாள்.
"மிகவும் நல்லவராகிய நம் மன்னர் ஒரு பெரும் புலவர் சபையை வைத்திருக்கிறார். நீக்கள் மன்னரிடம் போய் புலவர் சபையில் பாரதக் கதையை விரிவுரை செய்வதற் குரிய ஒரு சந்தர்ப்பத்தைக் கேளுங்கள். கிடைத்தால் அதற் கொரு மானியத்தையும் தந்து கொண்டிருப்பார். அதைக் கொண்டு நாம் சீவிக்கலாம்" என்று கூறிப் பிராமணனை வழியனுப்பினாள்.
பிராமணன் மனனரிடத்தில் சென்று வந்த நோக்கத்தைத் தெரிவித்தான். மன்னர் அதற்கு சம்மதித்தார். ஆனால் அதற்கு முன் பாரதக் கதையை நன்கு மீண்டும் படித்து விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டான்.
ஏகாந்த இடத்திற்குச் சென்று தனிமையிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினான் அந்தப் பிராமணன்.
நாளடைவில் பாரதக் கதையின் உட்பொருளில் இரண்டறக் கலந்து குடும்பம், வறுமை யாவற்றையும் மறக்கலாயினான்.
இறுதியில் இவ் வையக ஆசைகளெல்லாம் பிராமணனை விட்டு அழிந்தொழிந்தன.மாசு படியாத இறையின்பத்தில் லித்தான்.
கற்ற ஞானம் வாழ்வாக மலரும் போதுதான் கற்றதனால் பலன் ஏற்படும்.
இப்பிரபஞ்ச்சத்தைப் பந்தாக்கி விளையாடிக் கொண்டி ருக்கும் இறைவனுடைய திருவிளையாடலை ஞானானுபூதியினால் உணர்ந்தவர்களுக்கு இவ்வியக வாழ்வு பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டு.
பேராசையால் மத யானைகள் போன்று கலகஞ் செய்து திரியும் மனிதர்கள், கற்றவைகளில் நல்லவற்றை ஜீவித மயமாக்கினால் இந்த உலகம் ஆனந்த மயமாயிருக்கும்.
No comments:
Post a Comment