Friday 7 August 2009

வாழ்வே இதுவென உணர்ந்தேன்.

வாழ்வே இதுவென உணர்ந்தேன்.



நலத்தை இழந்து பணத்தை சேர்த்து
நலத்தை மீட்க பணத்தை இழந்தேன்
இறப்பை மறந்து வாழ நினைத்து
இறக்கும் போது வாழ மறந்ததை உணர்ந்தேன்.

பள்ளிவாழ்க்கை முடித்து உயர்கல்விக்காக பறந்து
உயர்கல்விவாழ்வை முடித்து உழைப்புக்காக பறந்து
உழைக்கும்போது குழந்தை குடும்பமென்று பறந்து
உயிர்பறக்கும் நேரம் வாழ மறந்ததை உணர்ந்தேன்.

அன்னை தந்தை நிழலில் விளையாடித்திரிந்த காலம்
நண்பர் சுற்றமென்று உறவைத் தேடித்திரிந்த காலம்
இன்னும் வேணுமென்று பணத்தை ஓடிஉழைத்த காலம்
காலம்கடந்த ஞானம் நான் வாழ மறந்ததை உணர்ந்தேன்.

வாழ மறந்த உணர்வில் நான் வாட்டமுற்ற போது
வாழ்வு என்றால் என்ன என்ற தேடல் என்னுள் தோன்ற
தேடித் தேடித் தேர்ந்தேன் தேடல் இல்லா வாழ்வை
தேடலில்லை தேர்வுமில்லை வாழ்வே இதுவென உணர்ந்தேன்.

கெங்கார்ப்பணம் – கெங்கைதாசன். 01/08/09


1 comment:

அருள்ஜோதிச்சந்திரன் said...

Dear Jothie,
Your Gangaarpanam is
Beautiful but not meaningful
Your expression doesn’t tally with my experience
It doesn’t mean you are wrong
It simply means you haven’t found yet
இறக்கும் போது வாழ மறந்ததை உணர்ந்தேன்
உயிர்பறக்கும் நேரம் வாழ மறந்ததை உணர்ந்தேன்
காலம்கடந்த ஞானம் நான் வாழ மறந்ததை உணர்ந்தேன்
You are still alive but fail to feel alive
Do you want to enjoy the fulfilment of being alive?
தேடித் தேடித் தேர்ந்தேன் தேடல் இல்லா வாழ்வை
தேடலில்லை தேர்வுமில்லை வாழ்வே இதுவென உணர்ந்தேன்.
Life is not your choice but a gift from your creator
Life is not your choice but you have choices in your life
You have a choice to be blind or a choice to be awake
You have a choice to search and a choice to choose
You have a choice to listen to your heart; and/or
You have a choice to stay with your mind
You have a choice to choose fulfilment over emptiness
I recommend choose fulfilment and I can help you feel it
With love, Balan