#ஞான மண்டலம்
சிறந்த ஒரு ஜீவித லட்சியம், ஈஸ்வர பக்தி, சரீர சுகம், மனக் கட்டுப்பாடு, நித்திய கருமங்களில் ஒழுங்கு, ஹிருதய சுத்தி, கரும சுத்தி, குடும்ப ஐக்கியம், இந்த எட்டும் ஒருவருடைய வாழ்க்கையில் அமையுமானால் அவருடைய வாழ்க்கையும் அமிர்தம் உண்டு வாழும் அமிர்த பக்ஷணிகள் போன்று அமிர்த மயமாய் இருக்கும்.
ஜீவகாருண்ணியம், எவரோடும் மரியாதையுடன் பழகுதல், தான தர்மங்கள் செய்தல், பொதுச் சேவைகளை பலேச்சை இல்லாமல் மனப்பூர்வமாகச் செய்தல், எக்காரணம் கொண்டும் அயலவரை வேருக்காதிருத்தல், சமுதாயத்தின் ஒரு பகுதிதான் நாங்களும் என்ற பாவனையுடன் வாழ்தல், அவசியமில்லாத விருந்துபசாரங்களில் குரவத்திர்காக பங்கு பற்றுவதைத் தவிர்த்து அத்தகைய விருந்துபசாரங் களைத் தாங்களும் செயாதிருத்தல், எந்தச் சூழ்நிலையி லும் பொறுமையா இழக்காமல் காரியமாற்றுதல், சூழ் நிலைகளின் நிர்ப்பந்தங்களுக்கு லக்ஷியமும் கொள்கையும் அடிமைப் பட்டுப் போகாத மனத் திடம், உலகத்தவர்களுடைய இகழ்ச்சி, புகழ்ச்சிகளுக்குச செவி சாய்க்காதிருத்தல், காரியம் செய்யும் முன் நிதானமாகப் பலமுறை சிந்தித்துத தெளிவுபடுத்திச் செய்தல், இயன்றளவு கடன் படாதிருப்பதும், படுவதாகில் தனது தகுதிக்குட்பட்டுப் பெறுதல்.
எப்பொழுதும் நல்லவர்களுடன் சவாசம் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்வதும், மற்றவர்களைக் குறை கூறுவதும், கண்டத்திலும் கேட்டதிலும் குறை குற்றங்களைப் பார்ப்பதும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நாணயமாக நடக்க வேண்டும். மனக் கொந்தளிப்பாயிருக்கும் பொழுது எந்த ஒரு காரியத்தையும் முடிவு செய்யாமலிருப்பதும், மற்றவர்களுடைய கஷ்ட நஷ்டங்களில் ஈவிரக்கத்துடன் நடந்து கொள்வதையும் கடைப் பிடிக்க வேண்டும். செய்யும் செயலின் பலாபலனை எண்ணியெண்ணிக் கொண்டிராமல் இறைவனையே தஞ்சமெனக் கொண்டு செயற்படுவதும், உதிக்கும் எண்ணங்கள் எதுவாயினும்சரி இறையுணர்வோடு கலந்து வருமலவிற்குத் தெய்வ பக்தியை ஆழமாக்க வேண்டும். இவைகளை அன்றாட வாழ்விற் கடைப்பிடித் தொழுகினால் நிஜமான மனச் சுகத்துடன் ஐஸ்வரியமாய் வாழலாம்.
ஒருவர் தனது சுய கருமங்களைச் சரிவரச் செய்வதற்கு சரீரம் அதி பிரதானமாய் இருப்பதால் அதனை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டும். சரீர சுகம் இல்லாதவர்களுடைய ஜீவிதம் கிலேச கரமாய் இருக்கும். உணவு, உறக்கம், தொழில், தேகப் பயிற்சி, மனப் பயிற்சி, இவைகளை ஒழுங்கு படுத்திச் செய்வதால் ஆரோக்கியமான நீடித்த ஆயுள் கிடைக்கும். மற்றைய தேகப் பயிற்சிகளை விட யோகாசனப் பயிற்சிகள் சிறேஷ்டமானவை. சரீரம், மனம், புத்தி, பிராணன் இவைகளைச் சுத்திகரித்து ஒன்றிணைந்து ஒழுங்காக இயங்கச் செய்வதற்கு இதற்கிணையான பயிற்சிகள் வேறெதுவுமில்லை. இது மனிதனில் இருக்கும் ஆற்றல் சக்தியை அதிகரிப்பிக்கும். ஒடுங்கியிருக்கும் சைதன்னிய சக்தி வெளியில் தோன்றிச் செய்யும் செயலுக்கு அபூர்வமான சக்தியளிக்கும் தனியாற்றல் யோகாசனங்களுக்குண்டு. இருக்கும் நோய்களைக் குணப்படுத்தி நோய்த் தடுப்புச் சக்திகளையும் கூட்டும். குறு மூலம் கற்றுச் செய்க.
உண்ணும் உணவுக்கும் மண உணர்விற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. மனச் சுகம்; சாந்தம்; சக்தி; நோய் தடுக்கும் சக்தி என்பன உண்ணும் உணவைப் பொறுத்து உள்ளன. இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, இரத்தோட்டம் என்பன சீராகச் செயற் படுவதற்கும் உணவு மிக முக்கிய காரணமாய் இருக்கின்றது. இத்தகைய பெரும் நன்மைகளுக்கு மற்றெல்லா உணவுகளையும் விடத் தாவர உணவு மிக விஷேசமானது. மத்தியான வேளையில் அரை வயிறு உணவினாலும், கார் பங்கு நீரினாலும், மீதிப் பாகம் காற்றினாலும் நிரப்பப் படுவதுதான் சீரான உணவு நியமம். தேகத்தில் இருக்கும் இயற்கையான சத்துக்களை வீண் விரயம் செய்யாமல் இருந்தால் குறைந்தளவு உணவினாலேயே நல்ல ஆரோக்கியமாய் இருக்கலாம். காலை மாலையில் மிகக் குறைந்தளவு உணவும் கூடுதல் நீரும் பருகுவது சிறந்த நன்மை பயக்கும்.
பசுவின் நெய், தேன், மோர், ரசம் இவைகளைத் தினசரி உணவில் அளவாகச் சேர்த்துக் கொண்டால் அநேக நன்மைகளைப் பெறலாம். பசுவின் நெய் நல்ல ஞாபக சக்தியைத் தரும். கிரகிக்கும் தன்மையை அதிகரிப்பிக்கும். புத்தி வளர்ச்சிக்கு விஷேசமானது. அன்றாடம் சரீரத்தில் சேரும் விஷக் கிருமிகளைக் கொல்லும். மண மகிழ்ச்சியை உண்டாக்கும். சாப்பிட்டுத் தன்மைக்குத் தக்கபடி ஒரு கரண்டிக்கு மேற்படாமல் மத்தியான உணவின் முதல் சாதத்தில் கலந்து உண்ணவும். நெய்யை அவ்வப்போது உருக்கி உபயோகிக்க வேண்டும்.
இதில் இரும்பு போன்ற அநேக உலோகச் சத்துக்கள் தாராளமாய் இருக்கின்றன. அனேக நோய்களைச் சுகப்படுத்தும் ஔஷதத் தன்மையுடையது. தேனில் போட்டு வைக்கப்படும் பொருட்கள் நீண்ட காலம் கேட்டுப் போகாமல் இருப்பதில் இருந்தே இதன் மகிமையைத் தெரிந்து கொள்ளலாம். பதினைந்து துளி எலுமிச்சம் பழம் பிழிந்து வடித்தெடுத்த சாற்றில் இரண்டு தேக்கரண்டி தேனைக் கலந்து இருவேளை பருகி வந்தால் ஹிருதய ரோகத்திற்கு நன்று. நாடித் துடிப்பைச் சீராக்கி விடும். காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையில் சிறிதளவு தேனை விட்டு நக்கிச் சாப்பிட்டு வந்தால் அனேக குடல் வியாதிகள் நீங்கும். நீரிற் கலந்தும் மற்றும் உணவுகளுடன் கலந்தும் சாப்பிடலாம். ஆத்ம சாதனைக்கு அனுகூலமானது.
வெண்ணெய்யை நீக்கி எடுத்த மோரை நீரில் கலந்து உணவின் கடைசிப் பகுதியில், உணவுடன் கலந்தோ அல்லது தனியாகவோ உபயோகித்து வந்தால் இரைப்பை ஒழுங்காக இயங்கும். தீபன சக்தியை உண்டாக்கும்.
