தேவனைத் தொழுதேன் மனவேதனை அகல  
நாதனைத் தொழுதேன் நரவேதனை அகல 
ஆர்தனைத் தொழுதென் ஆரிடம் அழுதென்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?
மனதிலோ கவலை உடலிலோ முதுமை 
அறிவிலோ அவலம் ஆத்மாவின் சபலம் 
தனதில்லா பொருளை தனதென்றலையும்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?
உறவினைப் பகையென் றுணர்ந்த பின்னாலே 
உறவினர் பகைவர்கள் உறவின் முன்னாலே 
கரவில்லா அன்பை காண்பதற்கில்லை என்று 
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?
நெடுவழிப் பயணம் நெருங்கிய மரணம் 
தருமொரு பாடம் சாதனையாக 
கருவறை உறவும் கசந்ததைக் கண்டு 
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?
அருள்ஜோதிச்சந்திரன்  10 /12 /2012
Subscribe to:
Post Comments (Atom)

 
 

No comments:
Post a Comment