Sunday 1 February 2015

#ஞான மண்டலம் கதிர்காம க்ஷேத்திரம்


#ஞான மண்டலம் 

கதிர்காம க்ஷேத்திரம் - 1


வடக்கே இமயம் தொடக்கம் தெற்கே மாத்தறை வரையில் இருக்கின்ற அநேக லட்சம் பக்தர்களை அதிசயிக்கத் தக்க முறையில் கவர்ந்து கொண்டிருக்கின்ற கதிர்காம க்ஷேத்திரம் வழமையான ஆலய அமைப்புக்கும் நியமங்களுக்கும் அப்பாற்பட்டது.

அங்கு ஆகம முறைப்படி அமைக்கப் பட்ட ஆலயமும், விக்ரமும், கோபுரமும் இல்லை. வெறும் அம்பல உருவத்தில் தோற்றமளிக்கின்ற ஆலய மண்டபத்தில் முருகனுடைய திருவுருவம் வரையப் பட்ட திரைச் சீலை தொங்க விடப் பட்டிருக்கிறது.

இதற்கு மேல் முருக பக்தர்களுடைய மனம் கவரக் கூடிய வேறெதுவும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இரகசியம் என்ன?


வழிபடுகிரவர்க்ளுடைய  மனம் பக்திப் பரவசமடைவதற்கு யாதொரு வெளிக் கவர்ச்சியும் இல்லாத இத் தளத்திற்கு பக்தர்கள் தினசரி திரளாகத திரண்டு சென்று மெய் மறந்த நிலையில் வழிபாடியற்றி வருவதின் இரகசியம் என்ன?

பார்த்து வழிபடுவதற்குரிய மூலஸ்தான திருவுருவமும் பூஜா விதானங்களும் இல்லாத இதக் கதிர்காம முருகனின் அம்பல முன்றில் பாமரனும் ஆண்டியும் அரசனும் முருகா! முருகா!! என்ற அற்புத நாமத்தை இச்சரித்தவாறு தம்மை மறந்த நிலையில் வலிபாடியற்றும் தெய்வீகக் காட்சியை கதிர் காம சன்னிதானத்தைத் தவிர வேறெங்கிலும் காண முடியாது.

பக்தர்களுக்கு பக்தி நெறியைப் பற்றிய ஒரு பேருண்மை இங்கு விளங்குகின்றது. பெரும் கோபுரங்களும் மகா மண்டபங்களுமல்ல இறைவன் வேண்டுவது.

பக்தர்களுடைய தூய்மையான இருதயம்தான் அவன் வேண்டுவது. மனிதர்களுடைய மேல் மனதில் இருக்கும் வேற்றுமைகளும், வெறுப்பும், விரக்தியும் எல்லாம் முருகன் சந்நிதியில் ஒடுங்கிவிடுகின்றன.


முத்துலிங்க சுவாமி:


ஆதி காலத்தில் கதிர்காம மலைச் சாரலைச் சார்ந்த வனாந்தரத்தில் தபோதனர்கள் தபம் இயற்றுவதற்கு அனுகூலமான அருட்பொழிவிருன்தது. பல தேசங்களைச் சேர்ந்த யோகிகள், முனிவர்கள் இங்கு வந்து பர்ணசாலை களை அமைத்து தபமியற்றினார்கள்.

அவர்களிடையில் மகாசித்திகள் பெற்ற முத்துலிங்க சுவாமிகள் என்ற பெரும் மகான் பிற்காலத்தில் வந்து சேர்ந்தார்.

தபோவனத்தில் உயர்ந்தெழுந்த தபச்சுவாளைச் சக்தியை முத்துலிங்க சுவாமிகள் சண்முக சக்கரத்தில் ஆவகானம் செய்து, இன்று காணும் ஆலயம் இருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இந்த இடம்தான் மகா மகிமை பொருந்திய மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே அமையப் பெற்ற கதிர்காம க்ஷேத்திரமாகும்.