தினசரி ரத்த நாளங்களிற் சேரும் கொழுப்பைக் கரைத்து, இரத்த ஓட்டத்தைச் சமப்படுத்தும். இரத்த அமுக்கம் வராது. கடைசி உணவுடன் கலந்தோ கலக்காமலோ உபயோகிக்கலாம். நெய், தேன், மோர், கீரை இவை நான்கும் இராக் காலங்களில் உண்பது நல்லதல்ல. முளை கட்டிய பாசிப் பயற்றைப் பச்சையாகவோ தேன் கலந்தோ பாவிப்பதும், எள்ளும் பேரீச்சம் பழமும் சேர்த்திடித்த உருண்டைகளை உண்டு வந்தால் அதிக போஷாக சத்தும் ஊட்டச் சத்தும் கிடைக்கும். கிழங்கு வகைகளை விடக் காய் பிஞ்சுகள் கூடுதலான சத்து நிறைந்தவை.
வாரம் ஒருமுறையாவது உச்சியிலிருந்து பாதம் வரை எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது சொல்லரிய நன்மைகளைத் தரும். போன்னாவரசுப் பூ அல்லது சமூலம் அவித்த நீரை நாள் தோறும் பருகி வந்தால் இரத்த விருத்தி உண்டாகும். தாகம் தணியும். நீரழிவு வியாதிகளுக்கு மிகவும் நன்று. தேக சாந்தியைத் தரும். இரவு படுக்கைக்குப் போகு முன் குளிர்ந்த ஜலத்தில் பாதங்களை நன்றாகக் கழுவிச சுத்தப் படுத்தித திரிபலாதி சூரணத்தை ஒரு கழஞ்சளவு சர்க்கரையிற் குழைத்துச் சாப்பிட்டுப் படுக்கவும். இது அனேக நோய்களைக் கண்டிக்கும். மல சோதனையைச் சரிப் படுத்தும். வாத பித்த கப தோஷங்களைத் தீர்த்து உழைச்சல், பிடிப்பு, வலிகள் ஒன்றுமில்லாமல் தேகம் சுகமாயிர்க்கும். எளிதான இம்முறைகளை அனுசரித்து வாழ்ந்தால் நோய்கள் குறைந்து நீடித்த ஆயுளுடன் சுகமே வாழலாம்.
எண்ணற்ற எண்ணங்களின் தாக்கத்தால் களைத்துப் போன மனம் தானாகவே மேற்கொள்ளும் ஒரு குறுகிய ஒய்வு காலந்தான் உறக்கம். எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை விட, எப்படி உறங்கியது என்பதுதான் முக்கியம். கனவுகளும் மன அலட்டலும் இல்லாமல் இருந்தால் குறைந்த நேர உறக்கம் போதுமானது. உறக்கத்தி இருந்து விழித்தால் புத்துணர்வும் அமைதியும் சந்தோஷமுந் தோன்றுமே ஆகில் அதுவே திருப்திகரமான நல்லுறக்கம்.
தொழில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. ஜன்ம வாசனைக் கேற்றவாறு எத்தகைய தொழிலாயினும் சரி அதனைச் சுய தர்மமாகவே ஏற்க வேண்டும். லாப நஷ்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொழிற் கடமைகளை அந்தரங்க சுத்தி, பொறுப்புணர்ச்சி, பலாபலனில் பற்றுதல் வைத்துப் பலகாமளிருத்தல் போன்ற நெறியான வழிகளைக் கடைப் பிடித்துச் செய்து வந்தால் எத தொழிலும் உத்தமமானதே யாகும்.
ஒரு குடும்பத்தின் சகல ஐஸ்வரியங்களும் அக் குடும்பத்தின் ஐக்கியத்தில் தங்கியிருக்கிறது. குடும்பத்தில் எள்ளளவேனும் பிளவிருக்குமேயானால் குடும்ப வளர்ச்சியும் சந்தோஷமும் குன்றிவிடும். முயற்சிகள் வீணாகும். சதா ஒரு சின்னப் போர்க்களம் போன்ற நிலை உருவாகும். நரக வேதனைதான் நித்திய அனுபவமாய் இருக்குமாகையால் இல்லற ஐக்கியத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பது அவசியம். பெண்கள் பெண்களுக்கு இருக்க வேண்டிய பெண்மைக் குணத்துடனும், ஆண்கள் ஆண்களுக்கு இருக்க வேண்டிய புருஷ தருமத்துடனும் குடும்பத்தை நடத்துவர்கலாகில் ஐக்கியம் நிலைக்கும். அவ்வப்போது இருக்கும் மனோபாவத்தை அன்னியோன்னியம் உணர்ந்து சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டால் குடும்பப் பிரச்சனைகள் ஒரு போதும் தோன்றா. சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடைமுறைகள் தெளிவாகவும் ஆத்மார்த்தமாகவும் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஐஸ்வரிய தேவதையை ஆகர்ஷணம் செய்தெடுக்க வேண்டியது வக்ஷ்சுமியின் பிரதி ரூபங்களாகிய பெண்கலாகையால் அவர்கள் மிகப் பொறுமையுடனும், களங்கமற்ற அன்புடனும், இருதய சுத்தியுடனும் எல்லாவற்றிலும் இணங்கியும் இணைந்தும் குடும்பத்தை நடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் சுகமும் திருப்தியும் ஸ்ரீதேவிகளாகிய பெண்களுடைய பாவன இருதயத்தில்தான் தங்கியிருப்பதாகையால் அவர்களைப் பூஜிக்கத் தக்கவர்களாகவே கருத வேண்டும். குடும்பம் முழுவதும் ஒரே லட்சியத்தின் கீழ் இணைவதுடன், நியாயமான முயற்சியாற் கிடைக்கும் ஊதியத்தில் பரிபூரண திருப்தியுடனும் வாழ வேண்டும். இவ்வாறான இல்லற தர்மத்துடன் வாழும் இல்லம் அஷ்ட ஐஸ்வரியங்களின் விளை நிலமாகவே இருக்கும். ஒரு நல்ல குருவின் துணியை நாடி வாழ்வது மிக நன்று.
குழந்தைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்றால் பெற்றோர்கள் நல்லவர்களாகவே வாழ வேண்டும். பூர்வ ஜென்ம வாசனைகள், பெற்றோர்களின் குண விஷேசங்கள், சகவாசம் இவை மூன்றும் சேர்ந்துதான் ஒருவருடைய வாழ்க்கை நிர்ணயிக்கப் படுகின்றது. இதைக் கருத்தில் வைத்துப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். திருத்த வேண்டிய இடத்தில் சாம, தான, பேத, தண்டங்களைக் கிரமமாயும் சாதூரியமாயும் உபயோகிக்க வேண்டும். அவசர புத்தியும் கோபமும் வளர்ப்பு முறையில் ஆகாது. வயதையும் பருவ வித்தியாசத்தையும் கருத்திற் கொண்டு அதற்கேற்ற முறையில் மிக நிதானமாகவும் கரிசனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் நல்ல சகவாசத்திற்குரிய சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். சரீர உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் உணவுகளைக் கொடுக்காமல் வளர்ப்பது நல்ல குணங்களை வளர்க்கும். எல்லாவற்றையும் விட ஒழுக்கந்தான் சிறந்ததென்ற கருத்தில் குழந்தைகளை வளர்ப்பது அதி முக்கியமானது.
குறைந்த பட்சம் காலையில் நாலு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் இருந்தபடி சிறிது நேரம் மானசீகமாக இறை வணக்கம் செய்க. செய்தபின் இரு நாசியிலும் ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தைக் கவனிக்குக. நாசியில் கைவைத்துப் பார்த்தால் ஒன்றில் கூடுதலாகவும் மற்றதில் குறைவாகவும் ஓடிக் கொண்டிருப்பதை அறியலாம். கூடுதலான சுவாசம் ஓடும் நாசியின் பக்கமிருக்கும் கன்னத்தில் அதே பக்கமிருக்கும் கையால் கொஞ்ச நேரம் மிருதுவாய்த் தடவிகே கொடுக்கவும். தடவி முடிந்த பின் அதே பக்கமிருக்கும் கால் பேரு விரலை நிலத்தில் ஊன்றி எழுந்து சென்று ஒரு கிண்ணம் குளிர்ந்த ஜலத்தைப் பருகவும். யோக ரகசியமாகிய இப் பெரும் கிரியை மனத்திலும் சரீரத்திலும் ஆச்சரியகரமான நற்பலனை விளைவிக்கும்.
சகல விக்கினங்களையும் தீர்த்துக் கடைமைகளில் வெற்றியைத் தரும். அதற்குப் பின் மலசல மோசனஞ் செய்து பல் துலக்கி யோகாசனப் பயிற்சிகள் செய்க.இது செய்ய முடியாதவர்கள் சிரசிலிருந்து பாதம் வரை ஒரே பாங்கில் சாவகாசமாய் உடலை நன்றாகத் தேய்த்து விடவும். குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள், வயோதிபர்கள் யோகாசனப் பயிற்சி பெற்றவர்களின் உபதேசப்படி செய்ய வேண்டும். ஆசனப் பயிற்சி முடிந்து ஐந்து நிமிடங்களுக்குப் பின் வழமையாய் குடிக்கும் ஏதேனும் பானங்களைக் குடித்துக் கொஞ்சம் ஓய்வாய் இருந்த பின் ஸ்நானம் செய்யவும். ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் ஈரச் சீலையால் துடைத்துச் சுத்தம் செய்து பூஜை அறைகளிருந்தால் அல்லது சுத்தமான வேறேதும் ஓரிடத்தில் அமர்ந்து இறை வலிபாடியற்றித் தகுதிக்கும் நேரத்திற்கும் தக்கபடி பிரணாயாமம், ஜெபம், தியானம் முதலியன செய்க. இவைகளை அவரவர்க ளுடைய குரு மூலம் கற்றுக் கொள்க.
சாதனைகள் முடிந்த பின் தன் தன் நித்திய கடமைகளைச் செய்யத் தொடங்கவும். மாலையிலும் நேரத்துக்குத் தக்க படி இறை வணக்கம், ஜெபம், தியானம் செய்க. ஜெபம், தியானம் செய்ய இயலாதவர்கள் தேவார திருவாசகங்கள் அல்லது பஜனைப் பாடல்களை மனமுருகிப் பாடி வழிபாடு செய்க. வழிபாடும் சாதனையும் எதுவாயினுஞ் சரி, செய்வது உங்களுடைய ஆத்மாவைத் தொடும் வண்ணம் மனமுருகிச் செய்க. தினசரிக் கடைமைகளின் போது அடிக்கடி இறைவனை நினைவு கூறுக. நாமத்தை மானசீகமாய் உச்சரிக்குக. படிப்படியாக வாழ்க்கையின் எல்லா வசங்களிலும் சதா இறைவனுடைய சிந்தனை சகஜமாய் வருமலவிற்குச் சிந்தனையை வளர்த்தேடுக்குக.
மெல்ல மெல்ல உங்களுடைய முக் கரணங்களையும் அது - மயமாக்கி விடுக்க. உங்களுடைய விசுவாசத்திற்கும் ஆறுதலுக்கும் இறைவனைத் தவிர வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லையென்ற போதத்துடன் அந்தத் திவ்ய சக்தியில் இணங்கிச் சேர்க்க. இவ்விதம் உங்களை நீங்களே உயத்திக் கொள்வீர்களாகில் எந்த ஒரு வாழ்க்கைத் தருமத்தின் கீழ் வாழ்வதாயினும், ஜாதக பலன் எவ்வாறிருந்த போதிலும் எல்லாம் அனுகூல சுகமுடையதாயமையும். இறுதியில் மாயா சக்தியின் கெடுபிடியில் இருந்து நீங்கி, முத்தராய்த் தொல்லைகளற்ற சாசுவதமான இன்பத்துடன் ஜீவித கருமங்களை முடிக்கலாம். சாதாரண வாழ்க்கைத் தருமங்களைப் புறக்கணிக்காத இந்த எளிதான ஜீவித கிரமங்களை அனுசரித்து வாழ்ந்து உங்களைத் தெய்வ தரிசனம் பெறுவதற்குத் தகுதி உடையவராக்கித் தீர்க்குக.
தேகப் பயிற்சி:

உணவு:

தேன்:

மோர்:
வெண்ணெய்யை நீக்கி எடுத்த மோரை நீரில் கலந்து உணவின் கடைசிப் பகுதியில், உணவுடன் கலந்தோ அல்லது தனியாகவோ உபயோகித்து வந்தால் இரைப்பை ஒழுங்காக இயங்கும். தீபன சக்தியை உண்டாக்கும்.
ரசம்:
தினசரி ரத்த நாளங்களிற் சேரும் கொழுப்பைக் கரைத்து, இரத்த ஓட்டத்தைச் சமப்படுத்தும். இரத்த அமுக்கம் வராது. கடைசி உணவுடன் கலந்தோ கலக்காமலோ உபயோகிக்கலாம். நெய், தேன், மோர், கீரை இவை நான்கும் இராக் காலங்களில் உண்பது நல்லதல்ல. முளை கட்டிய பாசிப் பயற்றைப் பச்சையாகவோ தேன் கலந்தோ பாவிப்பதும், எள்ளும் பேரீச்சம் பழமும் சேர்த்திடித்த உருண்டைகளை உண்டு வந்தால் அதிக போஷாக சத்தும் ஊட்டச் சத்தும் கிடைக்கும். கிழங்கு வகைகளை விடக் காய் பிஞ்சுகள் கூடுதலான சத்து நிறைந்தவை.
வாரம் ஒருமுறையாவது உச்சியிலிருந்து பாதம் வரை எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது சொல்லரிய நன்மைகளைத் தரும். போன்னாவரசுப் பூ அல்லது சமூலம் அவித்த நீரை நாள் தோறும் பருகி வந்தால் இரத்த விருத்தி உண்டாகும். தாகம் தணியும். நீரழிவு வியாதிகளுக்கு மிகவும் நன்று. தேக சாந்தியைத் தரும். இரவு படுக்கைக்குப் போகு முன் குளிர்ந்த ஜலத்தில் பாதங்களை நன்றாகக் கழுவிச சுத்தப் படுத்தித திரிபலாதி சூரணத்தை ஒரு கழஞ்சளவு சர்க்கரையிற் குழைத்துச் சாப்பிட்டுப் படுக்கவும். இது அனேக நோய்களைக் கண்டிக்கும். மல சோதனையைச் சரிப் படுத்தும். வாத பித்த கப தோஷங்களைத் தீர்த்து உழைச்சல், பிடிப்பு, வலிகள் ஒன்றுமில்லாமல் தேகம் சுகமாயிர்க்கும். எளிதான இம்முறைகளை அனுசரித்து வாழ்ந்தால் நோய்கள் குறைந்து நீடித்த ஆயுளுடன் சுகமே வாழலாம்.
உறக்கம்:
எண்ணற்ற எண்ணங்களின் தாக்கத்தால் களைத்துப் போன மனம் தானாகவே மேற்கொள்ளும் ஒரு குறுகிய ஒய்வு காலந்தான் உறக்கம். எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை விட, எப்படி உறங்கியது என்பதுதான் முக்கியம். கனவுகளும் மன அலட்டலும் இல்லாமல் இருந்தால் குறைந்த நேர உறக்கம் போதுமானது. உறக்கத்தி இருந்து விழித்தால் புத்துணர்வும் அமைதியும் சந்தோஷமுந் தோன்றுமே ஆகில் அதுவே திருப்திகரமான நல்லுறக்கம்.
தொழில்:
தொழில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. ஜன்ம வாசனைக் கேற்றவாறு எத்தகைய தொழிலாயினும் சரி அதனைச் சுய தர்மமாகவே ஏற்க வேண்டும். லாப நஷ்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொழிற் கடமைகளை அந்தரங்க சுத்தி, பொறுப்புணர்ச்சி, பலாபலனில் பற்றுதல் வைத்துப் பலகாமளிருத்தல் போன்ற நெறியான வழிகளைக் கடைப் பிடித்துச் செய்து வந்தால் எத தொழிலும் உத்தமமானதே யாகும்.
குடும்பம்:
ஒரு குடும்பத்தின் சகல ஐஸ்வரியங்களும் அக் குடும்பத்தின் ஐக்கியத்தில் தங்கியிருக்கிறது. குடும்பத்தில் எள்ளளவேனும் பிளவிருக்குமேயானால் குடும்ப வளர்ச்சியும் சந்தோஷமும் குன்றிவிடும். முயற்சிகள் வீணாகும். சதா ஒரு சின்னப் போர்க்களம் போன்ற நிலை உருவாகும். நரக வேதனைதான் நித்திய அனுபவமாய் இருக்குமாகையால் இல்லற ஐக்கியத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பது அவசியம். பெண்கள் பெண்களுக்கு இருக்க வேண்டிய பெண்மைக் குணத்துடனும், ஆண்கள் ஆண்களுக்கு இருக்க வேண்டிய புருஷ தருமத்துடனும் குடும்பத்தை நடத்துவர்கலாகில் ஐக்கியம் நிலைக்கும். அவ்வப்போது இருக்கும் மனோபாவத்தை அன்னியோன்னியம் உணர்ந்து சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டால் குடும்பப் பிரச்சனைகள் ஒரு போதும் தோன்றா. சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடைமுறைகள் தெளிவாகவும் ஆத்மார்த்தமாகவும் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஐஸ்வரிய தேவதையை ஆகர்ஷணம் செய்தெடுக்க வேண்டியது வக்ஷ்சுமியின் பிரதி ரூபங்களாகிய பெண்கலாகையால் அவர்கள் மிகப் பொறுமையுடனும், களங்கமற்ற அன்புடனும், இருதய சுத்தியுடனும் எல்லாவற்றிலும் இணங்கியும் இணைந்தும் குடும்பத்தை நடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் சுகமும் திருப்தியும் ஸ்ரீதேவிகளாகிய பெண்களுடைய பாவன இருதயத்தில்தான் தங்கியிருப்பதாகையால் அவர்களைப் பூஜிக்கத் தக்கவர்களாகவே கருத வேண்டும். குடும்பம் முழுவதும் ஒரே லட்சியத்தின் கீழ் இணைவதுடன், நியாயமான முயற்சியாற் கிடைக்கும் ஊதியத்தில் பரிபூரண திருப்தியுடனும் வாழ வேண்டும். இவ்வாறான இல்லற தர்மத்துடன் வாழும் இல்லம் அஷ்ட ஐஸ்வரியங்களின் விளை நிலமாகவே இருக்கும். ஒரு நல்ல குருவின் துணியை நாடி வாழ்வது மிக நன்று.
குழந்தைகள்:
குழந்தைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்றால் பெற்றோர்கள் நல்லவர்களாகவே வாழ வேண்டும். பூர்வ ஜென்ம வாசனைகள், பெற்றோர்களின் குண விஷேசங்கள், சகவாசம் இவை மூன்றும் சேர்ந்துதான் ஒருவருடைய வாழ்க்கை நிர்ணயிக்கப் படுகின்றது. இதைக் கருத்தில் வைத்துப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். திருத்த வேண்டிய இடத்தில் சாம, தான, பேத, தண்டங்களைக் கிரமமாயும் சாதூரியமாயும் உபயோகிக்க வேண்டும். அவசர புத்தியும் கோபமும் வளர்ப்பு முறையில் ஆகாது. வயதையும் பருவ வித்தியாசத்தையும் கருத்திற் கொண்டு அதற்கேற்ற முறையில் மிக நிதானமாகவும் கரிசனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் நல்ல சகவாசத்திற்குரிய சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். சரீர உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் உணவுகளைக் கொடுக்காமல் வளர்ப்பது நல்ல குணங்களை வளர்க்கும். எல்லாவற்றையும் விட ஒழுக்கந்தான் சிறந்ததென்ற கருத்தில் குழந்தைகளை வளர்ப்பது அதி முக்கியமானது.
தினசரி கருமங்கள்:
குறைந்த பட்சம் காலையில் நாலு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் இருந்தபடி சிறிது நேரம் மானசீகமாக இறை வணக்கம் செய்க. செய்தபின் இரு நாசியிலும் ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தைக் கவனிக்குக. நாசியில் கைவைத்துப் பார்த்தால் ஒன்றில் கூடுதலாகவும் மற்றதில் குறைவாகவும் ஓடிக் கொண்டிருப்பதை அறியலாம். கூடுதலான சுவாசம் ஓடும் நாசியின் பக்கமிருக்கும் கன்னத்தில் அதே பக்கமிருக்கும் கையால் கொஞ்ச நேரம் மிருதுவாய்த் தடவிகே கொடுக்கவும். தடவி முடிந்த பின் அதே பக்கமிருக்கும் கால் பேரு விரலை நிலத்தில் ஊன்றி எழுந்து சென்று ஒரு கிண்ணம் குளிர்ந்த ஜலத்தைப் பருகவும். யோக ரகசியமாகிய இப் பெரும் கிரியை மனத்திலும் சரீரத்திலும் ஆச்சரியகரமான நற்பலனை விளைவிக்கும்.
சகல விக்கினங்களையும் தீர்த்துக் கடைமைகளில் வெற்றியைத் தரும். அதற்குப் பின் மலசல மோசனஞ் செய்து பல் துலக்கி யோகாசனப் பயிற்சிகள் செய்க.இது செய்ய முடியாதவர்கள் சிரசிலிருந்து பாதம் வரை ஒரே பாங்கில் சாவகாசமாய் உடலை நன்றாகத் தேய்த்து விடவும். குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள், வயோதிபர்கள் யோகாசனப் பயிற்சி பெற்றவர்களின் உபதேசப்படி செய்ய வேண்டும். ஆசனப் பயிற்சி முடிந்து ஐந்து நிமிடங்களுக்குப் பின் வழமையாய் குடிக்கும் ஏதேனும் பானங்களைக் குடித்துக் கொஞ்சம் ஓய்வாய் இருந்த பின் ஸ்நானம் செய்யவும். ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் ஈரச் சீலையால் துடைத்துச் சுத்தம் செய்து பூஜை அறைகளிருந்தால் அல்லது சுத்தமான வேறேதும் ஓரிடத்தில் அமர்ந்து இறை வலிபாடியற்றித் தகுதிக்கும் நேரத்திற்கும் தக்கபடி பிரணாயாமம், ஜெபம், தியானம் முதலியன செய்க. இவைகளை அவரவர்க ளுடைய குரு மூலம் கற்றுக் கொள்க.
சாதனைகள் முடிந்த பின் தன் தன் நித்திய கடமைகளைச் செய்யத் தொடங்கவும். மாலையிலும் நேரத்துக்குத் தக்க படி இறை வணக்கம், ஜெபம், தியானம் செய்க. ஜெபம், தியானம் செய்ய இயலாதவர்கள் தேவார திருவாசகங்கள் அல்லது பஜனைப் பாடல்களை மனமுருகிப் பாடி வழிபாடு செய்க. வழிபாடும் சாதனையும் எதுவாயினுஞ் சரி, செய்வது உங்களுடைய ஆத்மாவைத் தொடும் வண்ணம் மனமுருகிச் செய்க. தினசரிக் கடைமைகளின் போது அடிக்கடி இறைவனை நினைவு கூறுக. நாமத்தை மானசீகமாய் உச்சரிக்குக. படிப்படியாக வாழ்க்கையின் எல்லா வசங்களிலும் சதா இறைவனுடைய சிந்தனை சகஜமாய் வருமலவிற்குச் சிந்தனையை வளர்த்தேடுக்குக.
மெல்ல மெல்ல உங்களுடைய முக் கரணங்களையும் அது - மயமாக்கி விடுக்க. உங்களுடைய விசுவாசத்திற்கும் ஆறுதலுக்கும் இறைவனைத் தவிர வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லையென்ற போதத்துடன் அந்தத் திவ்ய சக்தியில் இணங்கிச் சேர்க்க. இவ்விதம் உங்களை நீங்களே உயத்திக் கொள்வீர்களாகில் எந்த ஒரு வாழ்க்கைத் தருமத்தின் கீழ் வாழ்வதாயினும், ஜாதக பலன் எவ்வாறிருந்த போதிலும் எல்லாம் அனுகூல சுகமுடையதாயமையும். இறுதியில் மாயா சக்தியின் கெடுபிடியில் இருந்து நீங்கி, முத்தராய்த் தொல்லைகளற்ற சாசுவதமான இன்பத்துடன் ஜீவித கருமங்களை முடிக்கலாம். சாதாரண வாழ்க்கைத் தருமங்களைப் புறக்கணிக்காத இந்த எளிதான ஜீவித கிரமங்களை அனுசரித்து வாழ்ந்து உங்களைத் தெய்வ தரிசனம் பெறுவதற்குத் தகுதி உடையவராக்கித் தீர்க்குக.
No comments:
Post a Comment