பாத யாத்திரை:


பக்தர்கள் பாத யாத்திரையாகச் சென்று ஆலய தரிசனம் செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

ஏனைய வழிகளில் சென்று வழிபடுபவர்களை விடப் பாத யாத்திரையில் செல்கின்ற பக்தர்களுக்கு அழியாத பல தெய்வானுபவங்கள் பிரத்தியட்சப் படுகின்றன. பாரத நாட்டிலும் ஈழ நாட்டிலும் நடைபெறுகின்ற பாத யாத்திரைகளில் இலங்கையின் வட பகுதியிலிருந்து கரை ஓரமாக இரண்டு மாத காலம் யாத்திரை செய்து கதிர்காம சந்நிதியை அடையும் பாத யாத்திரை மிகவும் சிறப்புடையது.

இவ்வளவு நீண்ட காலப் பாத யாத்திரை வேறெங்கும் நடை பெறுவதில்லை. பக்தர்களுடைய அகம்புற மலங்களைக் கசக்கிப் பிழிந்தெறியும் இந்தப் புனித யாத்திரைக்கு ஈடு இணையான யாத்திரை வேறெதுவுமில்லை.

இந்த யாத்திரையில் பாணமையிலிருந்து கதிர்காம மாணிக்க கங்கைக் கரை வரையிலும் நடை பெறுகின்ற பாத யாத்திரை முருகனடிமைகளுக்கு கடும் ஆத்மா சோதனைக் குரிய தொன்றாகும்

பாணமையிலிருந்து முருகனுடைய காணிக்கைப் பொருளடங்கிய அடப்பத்தைச் சிரசில் தாங்கிக் கொண்டு, ஓயாமல் திருமுருக நாமத்தை உச்சரித்தபடி சந்நியாசி மலை உகந்தை, வாகரவெட்டை, நாவல்மடு, கூமுனை, வியாளை, கட்டகமம் முதலிய பொருள் செறிந்த பெயருடைய வனப் பிரதேசங்களைக் கடந்து கதிர்காமக் கந்தனை செரடைகின்றனர்.

கொடூரமான வன விலங்குகளுடைய பெரும் உபத்திரவம் நிறைந்த இப்பிரதேசம் சுமார் எழுபது மைல் தூரமுடையது. இங்குதான் யாத்திரை செய்பவர்களுடைய பக்தி விசுவாசங்களைச் சோதனை செய்கின்ற அற்புத சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு நீடிக்கின்ற இந்த யாத்திரைதான், யதார்த்தமான பாத யாத்திரை. இந்த நாட்களில் அடியார்களுக்குக் கிட்டுகின்ற தெய்வா னுபவங்கள் ஆனந்தம்.

நடுக் காட்டில் எதிர்படும் காட்டு மிருகங்களின் தொல்லைகள், சில சந்தர்ப்பங்களில் பெரும் மழை, பெரும் புயல், காட்டில் திசை மாறிச் செல்லுதல், நோய்வாய்ப் படுத்தல் போன்ற அபாயங்களில் இருந்து ஸ்ரீ முருகன் தோன்றாத் துணையாய் நின்று தன் அடியார்களை எவ்வாறு பாதுகாக்கிறான் என்பது வர்ணனைக்கு அடங்காது.

யாத்திரையின் பல கட்டங்களிலும் மனிதனுடைய சிறுமையையும், இறைவனுடைய பெருமையையும் உணர்த்தக் கூடிய பல சம்பவங்களை முருகன் நிகழ்த்திக் காட்டுகிறான்.

முருக தரிசனம்:


திரு முருகனுடைய கடும் சோதனைகளைச் சகித்தும் உணர்ந்தும் வழித் துணையாய் வருகின்ற முருகனுடைய திவ்விய சக்திகளைக் கண்டு களித்தும் யாத்திரிகர் கூட்டம் கதிர்காம சந்நிதியை அடைகின்றது.

இரண்டு மாத காலம் தொடர்ந்து செய்த தவ யோக பாத யாத்திரையின் முடிவில் வினைப் பயன் தீர்ந்த உணர்வுடன் புது ஜென்மங்களாய்க் கதிர்காம க்ஷேத்திர சந்நிதியில் முருக தரிசனம் செய்கின்றது.

No comments: