Wednesday, 22 January 2014

மனக் கட்டுப்பாடு தியானத்திற்கு ...ஜே.கி.

நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக... என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் இப்போது நான் என்ன செய்ய...?பல வருடங்களாக பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது அவநம்பிக்கையோடு இருக்கிறேன்.

இது ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் கேட்ட கேள்வி.

அடிப்படையில் ஜே.கே. எந்தவிதமான மத சடங்குகளைப் பின்பற்றாதவர். கேள்விகள் மூலமே ‘உண்மை’யை அடைவதைப் பற்றி பேசியவர். அவர் பேச்சு ஒன்றும் ஃபார்முலா (Formula) அல்ல அப்படியே பின்பற்றி நீங்கள் அதை அடையலாம் என்று நினைக்க என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தவர். இவ்வளவு ஏன் மருந்துக்கு கூட புராணங்களிலிருந்து உதாரணம் சொல்லாதவர். ஏன் எனில் சொல்ல ஆரம்பித்தவுடன் மனம் அது சம்பந்தமாக இது வரை சேகரித்து வைத்த விஷயங்களுக்குப் பரவி அது ஒரு வட்டத்தை உருவாக்கி அதனுள்ளேயே சுற்றிக் கொண்டு வர ஆரம்பிக்கும்.

சரியான தியானம் என்பதற்கு ‘சுத்திகரிக்கப் பட்ட மனம்’ வேண்டும். அதற்கு காலியான மனம் அன்றி புதுப்பித்தல் என்பது சாத்தியமில்லை. காலியான மனம் இல்லாமல் ‘தொடர்ந்து கொண்டே’ இருக்கிற மனம் என்பது அழிவு. மனம் சும்மாவே ஏதாவது எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கும். எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மனம், அல்லது ஒவ்வொன்றாலும் பாதிக்கப்பட்ட மனம் அயற்சி அடைகிறது.

நினைவிருக்கட்டும். மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) எது எதெல்லாம் உங்கள் மனசை பாதிக்கிறது என்பதை அறிவது முக்கியம்.

இப்போது கொஞ்சம் படிப்படியாக ஆராய்ச்சி செய்யலாம். ‘மனசை’ பாதிக்கிறது என்கிறோம். அப்படியானால் மனம் ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

அது எதனால் ஆனது.? - பலவிதமான எண்ணங்களால் ஆனது.

அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை? – முரண்பாடுகள் கொண்ட எண்ணங்கள்.

எந்த ஒன்றை எடுத்துக் கொண்டாலும் சரி-தவறு, இப்படி-இல்லை அப்படி, வரும்-வராது, இதுவா இல்லை அதுவா – என்று பெரும்பாலும் இரட்டையாக எண்ணங்கள் இருந்தாலும் உண்மையில் இரட்டை மட்டுமல்ல அவைகள் பலவையாக இருக்கின்றன.

நினைவிருக்கட்டும். உங்கள் மனத்தை ஆராய்ச்சி செய்யும் போது இதுதான் சரி இதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களானால் அங்கே மேற்கொண்டு எதுவுமே இல்லை. அப்படி முடிவுக்கு வரவே முடியாது. சரி தவறு என்பது எப்போதுமே நாம் எதை, யாரை அல்லது எந்த குழுவை அல்லது எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறோம் என்ற அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம்.

இல்லை சார்! நான் அப்படி அல்ல...நியாயம்னா நியாயம்னு சொல்வேன் இல்லைன்னா இல்லை என்றால்... அந்த நியாயம் என்று சொல்வதும் ஒரு கொள்கையில் அடிப்படையில்தானே. ஏற்கனவே உங்களுக்கு கற்பிக்கப்பட்டவைகளின் அடிப்படையில் தானே!

இப்போது மறுபடி ஆராய்ச்சிக்கு வருவோம்.

இப்படி வேறு வேறு முரண்பாடான எண்ணங்களை ஒரு பொட்டலமாக கட்டி வைத்தால் அதுதான் உங்கள் மனம். இந்த முரண்பாடான எண்ணங்களில்- தேவையின் அடிப்படையில் அல்லது ஆசையின் அடிப்படையில்– எனக்கு இது வேண்டும். அது வேண்டாம் என்று தேர்ந்து எடுப்பதை ‘மனதை குவித்தல்’ (Concentration) என்கிறோம். அதாவது ஒன்று அல்லது ஒரு சில எண்ணங்களை தேர்வு செய்து கொண்டு-ஆசையின் அடிப்படையில் அதன்மீது ஆற்றலைக் குவித்தல் நடக்கிறது. இந்த மனம்குவித்தல் ஒரு வகையான கட்டுப்பாடே! அதாவது discipline தான். காலையில் எழுந்திரு! பூஜை பண்ணு. மந்திரம் ஜெபி. விழுந்து கும்பிடு போன்ற டிசிப்ளின் தான். மனம் குவித்தல் (Concentration) என்பது தியானம் ஆகாது.

நீங்கள் ஒன்றை தேர்ந்து எடுக்கிறீர்கள் என்றால் மற்றவைகளை நிராகரிக்கிறீர்கள் என்றே ஆகிறது. அப்போதே அங்கே (எங்கே உங்கள் மனத்தில்தான்) ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. A disciplined mind அதாவது கட்டுப்பாடுள்ள மனம் என்பது சுதந்திரமான மனமாகாது. ஒன்றை தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள். அதன்படி நடக்கிறீர்கள். இது ஒரு வகை பழக்கப்படுத்தல். அதனால் தேர்ந்து எடுக்காத மற்ற எண்ணங்கள் தொந்திரவு செய்ய ஆரம்பிக்க -நீங்கள் சுதந்திரமானவராக இல்லை. உங்கள் கொள்கைக்கு அடிமை. பழக்கப்படுத்தப்பட்ட எண்ணங்களுக்கு அடிமை.

மனிதர்களுக்கு அடிமையாயிருப்பது மட்டுமல்ல கொள்கைகளுக்கு அடிமையாய் இருப்பவனும் சுதந்திரமானவன் இல்லை. அப்படி இருப்பவனால் தியானம் என்பதை புரிந்துகொள்ளவே இயலாது.

ஆக...மனம் என்பது ஒரு பொட்டலம். எண்ணங்களால் ஆன பொட்டலம். அதை அவிழ்க்கிற இயல்புத்தன்மை Spontaneity வேண்டும். அப்போது என்ன நடக்கிறது எனில் இறுக்கமான தன்மை போய் இயல்புத்தன்மை (Spontaneity) வருகிறது. இந்த பொட்டலத்தை பிரிக்கிற நிலையில், அதாவது மனம் தன் எண்ணங்களால் கட்டுப்பட்டு இறுக்கமாய் இருக்கிற நிலையில் இருந்து தளர்ந்து விடுபடுகையில் - மனம் தன் ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்து எல்லாவகையான தன் இயல்புக்கு மாறான இந்த சமூகத்தின் சட்ட திட்டத்துக்கு மாறான அதுவரை சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் வெளியேற்றும்.

-அது என்ன 'இயல்புக்கு மாறான சமூகத்துக்கு எதிரான' என்றால் ‘இயல்புக்கு உட்பட்ட. சமூகத்துக்கு ஏதுவான எல்லாவற்றையும் தினசரி வாழ்வில் நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். வெளிப்படுத்தாத எண்ணங்கள் இந்த 'காலிசெய்தலின்போது வரும்'. அவை நீங்களே அறியாத எண்ணங்களாக இருக்கும்.

அதனால்தான் சொல்வார்கள். தியானம் செய்தால் வெளியே வருவது சாக்கடைதான். இதுநாள் வரை அவை உள்ளே இருந்தது.

அது சாக்கடை என்று நாம் ‘அழைப்பதே’ இந்த சமூகத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில்தான். மனசுக்கு சட்டதிட்டங்களே கிடையாது. அது எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கும்.

சாதுவான எண்ணங்கள் மட்டுமல்ல, குரூரமான எண்ணங்களும் கூட அங்கே ஆழ்மனதில் உண்டு. அமைதியானவை மட்டுமல்ல வக்கிரமானவைகளும் உண்டு. ஆழ்மனதில் ஆணோ பெண்ணோ ஒரு விலங்குதான்.

ஜியாக்ரபிக் சேனலில் வந்த ஒரு சிங்கங்களைப் பற்றிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு ஆண் சிங்கம் மூன்று பெண்சிங்கங்கள். அவைகளுக்குப் பிறந்த ஐந்து குட்டிச் சிங்கங்கள். எல்லா விலங்குகளும் குட்டிகளில் மிக அழகானவை. வேட்டை என்றால் என்ன என்றே அறியாத பருவம். ஒடி விளையாடிக் கொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் வேறு ஒரு ஆண்சிங்கம் அங்கே வந்துவிட்டது. இப்போது யார் ராஜா என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. உக்கிரமான போர். ஸ்லோமோஷனில் பிடரி மயிர் பறக்க பறக்க சண்டை. கடைசியில் அப்பா சிங்கம் தோற்றுவிட்டது. இப்போது வந்த சிங்கத்துக்கு மற்ற பெண்சிங்கங்களிடம் சண்டை. இந்த நாலும் சேர்ந்தாலும் வந்தவனை ஜெயிக்க முடியவில்லை. தோற்றதும் நடந்தது தான் க்ளைமாக்ஸ். புதிய ஆண்சிங்கம் அந்த ஐந்து குட்டிகளையும் ஒவ்வொன்றாக துரத்தி துரத்தி கடித்து குதறி கிழித்துப் போட்டது. இந்த நாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட கோபம்/ஆற்றல்/சக்தி/வெறி மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அவனும் விலங்குதான். அந்த வெறி வெளியே வர மனம் தன்னிடமுள்ள ஏதாவது காரணத்தை கருவியாக எடுத்துக் கொள்ள பயன்படுத்தும். ஏதாவது...அது மிகச் சிறிய காரணமேயில்லாத காரணமாக இருக்கும். அப்படி ஏதும் நேராமல் அதை தடுத்து வைத்திருப்பது. புத்தி.

புத்தி என்பது மனதின் ஒரு பகுதியே.

இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்... இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை 'பயிற்றுவிக்கப்பட்ட மனம்' என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை 'மனம்' என்றே அழைக்கிறோம்.

அப்படியானால் தியானத்திற்கு புத்தி தேவையில்லையா?
பகுதி 2-மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கி...

பகுதி 2-மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கி... நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை ...ஜே.கி.

இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே. வெகு அபூர்வமாகவே, வெகு வெகு அபூர்வமாகவே மனம் தன் தடத்தை விட்டு நிச்சலனமாக இருந்து பின்னர் வேறு தடத்தில் இருக்கும்போது இந்த வாழ்வில் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

மற்றபடி பழைய கள் புதிய மொந்தையில்தான். நீங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். அதில் உங்கள் ego வும் இருக்கிறது. ஏனெனில் நான் புதிய சிந்தனைகள் வருவது இல்லை என்றவுடன் நீங்கள் சிந்திக்கவேயில்லை என்றல்லவா கூறுகிறேன். அதனால் உங்கள் ego தூண்டப்பட்டு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒப்புக் கொள்ளாதது நல்லதுதான்.. ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை வந்துவிட்டது என்று அர்ததம் அப்போது அதற்கு மேல் தியானம் கிடையாது.

நீங்கள் உங்கள் மனதை பிரித்துப் பார்த்து அதன் மூலம் பழையவைகளை அறியலாம்.அதற்கு இனி வருகிற எண்ணங்களே உதவும். ஏனெனில் அவைகள் பழையவைகளின் சாயலிலேயே வரும்.

ஒரு ராஜா கச்சேரிக்குப் போனார். மிகப் பிரபலமான நல்ல வித்வானின் கச்சேரி. நல்ல கூட்டம். எல்லாரும் தலையை ஆட்டி ஆட்டி, தொடையில் தட்டி, சபாஷ் போட்டு கேட்டார்கள். கச்சேரி முடியப் போகும் தருவாயில் ராஜா ஒருத்தனை கூப்பிட்டு இவ்வளவு நேரம் பாடியும் கொஞ்சம் கூட களைப்படையாமல் அவர் இருக்காரு. நான் அப்பவேயிருந்து கவனிச்சேன். அவரு ஏதோ அடிக்கடி எடுத்து வாயில போட்டுக்கறாரே அது என்னன்னு கேட்டு நமக்கும் வாங்கி வை என்றார்.

ராஜாவின் மனநிலை உணவில் இருந்தது .அதைத்தான் கவனித்திருக்கிறார். நாமும் அப்படித்தான். நம் ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே வருகிற எண்ணங்கள் நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன.அதே தடத்தில் புதிதாக (!) வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா? .

ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன் என்றால்உங்கள் ஆழ்மனதை உங்களால் நேரடியாக அறியவே முடியாது. மறைமுகமாகவே அறியமுடியும்.

மறுபடியும் படியுங்கள்.

ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே ‘புதிதாக (!) வருகிற எண்ணங்கள்’ நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன அதே தடத்தில் வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை (ஏற்கனவே இருக்கிற எண்ணங்களின் தொகுப்பை) புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா?

சேகரிப்பவன் கவனமாக, ‘தேர்ந்து எடுக்காத தன்மையோடு' கூர்மையாக, வந்துகொண்டிருக்கிற எண்ணங்களை கவனிக்கும்போது நீங்கள் அறிந்த உங்கள் மேல் மனம், நீங்கள் அறியாத உங்கள் ஆழ்மனம் - அதன் அடுக்குகள் எல்லாம் விடுபட்டு வெளிவர ஆரம்பிக்கின்றன்.

எண்ணங்கள் எண்ணங்களே. அவை மேல்மன எண்ணங்களாக இருந்தால் என்ன? ஆழ்மன எண்ணங்களாக இருந்தால் என்ன?

ஜியாக்ரபிக் சானலில் ஒரு ஆவணப்படம். காட்டு எறும்புகளைப் பற்றியது. லட்சக் கணக்கில் ஊர்ந்து செல்லுகிறது. தடத்திலேயே. திடீரென்று கடும் மழை. காட்டாறு உருவாகி பெருக்கெடுத்து ஓட, இந்த எறும்புகள் சட்டென்று ஒன்றை ஒன்றை ஈர்த்துக் கொள்ள ஒரு எறும்புப் பந்து உருவாகிவிட, அந்த பந்து தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது. எண்ணங்கள் ஆழ்மனதில் இப்படித்தான் கட்டி தட்டிப் போய் இறுகிப் போய் இருக்கின்றன. அப்படி இருப்பதனால் அதை மனம் (ஆழ்'மனம்') என்கிறோம்.

தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது ‘தேர்ந்து எடுப்பதில்லை’. ஆகவே ஆழ்மனம் விடுபட்டு (எதனிடமிருந்து என்றால் தன் கட்டுகளிலிருந்தே விடுபட்டு) கனவுகளாக வருகின்றன.

கனவுகளில் லாஜிக் இருந்ததே கிடையாது. அது அப்படித்தான். ஆழ்மனதில் லாஜிக் என்பதே கிடையாது. வெறும் எண்ணங்களே. அங்கே சமூக கட்டுப்பாடுகளே கிடையாது. தனிமனிதனாக நீங்கள் உங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்த மாதிரி...அவை எட்டுதிசைகளிலும் ஒடுகிறமாதிரி இயங்கும்...நீங்கள் தேர்ந்து எடுக்கும் போது ஆழ்மனம் அடைபட்டுவிடுகிறது.

அப்படியானால் கனவின்போது தியானம் நடக்கிறதா என்று கேட்டால் அப்போது ‘கவனிப்பு (பிரக்ஞை)’ இல்லை. தியானத்திற்கு ‘தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். எண்ணங்களை கூர்ந்து கவனிக்கிற தன்மையும் வேண்டுமே! (Choiceless Awareness).

Choiceless – தேர்ந்து எடுக்காத தன்மை

Awareness – கவனித்தல் குறிக்கோள் இல்லாமல்.(பிரக்ஞை)

இந்த சுத்திகரிக்கப் பட்ட மனம் தேவையாய் இருக்கிறது தியானத்திற்கு. காலியான மனம் தேவை.

எனக்கு காலியான மனம் தேவை என்று பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால் போச்சு. அது தப்பாட்டம். ஏனெனில் ஒரு குறிக்கோளுடன் ஆரம்பிக்கிறீர்கள். ஆழ்மனம் விடுபட இயலாது. இது சரி, இது தவறு, இது அப்படி, இது இப்படி,இது வேண்டும்,இது வேண்டாம் என்று ஆரம்பிக்கிற மனம் -பிரித்துப் பார்க்கிற மனம்- அதையே பிடிப்பாகக் கொண்டுவிட Self reveleation நடப்பதில்லை. விடுபடுதல் நடக்காது.

மனதின் மேல் மட்டத்திலும் மட்டுமல்ல ஆழ்மனதிலும் தேர்ந்து எடுக்காமை நடக்க வேண்டும். மேல் மனம் கரைய கரைய ஆழ்மனமும் விடுபடுகிறது. அப்போது மேல் மனம் ஆழ்மனம் என்ற பாகுபாடே தேவைப்படாது. அது நம் தகவல் தொடர்புக்காக நாம் பிரித்து வைத்துக் கொண்டது. கட்டி தட்டிப் போனது ஆழ்மனம், அலைந்து கொண்டே இருப்பது மேல்மனம் என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டோம். (ஆழ்மனமே மேல் மனதின் அலைச்சலுக்கு ஒரு காரணம் என்றாலும்)

இப்படியான எண்ணங்களை கவனித்தல் நடக்கும்போது நாம்கடந்தகாலத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறோம். இதில் நாம்என்று நான் மஞ்சள் கலரில் எழுதியிருப்பதே கடந்தகால எண்ணங்களின் பொட்டலம் தானே. ஆக கடந்தகாலமே அதிலிருந்து விடுபடுகிறது. கடந்தகாலமே தன்னிலிருந்து விடுபடுகிறது.

குழப்பமாயிருக்கிறதா? அது நல்லதுதான்.

அது சரி. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை அடக்கு என்றெல்லாம் புத்தர் சொன்னார். துறவிகள் எல்லாம் சொன்னார்களே என்றால் ஆசை என்று வந்தவுடன் 'தேர்ந்து எடுக்கிறீர்கள்'. எனக்கு அது வேண்டும் என்று. அப்போது 'எது வேண்டாம்' என்ற எண்ணமும் வருகிறது.

இந்த இரட்டைத் தன்மை எண்ணங்களின் பிறவிக் குணம். இரட்டை இரட்டையாகவே வரும். தேர்ந்து எடுக்க ஆரம்பித்ததுமே மனம் (இதுவரை சேகரிக்கப்பட்ட எண்ணங்களின் பொட்டலம்) தேர்ந்து எடுக்கப்பட்ட தடத்தில் அதாவது ஆசையின் பாதையில் pattern ல் போக ஆரம்பிக்கிறது. அதனால் சொன்னார்கள் ஆசையே துன்பத்திற்கு காரணம்.

ஆசை மட்டுமல்ல ஒரு முடிவு எடுத்து தீர்மானமாக நடை போடுவதும் ஆழ்மனம் (இறுகி கட்டி தட்டிப் போன எண்ணங்களால் ஆனது) தன்னிலிருந்து விடுபட தடையாய் இருக்கும். Will power என்பது ஒரு வகை ஆசையே!

ஆக இந்த விடுபடல் இல்லாமல் தியானம் என்பதோ ஜே.கே சொல்கிற ‘உண்மையை அறிதல்’ என்பதோ சாத்தியமேயில்லை.

சரி, முயற்சியின் மூலம் இதை அடையலாமா என்றால் முயற்சி என்றதும் எந்த திசையில் போவது என்ற கேள்வி வருகிறது. அப்போதே நீங்கள் தேர்ந்து எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போதே மனம் தன்னை விடுவித்துக் கொள்ள தடை ஏற்பட்டுவிடுகிறது.

மனதில் எல்லா அடுக்குகளும் ஒருவிதமான அமைதியில் இருக்க (அது புயலுக்குப் பின் சட்டென்று ஏற்படுகிற ஒரு வித அமைதி. இது உதாரணம்தான் ) அதுவே உண்மையை கண்டறிய ஏதுவான சூழ்நிலை (மனதில் ஏற்படுகிற சூழ்நிலை என்பதை வெளிச்சூழ்நிலை என்று பொருள் கொள்ள வேண்டாம்).

அது சரி மனம் என்பதே எண்ணங்களால் ஆன பொட்டலம் என்னும் போது எண்ணங்கள் விடுபட்டால் அப்போது மனம் என்ன ஆகும். அது இல்லாமலே ஆகும். ஏனெனில் அது எப்போதும் இருந்ததில்லை.(மேலே சொன்ன உதாரணத்தில் எறும்புப் பந்திலிருந்து எறும்புகள் விடுபடும்போது. அதன்பின் பந்து என்று ஒன்று கிடையவே கிடையாது. அதற்கு முன்பும் கிடையாது. எறும்புகள் மட்டுமே இருந்தன)

எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது தலைக்குள். அவற்றின் போக்குவரத்தை நாம் மனம் என்று அழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனம் அல்லாத நிலையை புத்தர் நிர்வாணம் என்றார். ஆடைகள் இல்லாதது உடல் நிர்வாணம் எனில் எண்ணங்கள் இல்லாதது இந்த நிர்வாணம். எண்ணங்கள் எப்படி இல்லாது போகும் எனில் ...கேள்வியை மாற்றிக் கேளுங்களேன்.

எண்ணங்கள் எப்படி இருக்கின்றன. என்று? குறிக்கோள் இருக்கும்போது

குறிக்கோள் எப்படி வருகிறது? ஆசை இருக்கும்போது.

ஆசையை ஒழிக்கலாமா? ஆக ஆசையை ஒழிப்பதை ஒரு குறிக்கோளாக ஆக்கிக் கொண்டு விட்டீர்கள்...பிறகு எப்படி?

ஆசையை ஒழிக்க, சம்மணம் போட்டு உட்கார்ந்து, உடலை வளைத்து உடற்பயிற்சி செய்து, மூக்கை பிடித்து பயிற்சி செய்து..- .இதெல்லாம் எண்ணங்களை ‘தேர்ந்து எடுக்காமல்’ கவனிக்கும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லவே!

தேர்ந்து எடுக்காமல் எண்ணங்களை கவனித்தல் என்பது மனதை சுத்திகரித்தல்.மறுபடி ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம்.

ஐயா! நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் நான் என்ன செய்ய...?

இதற்கான அவரின் பதிலையே இந்தக் கட்டுரையாக நான் இங்கு தந்துள்ளேன். இதை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.

இன்னொருவர் வேலைக்கு போய் சம்பாதித்து கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று அவர்களை வளர்த்து ஒரு வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து நிற்கிறார். எனக்கு எண்ணங்களால் தொல்லை என்கிறார். அவரும் இப்படியே இருக்கிறார். இவரும் இப்படியே இருக்கிறார். அவர் இருப்பது ஒரு வட்டம். இவர் இருப்பது இன்னொரு வட்டம்.

எண்ணங்கள் எண்ணங்களே! அவை நல்லவைகளாய் இருந்தாலும், கேவலமானவைகளாக இருந்தாலும் கொடூரமானவைகளாக இருந்தாலும், புனிதமானவைகளாக இருந்தாலும்,சொகுசு வாழ்க்கையில் உதித்தாலும்,கஷ்டப்படுகிற வாழ்க்கையில் உதித்தாலும்.

நீங்கள் எந்த வட்டத்தில் இருந்தால் என்ன?. வட்டத்தில் இருக்கிறீர்கள்.

உடனே அப்ப சமூகத்தில் நான் எப்படி வேணுமானாலும் இருக்கலாமா என்றால் இந்தக் கட்டுரை முதலில் இருந்து படிக்கப்பட வேண்டும் என்று பொருள்.

(ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Commentaries on Living-I என்ற நூலின் ஒரு கட்டுரையின் அடிப்படையில்...)

Sunday, 12 January 2014

வஜனாம்ருதம் தொடர்ச்சி 3

ஆன்மீகப் புத்தகமோ 
அத்வைத வித்தகமோ 
"நான்" கடந்த தத்துவமோ 
ஞானத்தின் மேய்த்தவமோ 
தேன் கடந்த தித்திப்போ 
தேவ நிலை சித்திப்போ 
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!

101. மதுவை அமுதம் என்று கருதும் அசுரர் போன்று அஞ்ஞானி சிற்றின்பத்தை பேரின்பம் எனக் கருதுகிறான்.

102. புலிக்கு அறியுந்தன்மை நுகர்ச்சியிளிருப்பது போன்று, ஞானியின் அறிவும் அகக்கண்ணில் இருக்கின்றது.

103. சக்தி திரண்டு பொருளாவது போன்று நிலையான சக்தி திரண்டு ஞானமாகிறது.

104. கருவுற்றிருப்பவர்களுக்கு அன்னத்துவேஷம் உண்டாவது போன்று ஞானக் கருவுற்றிருக்கும் ஞான
சாதகனுக்கு விஷய சுகங்களில் வெறுப்பு உண்டாகிறது.

105. கடம்புப்பால் குடல் அழுக்கை நீக்கும் கன்றுக்குட்டி போன்று ஞான சாதகன் ஞானப்பால் குடித்து அக மலங்களை நீக்கிய வண்ணம் இருப்பான்.

106. புறப்பார்வையிலிருக்கும் துரம், இடைவெளி, நேரம், காலம் முதலியவை அகப்பார்வையில் இருப்பதில்லை.

107. ஞானமும் பக்தியும் இரு கண்கள் போன்றவை. ஞான சாதகன் நிலைத்த பொறுமையுடையவனாகில் குறியின்கண் நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கருதலாம்.

108. உண்ணும் மருந்து பலிதமாவதற்குப் பத்தியம் அவசியமாயிருப்பது போன்று தவப் பயனுக்கு பிரமசாரியம் என்ற பத்தியம் அவசியமாகும்.

109. கடமை என்பது லௌகீகச் செயலாயிருந்தாலும் அதில் அன்பும், தியாகமும் கலக்கும் பொழுது ஞான சாதகமாக மாறுகின்றது.

110. தேனில் ஊறவிட்ட பழச்சுளைகள் கெட்டுவிடுவதில்லை. அதேபோன்று இறை சிந்தனையில் ஊறியிருக்கும் மனமும் புத்தியும் எக்காலமும் கெட்டுவிடுவதில்லை.

111. பிரபஞ்ச வாசனைகள் அற்றிருக்கும் மனம் ஆழமான மௌன சுகத்தை அனுபவிக்கின்றது. நீரைப் பிரித்துப் பாலை மாத்திரம் உண்ணும் பறவையை அன்னமென்பர். அன்னத்தைப் போன்று தன்னிலிருக்கும் அசத்தைப் பிரித்து சத்தை மட்டும் உண்ணுகின்றவனை ஞானி என்பர்.

112. ஆசையின் மத்தியில் அசைவற்றிருக்கும் இரகசியத்தை அறிந்தவனை ஆசைகள் தீண்டுவதில்லை.

113. சர்வ சக்திதரனும், சர்வ வியாபியுமாகிய இறைவனை எல்லா மதத்தவர்களும் ஏகோபித்து வழிபடுகின்றனர். அதே இறைவன் பெயரைச் சொல்லி எல்லா மதத்தினரும் ஒன்றோடொன்று மோதி வாழ்கின்றனர். என்ன மதியீனம்.

114. அன்பு என்பது ஒரு நல்ல மன விகாரம்.பக்தி என்பது மனத்தைக் கடந்த விளக்க முடியாத அற்புத ஆத்மசுகம்.

115. கோது, சுளை, வித்துக்குள்ளே இருக்கும் பீஜம் போன்றே முறையே மதம், பண்பாடு, தர்மம் அமைந்திருக்கின்றது.

116. பண்பாடு என்பது தர்ம நெறியிலிருந்து புடம் பண்ணியெடுத்த நல்லதோர் பழக்க வழக்கமாகும்.

117. வியாதிக்கு ஔஷதம் போன்று வாழ்க்கை என்ற வியாதிக்கு ஔஷதமாயிருப்பது தர்மம்.

118. சரீரம்,நித்தியம் என்றும் அநித்தியம் என்றும், வாதிட்டு வீணே காலம் கழிப்பவர்கள் சரீரத்தை உள்ளபடி பிரயோசனப்படுத்தத் தெரியாத வீணர்களேயாகும். சரீரத்தை மிஞ்சிப் போற்றுவதும் தூற்றுவதும் குற்றமாகும்.

119. விஷத்தை விஷ வித்தையால் இறக்குவது போன்று அஞ்ஞானம் என்ற விஷத்தை ஞானம் என்ற ஔஷதத்தால் சுகப்படுத்தலாம்.

120. திசை அறிகருவி திசையைக் காட்டுவது போன்று உண்மையான வாழ்க்கையின் திசையைக் காட்டும் கருவி மதம்.

121. யானைக்கு கரும்பு போன்று தர்மம் மனித வாழ்க்கைக்கு உவப்பான கரும்பு.

122. பால் கெட்டால் நஞ்சாக மாறுகின்றது. ஒழுக்கம் குறைந்த சமுதாயம் கெட்ட பாலுக்குச் சமன்.

123. மரத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் காயாவதில்லை. சில உதிர்ந்தே போய்விடுகின்றன. அதேபோன்று மனதில் உதயமாகும் எண்ணங்கள் முழுவதும் செயற்படுவதில்லை.

124. மலரிலிருந்து தேனூறுவதுபோன்று தியானத்தினின்று பெருஞ்சுகம் ஊறி வருகின்றது.

125. நீர் வற்றிய குட்டையில் துடித்துச் சாகும் மீன்கள் போன்று தர்மம் குன்றிய மனித சமுதாயம் பஞ்சமா பாதகங்களாக துடிதுடித்து மடியும்.

126. நீர் கலந்த பால் கெட்டுப்போனால் அது பாலின் குற்றமன்று. நீர் கலந்தவனின் குற்றமேயாகும். அனாசாரங்களினால் சமயம் கெட்டுவிட்டால் அது சமயத்தின் குற்றமன்று. அனாசாரங்களைப் புகுத்திய மனிதனின் குற்றமேயாகும்.

127. மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இருளும் ஒளியும் என்றென்றும் இருப்பது போன்று உலகம் இருக்கும் வரையில் தர்மமும் அதர்மமும் இருந்தே தீரும்.

128. உத்தமமான பக்தி பயத்தினால் உருவாகும் ஒரு மன விகாரமன்று. சத்திய தரிசனத்தில் அனுபூதி மாத்திரமாய் நிற்கும் விளக்கமுடியாத கோடானுகோடி இன்பங்களின் திரட்சியேயாகும்.

129. பிரார்த்தனை, வழிபாடு, பூஜை, ஜெபம், தவம் முதலியவற்றின் காரிய சித்திதான் பக்தி.

130. கருமம், யோகம், ஞானம் முதலிய மரங்களில் காய்த்துக் கனிந்த கனியே பக்தி.

131. புளிமாங்காய், நன்றாக முற்றிப் பழுத்தால் சுவை மிக்கதாய் மாறுவது போன்று விஷய வாசனையால் புளித்துக் கெட்டுப்போன வாழ்க்கை, பக்தி நெறியால் முற்றிப் பழுக்கும்போது நிலையான சுகத்தைக் கொடுக்கின்றது.

132. வெளிச்சம் ஒன்றினாலன்றி வேறெதனாலும் இருள் நீங்குவதில்லை. அதே போன்றே சுத்த ஞானத்தினாலன்றி வேறெதனாலும் வினைப் பயன் நீங்குவதில்லை.

133. தேன் கலந்த முக்கனி ரசம்போன்று தெய்வீகம் கலந்த கர்மம், யோகம்.ஞானம் என்ற முக்கனி பிழிந்தெடுத்த ரசமே பக்தி.

134. சந்துப்புழு, பயிர்களின் சந்து பொந்துகளில் குடியிருந்து பயிரை நாசஞ் செய்வதுபோன்று வஞ்சகக் குணம் இருதயத்தில் குடியிருந்து மனிதனை அடியோடு நாசஞ் செய்கிறது.

135. நீரோட்டத்திற்கெதிரே நீந்திப் பழகுவதால் சரீரம் வலுவடைவது போன்று வாழ்க்கையில் வருகின்ற கஷ்டங்களை எதிர்த்துப் போராடுவதனால் மனம் வலுவுடையதாகின்றது.

136. இனம் இனத்தை நாடுவது போன்று போலிகள் போலிகளை நாடுகின்றனர்.

137. நாய் போன்ற பிராணிகளுக்கு வெறி பிடித்தால் அடித்துக் கொள்ளலாம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மனித சமுதாயத்திற்கு வெறி பிடித்தால் என்ன செய்வது?

138. சமயமென்றால் கடைந்தெடுத்த வாழ்க்கைத் திட்டத்தின் பெட்டகமாகும்.

139. எந்த மதம் நிலையான தர்மத்தை உட்கொண்டிருக்கின்றதோ, அந்த மதம் என்றென்றும் உயிரோட்டம் உடையதாயிருக்கும்.

140. ஞானி ஞானோதயத்திற்குப் பின்னும் மக்களையும் மாநிலத்தையும் நன்றி உணர்வுடன் பார்க்கவேண்டும்.

141. பலாபழத்தின் சுவையும், குணமும் சுளையில் தங்கியிருப்பது போன்று மதத்தின் சாரம் மத தர்மத்தில் கலந்திருக்கின்றது.

142. மதத்தில் இடை புகுந்த அனாச்சாரங்களுக்காக மதத்தைப் புறக்கணிப்பது எலிக்குப் பயந்து இல்லத்தைச் சுடுவதற்கு ஒப்பானது.

143. ஜனநாயக ஆட்சியில் எதிர்கட்சிகள்,களை கொல்லி திராவகம் போன்றவை.ஆனால் அது அசிற்றுத் திராவகமாக மாறினால், பயிரையும் சேர்த்து அழித்து விடுவது போன்று ஆட்சியை அழித்துவிடும்.

144. மாமிசம் உண்பவனைப் பார்த்து பிணந்தின்னி என்றொருவன் சொல்வானாகில் விபரீத பயன் விளையும். எனவே உண்மையைச் சொல்லும் பொழுது பண்புடன் சொல்ல வேண்டும்.

145. நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் உழைப்பாளியின் உழைப்பில்தான் உண்மையான ஜீவ களை பொங்கி வழிகின்றது.

146. ஆத்மஞான சுகமும், உத்தமுமான பக்திச் சுவையும் ஒன்றேயாகும். பக்தியும், ஞானமும் ஆத்மாவின் இரு கண்களேயாகும்.

147. மனிதன் இறைவனில் இரண்டறக் கலந்திருக்குஞ் சுகமே பக்தி.

148. தேன் ஜாடியில் வீழ்ந்திருக்கும் தேனீக்கு எங்ஙனம் தேனைச் சுவைக்க முடிவதில்லையோ அதே போன்று பிரபஞ்ச வாசனையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்குப் பக்தி என்ற தேனமுதைச் சுவைக்க முடிவதில்லை.

149. பொறியில் வீழ்ந்திருக்கும் பறவைக்கு உணவின் சுகம் இல்லாதது போன்று உலகப்பற்று என்ற பொறியில் வீழ்ந்து கிடக்கும் மனிதனுக்கு உண்மையான பக்தியின் சுவை தெரிவதில்லை.

150. நித்தியம், அநித்தியம், சிறுமை, பெருமை முதலியவற்றை சரிவர ஆராய்ந்து எது மெய் என்று அறியும் பொழுது பக்தியுணர்வின் ஊற்றுவாய் திறக்கப்படுகின்றது.

வஜனாம்ருதம் தொடர்ச்சி 2 

Thursday, 2 January 2014

தமிழ் ஈழ அரச பரம்பரை

* வரலாற்று காலத்துக்கு முன் - இராவணன் ( சைவ சமயத்தவன் ,வட இந்திய வைணவ சமயத்தவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிட்டான்)

* கிமு ?? - கிமு 6ம் நூற்றாண்டு வரை (நாக நாடு/நாகதீபம் - நாகர் இன மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் , தலைநகர் - பூநகரி மற்றும் கந்தரோடை )

#ஈழத்தின் தலைநகராக அனுராதபுரம் இருந்த போது ஆண்ட தமிழ் மன்னர்கள்
* கிமு 367 - கிமு 307 - மூத்தசிவன்
* கிமு 307 - கிமு 267 - தேவநம்பிய தீசன் (சைவ சமயத்தவன் ஆனால் பின்னாளில் இவன் வட இந்தியாவிலிருந்து வந்த அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்த தேரர் என்ற பௌத்த துறவியின் மூலம் பௌத்த மதத்தை தழுவினான் மக்களில் சிலரும் மன்னனை பின்பற்றினர் )
* கிமு 257 - கிமு 247 - மகாசிவன்
* கிமு 237 - கிமு 230 - சேனன்
* கிமு 230 - கிமு 215 - குத்திகன்
* கிமு 205 - கிமு 161 - மாவீரன் எல்லாளன் ( அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு முன்னர் ஆண்டு வந்த இவனின் தந்தையை அசேலன் என்ற தென் ஈழ சிங்கள மன்னன் போரில் வென்று அனுராதபுர ஆட்சியை கைப்பற்றி (கிமு 215- கிமு 205) வரை வைத்திருந்தான் அப்போது சிறுவனாக இருந்த இளவரசன் எல்லாளன் தமிழகம் (முற்கால சோழ நாடு) தப்பி சென்றான் பின்னர் பராயம் அடைந்ததும் மீண்டும் அங்கிருந்து படையெடுத்து வந்து அனுராதபுரத்தை கைப்பற்றி 44 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தான். இவனை பல முறை போரிட்டும் வெல்ல முடியாது இருந்தனர் பல தென் ஈழ சிங்கள மன்னர்கள். இறுதியில் வயோதிபமடைந்த எல்லாளனை துட்ட காமினி என்ற தென் ஈழ சிங்கள மன்னன் வஞ்சகமாக தனிசமருக்கு அழைத்து வீழ்த்தி அனுராதபுர ஆட்சியை கைப்பற்றி கொண்டான் இந்த துட்ட காமினியே சிங்கள பௌத்த மக்களால் தமது மாவீரனாக கருதப்படுகிறான் , எல்லாளனின் மறைவுக்கு பின் ஒரு லட்சம் வரையான தமிழர்கள் மற்றும் தமிழ் படைவீரர்கள் அனுராதபுரத்தில் துட்டகாமினியால் தலை கொய்யபட்டு படுகொலை செய்யபட்டார்கள் )

#பஞ்ச_பாண்டியர்_படையெடுப்பு (கிமு 103- கிமு 88 ) - தமிழகம், பாண்டிய நாட்டிலிருந்து படைதிரட்டி வந்து அனுராதபுர ஆட்சியை மீள கைப்பற்றிய ஐந்து தளபதிகளே பஞ்ச பாண்டியர் என அழைக்கபடுகின்றனர் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக தம்மில் அரசாள்பவனை கொலை செய்து ஆட்சியை பிடித்தனர்
* கிமு 103 - கிமு 100 - புலாகதன் (பஞ்ச பாண்டியருள் முதலாமவன் , இவன் அமைச்சனாக வைத்திருந்த பாகியனால் கொல்லபட்டான்)
* கிமு 100 - கிமு 98 - பாகியன்
* கிமு 98 - கிமு 91 - பாண்டிய மாறன்
* கிமு 91 - கிமு 90 - பழைய மாறன்
* கிமு 90 - கிமு 88 - தாட்டிகன் (இறுதி பஞ்ச பாண்டியன் , வலகம்பன் என்ற சிங்கள மன்னன் இவனை போரில் வீழ்த்தி அனுராதபுர ஆட்சியை கைப்பற்றினான்)

#இராசராட்டிரப்_பாண்டியர்கள்_ஆட்சி (கிபி 436 - கிபி 463) தமிழகத்தில் களப்பிரர்கள் என்ற அரசர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்ட போது பாண்டியர் வம்சத்திலிருந்து இலங்கைக்கு படையெடுத்து சென்று அரசாண்ட பாண்டிய மன்னர்களாவர்.
* பாண்டு (பாண்டியன்) கிபி 436 - 441
* பரிந்தன் கிபி 441 - 444
* இளம் பரிந்தன் கிபி 444 - 460
* திரிதரன் கிபி 460
* தாட்டியன் கிபி 460 - 463
* பிட்டியன் கிபி 463

* கிபி 992 - கிபி 1007 ராஜராஜ சோழன் (வட ஈழத்தை கைப்பற்றினான் 1000 வருடங்களுக்கும் மேலாக ஈழ தீவில் தமிழ் மற்றும் சிங்கள மன்னர்களால் மாறி மாறி தலைநகராக கொண்டு ஆளப்பட்ட அனுராதபுரம் நகர் அடித்து நொருக்கபட்டது , ராஜராஜ சோழன் பொலநறுவையை புதிய தலைநகர் ஆக்கினான்)

* கிபி 1007- கிபி 1044 ராஜேந்திர சோழன் (முழு ஈழ தீவையும் கைப்பற்றி ஆண்டான்)

* கிபி 1044 - கிபி 1070 சோழர் நிர்வாகம் (கிபி 1070 வரை பொலநறுவையை தலைநகராக கொண்டு சோழர் நிர்வாகம் இருந்தது , 1045 வரை காட்டுக்குள் மறைந்து வாழ்ந்து வந்த விஜயபாகு என்ற சிங்கள இளவரசன் 1070 வரை தொடர்ந்து சோழரை எதிர்த்து போராடி இறுதியில் பொலநறுவையை மீள கைப்பற்றினான் )

* கிபி 12 ம் நூற்றாண்டு - உலக நாச்சியார் (சிற்றரசி , தலைநகர் மட்டக்களப்பு- மண்முனை)

* கிபி 1223 - கிபி 1260 - சோழகங்க தேவன் / குளக்கோட்டன் ( ஆண்ட பகுதி தென் தமிழீழம்/கிழக்கிலங்கை , தலைநகர்- திருகோணமலை )

#யாழ்ப்பாண_ராஜ்ஜியம் மற்றும் #வன்னி_மண் - யாழ்ப்பாண ராஜ்ஜியம் நல்லூரை தலைநகராக கொண்டு ஆழப்பட்ட வட தமிழீழ பகுதியாகும். இதன் தெற்கே இன்றைய முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியே வன்னி மண் ஆகும், இதில் பெருமளவு சிற்றரசுகள் இருந்தன இவற்றை வன்னியர்கள் ஆண்டார்கள். வன்னி மண் யாழ்ப்பாண ராஜ்ஜியத்திற்கு தெற்கில் ஓர் வலுவான பாதுகாப்பு அரணாக இருந்தது. வன்னிசிற்றரசர்கள் சிறிய படைகளை வைத்திருந்த போதும் மிகவும் வலிமை மிக்கவர்களாகவும் மண்டியிடாது மூர்க்கதனமாய் போரிடுபவர்களாகவும் இருந்தனர் இதனால் இவர்களை தாண்டிசென்று/போரிட்டு வென்று தெற்கு இலங்கையில் இருந்த இரண்டு சிங்கள ராஜ்ஜிய மன்னர்களாலும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடியவில்லை)

**யாழ்ப்பாண ராஜ்ஜிய மன்னர்கள்**

* கிபி 1210-1246 கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி
* கிபி 1246 - 1256 குலசேகர சிங்கையாரியன்
* கிபி 1256-1279 குலோத்துங்க சிங்கையாரியன்
* கிபி 1279 - 1302 விக்கிரம சிங்கையாரியன்
* கிபி 1302-1325 வரோதய சிங்கையாரியன்
* கிபி 1325-1348 மார்த்தாண்ட சிங்கையாரியன்
* கிபி 1348-1371 குணபூஷண சிங்கையாரியன்
* கிபி 1371-1394 வீரோதய சிங்கையாரியன்
* கிபி 1394-1417 சயவீர சிங்கையாரியன்
* கிபி 1417-1440 குணவீர சிங்கையாரியன்
* கிபி 1440-1450 கனகசூரிய சிங்கையாரியன் ( வடக்கே தமிழகமும் தெற்கே வன்னி சிற்றரசர்களும் பாதுகாப்பு அரணாய் இருந்ததால் எதிரிகள் இன்றி உல்லாசமாய் அந்தபுரத்தில் பொழுதை கழித்தபடி யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்த கனகசூரியன் 1450 ல் கோட்டே சிங்கள ராஜ்ஜியத்திலிருந்து படையெடுத்து வந்த செண்பக பெருமாள் கடுமையாக எதிர்த்து போரிட்ட வன்னி சிற்றரசுகளை வென்று யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்குள் புகுத்ததும் எதிர்த்து போரிட படைகள் தயார் நிலையில் வலுவாக இல்லாததால் வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றான்)
* கிபி 1450-1467 செண்பகப்பெருமாள் (கோட்டே ராஜ்ஜிய சிங்கள அரசனின் வளர்ப்பு மகனான செண்பகப்பெருமாள் பிறப்பால் சைவ சமயத்தவன் ஆவான் ஆனால் சிங்கள ராஜ்ஜிய பிரதிநிதியாக யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை கைப்பற்றினான்)
* கிபி 1467 - 1478 கனகசூரிய சிங்கையாரியன் (1450 ல் தமிழ்நாட்டிற்கு தப்பி சென்ற மன்னன் கனகசூரியன் தமிழகத்திலிருந்து படை திரட்டி வந்து 1467 ல் மீண்டும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை மீள கைப்பற்றி கொண்டான்)
* கிபி1478-1519 - 2ம் கனகசூரிய சிங்கையாரியன்
* கிபி 1519-1560 - 1ம் சங்கிலியன்
* கிபி 1561-1565 - புவிராஜ பண்டாரம்
* கிபி 1565-1570 - காசி நயினார்
* கிபி 1570-1572 - பெரிய பிள்ளை
* கிபி 1572-1591 - புவிராஜ பண்டாரம்
* கிபி 1591-1615 - எதிர்மன்ன சிங்கம்
* கிபி 1615-1617 - அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக)
* கிபி 1617-1620 - 2ம் சங்கிலியன் (கிபி 1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாண ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது)

* கிபி 17??-கிபி17?? - கைலாய வன்னியன் (வன்னி மண்ணை ஆண்ட மன்னன் , போர்த்துகேயர்கள் இலங்கை தீவில் கோட்டே சிங்கள ராஜ்ஜியம் மற்றும் யாழ்ப்பாண தமிழ் ராஜ்ஜியம் ஆகியவற்றை கைப்பற்றிய போதும் அவர்களால் இறுதி வரை வன்னி தமிழ் மண்ணிற்குள்ளும் , கண்டி சிங்கள ராஜ்ஜியத்துக்குள்ளும் நுளையமுடியவில்லை, கைலாய வன்னியன் பற்றி ரொபேட் நாக்ஸ் என்ற ஒல்லாந்த தளபதி தன் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளான்)
* கிபி 18/19 ம் நூற்றாண்டு - காக்கை வன்னியன் ( வன்னி சிற்றரசருள் ஒருவன் - வன்னிமண், பின்நாளில் இவன் துரோகியாக அடையாளபடுகிறான்)
* கிபி 17??- 1803 - மாவீரன் பண்டார வன்னியன் (வன்னி மண் , தலைநகர் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் , ஒல்லாந்தர்(டச்சுக்காரர்கள்) மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த மாவீரன். 1782-ல் வன்னியை கைப்பற்ற ஒல்லாந்தர் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற டச்சுகார வரலாற்று ஆசிரியர் , “ ஒல்லாந்தர்கள் உலகில் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருக்கிறார்கள் ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறு எங்கும் அவர்கள் காணவில்லை” என்று குறிப்பிடுகிறார், இறுதியில் பண்டார வன்னியன் ஆங்கிலேயரால் 1803 ல் தோற்கடிக்கபட்டான். ஆங்கிலேயர் ஆட்சி 1948 வரை இலங்கை தீவில் நீடித்தது )

* கிபி 1983-2009 - மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் ( தலைநகர்- கிளிநொச்சி , தமிழீழ பகுதியில் 80% வரையான நிலத்தை கடுமையாக போரிட்டு மீள கைப்பற்றி அங்கு தமிழீழ நிர்வாகத்தை நிறுவினார், வெறும் 20,000 க்கும் குறைவான தமிழ் போராளிகளை வைத்திருந்த போதும் இவரை 300,000 க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தால் 25 வருடமாக வீழ்த்தமுடியவில்லை முடிவில் 20 க்கும் மேற்பட்ட வல்லாதிக்க நாடுகளின் இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் போரிட்ட சிங்கள ராணுவத்தை தொடர்ந்து எதிர்த்து இலட்சியத்தில் சிறிதும் சமரசம் இன்றி இறிதிவரை போரிட்டார்)

* கிபி 2013- தற்போது வரை - சீ.வீ. விக்னேஸ்வரன் ( வட மாகாண முதலமைச்சர் , தலைநகர் - யாழ்ப்பாணம் ,அதிகாரம் எதுவும் அற்ற டம்மி முதல்வர்)

#தமிழீழ_தாகம்_தணியாது_எங்கள்_தாயகம்_யார்க்கும்_பணியாது. 🐅
 — withEelamranjan Eelamranjans and 18 others.

Wednesday, 1 January 2014

கண்ணாடியுள்ளிருந்து

"ஃ" ஓர் எழுத்தாயுத மாத ஏடு

கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973

மணிவிழா கொண்டாடும் சி.சு.செல்லப்பாவுக்கு சமர்ப்பணம்

வெங்கட் சாமிநாதன்
பிரமிள் பானுச்சந்ரென்

நம் உணர்வுலகு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது. உணரக் கிடைக்கும் அனந்தம் முழுமையும் சிந்தனையின் வாய்ப்படுவதில்லை. நம்மில் பெரும்பாலோர்க்கு அவரவர் சிந்தனை மொழிவழிப்பட்டதாகும். இதன் விளைவாக அவர்கள் சிந்தனை மொழியின் பரிமாணச் சிறைக்குள் அடைபட்டுப்போகிறது. இச்சிறைச் சுவருக்குள்ளேயே, அநுபவ உணர்வுலகமும் அடங்கி விட்டதாக அவர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் நமக்குச் சாத்தியமாகவிருக்கும் அநுபவ, உணர்வுலகு ஒரு பெரும் வட்டம் எனக் கொண்டால், அதனுள் ஒரு சிறு வட்டம் சிந்தனை உலகு. அதனுள்ளும் சிறிய வட்டம் மொழி சாத்திய உலகு. ஒரு லட்சிய நோக்கில், மொழி சாத்திய சிறு வட்டம் படிப் படியாக விரிந்து, ஆழ்ந்து, உக்கிரஹித்து அநுபவ உணர்வுலகின் பெரு வட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளவேண்டும். நம் கலைஞனர்கள், இலக்கியாசிரியர்கள், "பெரும் பெரும் " விமரிசக தகைகள் எல்லாம் மொழி சாத்திய உலகான சிறு வட்டத்தையே அநுபவ உணர்வுலக பெருவட்டமாகக் கண்டு மயங்குகிறார்கள். இது பரிதாபத்திற்குரியது.

இன்னும் வரும்...01/01/2014

மொழி சாத்திய சிறு வட்டம் என்று யான் சொன்னது இப்போதைய சந்தர்ப்ப சௌகர்யத்திற்காகத்தான். ஏனெனில் இக்கட்டுரை எழுதும் சந்தர்ப்பத்தில் என் சர்ச்சைக்குட்படுவது மொழி என்னும் குறியீடு. வேறு சந்தர்ப்பங்களில், அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வண்ணம், கோடு, சப்தம், காட்சி என ஆரம்பச் சிறு வட்டத்தின் குறியீடுக் குணத்தை மாற்றிக்கொள்வேன்.இருப்பினும் வெவ்வேறு வகைக் குறியீட்டுச் சாதனங்களின் சிறுவட்டமாக ஆரம்பிக்கும் ஒன்று அநுபவ உணர்வு பெரும் வட்டத்திற்கும் போகும் விரிவில், ஆழத்தில், உக்கிரத்தில் ஒருமை பெற்று இனங்காட்டிப் பிரிக்க முடியாத ஒரு முழுமையை அடைகிறது. அதனால்தான் நம் உணர்வு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது என்றேன்.

பெரு வட்டம், சிறு வட்டம் எனச் சொன்னதால்தான், ஒன்றிலிருந்து மற்றுன்றிற்கு நிகழும் நகர்வு எனக் கொள்வது தவறு. இது நிகழ்வது முழுக்க முழுக்க 'இடமற்ற' மன விஸ்தாரத்தில். சிறு வட்டச் சிறையோ, பெரு வட்ட விரிவோ அவரவர் மனதில், பிரக்ஞையில் நிகழ்வது. ஒருவன் பெருவட்ட இருப்பை மறுத்து தான் சிறைப்படும் சிறு வட்ட அணைப்புதான் வாழும் சந்தர்ப்பங்களையும் அவன் சிந்தனையின் பரிமாணங்களையும் பொறுத்தது.

இன்னும் வரும் 02/01/14

பெரு வட்ட உணர்வுலகோ, சப்தம், மொழி என்ற பரிமாண எல்லைகளில் சிறைப்படுவதில்லை. மொழிச் சாதன சிறு வட்டத்தில், பயிற்சி, வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், ஈடுபாட்டின் ஓரச் சாய்வு ஆகியவற்றின் காரணமாக சிறைப்படுபவன், பெருவட்ட உணர்வுலகில் , மொழியின் பரிமாணம் மூலம் தான் தரிசிப்பதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கிடைப்பது ஒரு சிதைந்த உலகு. மூளியான சத்தியம். "எனக்கு இலக்கியம் ஒன்றில்தான் குறி, மற்றவற்றைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பவன் எவ்வளவு பெரும், பெரும், இலக்கிய கர்த்தாவானாலும் அவன் உலகு சிதைந்த உலகுதான். உண்மையின் தரிசனத் தேடல் கொண்ட இலக்கிய கர்த்தா அவ்வாறு சொல்ல மாட்டான். சிதைபட்ட உலகை மூளியான சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான். அவன் தேடலில் பெருவட்ட உணர்வுலகின் மற்ற பரிமாணங்களின் சாயல் நிழல் தட்டியிருக்கும். இருக்காவிட்டால், சத்தியத் தேட்டையின் வெறும் சாதனமேயாகிய மொழியை சத்தியமாகக் கண்டு மயங்கியவன் அவன். சாதனங்களில் ஏதும் பவித்ரத்வம் இல்லை. சத்தியம் இல்லை.

இன்னும் வரும்...03/01/2014

சந்தர்ப்ப வசமாகவோ, ஈடுபாட்டின் விளைவாகவோ, வண்ணங்களையும், கோடுகளையும் தான் சிறுவட்ட ஆரம்பமாகக் கொண்ட வான்கோ, பெரு வட்ட உணர்வுலகில் உள்மன உளைச்சல் என்ற பரிமாணத்தையும் கண்டான். "முதுமை" கவிதையில் பரிதி, "பரிதிப் பிணம்" ஆகிறது. வான்கோவின் ஓவியத்தில் சூரியனும், ஸிப்ராஸ் மரங்களும் வயல்வெளிகளும் சைத்ரிகனின் மன உளைச்சலை ஸ்வீகரித்துக் கொள்கின்றன. பெரும் சந்தேகக் குறிகளில் ஆரம்பித்து ஐன்ஸ்டின், உணர்வு அநுபவித்தறியாத பிரபஞ்சத்தின் கூறுகளைக் கண்டான். அன்றாட வாழ்வின் பரிதவிப்பில் பிரயாணத்தைத் தொடர்ந்த கார்ல் மார்க்ஸ் சமுதாயத்தின்,மனித சரித்திரத்தின் பிரவாஹ கதியை, அலையாடலை நிர்ணயித்து விட்டான். வண்ணப்புள்ளிகளின் சிறு வட்டத்திலிருந்து காட்சிப் பதிவின் ஒளிச் சேர்க்கைக் கூறுகளைக் காணும் எல்லையை அடைந்தவன் ஸுராட் (Seurat). ஜப்பானிய சித்திர எழுத்துக்களின் அமைப்பு முறை, ஐஸ்ன்டினையும், நரம்பு பலவீனங்களின் ஆராய்ச்சி பாவ்லோவையும், மனித மனத்தின் இயல்புகளுக்குக் கொண்டு சேர்த்தது. இப்படி, மனித வரலாற்றின் சிந்தனா சரித்திரத்தில், ஒரு பரிமாண சாதனா ஆரம்பத்திலிருந்து அதன் வழியே தொடங்கிய பிரயாணம் மற்ற வேறு பரிமாண சாதனா எல்லைகளுக்குத் தாவிய நிகழ்ச்சிகள் அனந்தம். இருந்த இடத்தை விட்டு நகராத பிரகிருதிகள் தாலுகா ஆபீஸ் டெஸ்பாச் கிளார்க்குகள் மாத்திரமல்ல, தமிழ் நாட்டு இலக்கிய விமர்சகப் பெரும் புள்ளிகளும்தான்.

இன்னும் வரும் 04/01/2014

பிரமிள் பானுச்சந்ரென் மொழிவழி சாதனைக்குள் காலெடுத்து வைக்குமுன் இந்த ஆரம்ப அறிமுக எச்சரிக்கை தேவைப்படுகிறது. பானுச்சாந்ரெனின் "கவிதைகள்' இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில்தான் இயங்கும் என நம் தமிழ்தந்த மொழிவழிச் சாதனா சிருவட்டச் சிறைக்குள் இருந்துகொண்டு நிர்ணயிபபதோ, எதிர் பார்ப்பதோ தவறாக முடியும். பானுசந்ரெனின் அநுபவ உணர்வுலகப் பெரு வட்டம் மொழி வழி சாதனா வட்டமாக (கவனிக்கவும், சிறு வட்டமாக அல்ல) தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது. அவர் எழுத்துக்களில் - இங்கு அவர் கவிதைகளில் சிறு வட்டம் பெரு வட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அவ்விரிதலில், உக்கிரஹிப்பில், அதன் பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தி உள்ளவர்கள் ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. வாடிப்பட்டி வைரமுத்துப் பிள்ளையிடம் 'Icicles' (ஐஸ் படிமம்) என்று மட்டுமே சொல்லி அதை உணர்த்த முடியாது. பானுச்ச்ந்ரெனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாமும் உணரும் சக்தி வேண்டும்.

இன்னும் வரும் 05/01/2014

நமக்கும் பரிச்சயமான, பாதுகாப்புத் தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சாந்ரெனின் உலகில் தகர்க்கப்படுகின்றன. கண்களின் வீச்சுத் தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று, அடிவானத்திற்கப்பால் அகன்று விரியும் உலகத்தைப் பற்றிய ஞானம் இருந்தால்தான், அடிவானம் வரை மொழிவகுத்த பாதை வழியே சென்று அதற்கும் அப்பால் பானுச்சாந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். இல்லையெனில் "எனக்கு இலக்கியம் தான் குறி" என்று தெரு முனையிலேயே டேரா போட்டுக் குருட்டு வாழ்க்கை நடத்த உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.

இன்று பெரும்பாலான தமிழ்க் கவிதை செல்லும் பாதை, ஏற்கனவே மொழி மொழி சிரமைத்துத் தந்துவிட்ட பாதையில் நீங்கள் அமைத்துக்கொண்ட சௌகரியமான ஒரு நடை பாதையேயாகும். இந்த நடைபாதைக்குள்தான் செப்பனிடுதல், கல்பதித்தல், சீரமைத்தல், அரசியலில் அலங்கார தர்ம கோஷங்கள் எழுதுதல் எல்லாம் நடைபெறுகின்றன. இன்னொரு சிலரோடு பானுச்சாந்ரெனும் மொளிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுபவர்.

இன்னும் வரும் 06/01/2014

புதுக்கவிதையில் மரபில், பிரமிள் பானுச்சாந்ரெனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு. ஒன்று அவரது படிம உலகம். இவ்வாறாக நான் பிரித்துக் காட்டியது ஒரு விளக்க சௌகர்யத்திற்காகத்தான். மன--பிரபஞ்ச உணர்வுலகம்தான் படிம ரூபமாக நமக்குக் காட்சியளிக்கிறது. படிமம், காட்சி வழிப்பட்டது. ஓவிய சிற்ப உலகிலிருந்து இடம் பெயர்ந்தது. மன--பிரபஞ்ச உணர்வுலகம், சிந்தனை வழிப்பட்டது. மனோதத்துவ--பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது. ஆகவே "இலக்கியக்குறி" கொண்ட கற்பரசிகள், மொழிக் கண்ணகிகள் இங்கு கால்வைப்பது ஆபத்தானது. அநுபவ உணர்வுலகில் மற்ற பரிமாணங்களும் உண்டு என அறிந்து அவ்வுலகில் சஞ்சரிக்க விரும்புகிறவர்களுக்கு இங்கு இடம் உண்டு.

மேலே செல்லுமுன் இன்னுமொரு விளக்கம் அவசியம். படிமம் என்பது இங்கு உத்தி அல்ல. காட்சி அனுபவம். அநுபவ சத்தியம். அநுபவ உணர்வுலகமும் படித்தறிந்த தகவல் சேர்க்கை அல்ல, அதுவும் அநுபவ சத்தியம். உத்திகளாகவும், புதுமைகளாகவும், அநுபவ சத்தியத்தைக் காண்பவர்கள் வான்கோழி நட்டியமாடுபவர்கள். அவர்களில் ஒருவரின் கவிதை ஒன்றை மாதிருக்கென தரலாம்.

மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத
பூதலத்தின்
கொக்கு போலக்
காலூன்றி
நிற்கும் மரங்கள்
அதற்கப்பால்
எழுந்து வீழ்ந்து
தடுமாறும்
நடக்கத் தெரியாத கடலலைகள்
யார் சென்றாலும்
விரல் நீட்டும்.

இங்கு வான்கோழி படிம நடனம் ஆடுகிறது.

மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத ... போயிற்று. இதற்குள்ளேயே பூனை சாக்குப்பைக்கு வெளியே தலை நீட்டி தப்பித்தோடி விட்டது.

எண்சீர் விருத்தத்திலிருந்து, அறுசீர் விருத்தத்திற்கும், களிப்பாவுக்கும், அகவலுக்கும் என்று கிளைக்குக்கிளை தாவும் பண்டித லாவகம், படிமத்தையும் கிளையாகக் கணித்து தாவியதன் விளைவு இக்கால் முறிவு. இப்படியும் பானுச்சாந்ரென் 70 வருடத்திற்கு முந்தைய ஐரோப்பிய முயற்சிகளிலிருந்து கற்றதல்ல.இன்று இன்னொருவர் பானுச்சந்ரெனிடமிருந்து கற்க.

இன்னும் வரும் 07/01/2014

இவ்வான்கோழி நடனத்திற்குக் காரணமே நம் விமரிசகப் பெருந்தகைகள் தாம். சோதனை என்ற இயக்கத்தின் தாத்பர்யத்தையும், உள்ளார்ந்த உந்துதலையும் முன் வைக்காமல், இப் பெருந்தகைகள், "சோதனை, சோதனை" என்று இலக்கியக் கற்பு நச்சு பண்ணியதன் வினைதான் இவ்வான்கோழி நடனம். சோதனையின் உந்துதலே, ஒரு பரிமாண அநுபவத்திலிருந்து இன்னொரு பரிமாண சோதனைக்குத் தாவும் இயக்கம் தான் என்பதை இலக்கிய கண்ணகிகள் உணரவும் இல்லை, ஆதலால் அதை எடுத்துரைக்கவும் இல்லை.

படிமம் என்பது சம்பிரதாயமாக (கவனிக்கவும்) "சம்பிரதாயமாக" ஓவிய, சிற்ப வழி அநுபவம் ஆகும். மன உளைச்சல்கள், சம்பிரதாயமாக, சொல் வழி, இலக்கிய வழி அநுபவம் ஆவது போல, மன உளைச்சல்கள் வான்கோ என்ற ஓவியனிடம் சாதனையாக பதிவு பெற்றது போல, படிம அநுபவங்கள் மொழிவழி வெளியீடு பெறும் சந்தர்ப்பங்கள் தாம் 70 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த படிம கவிதை முயற்சிகள். இங்கு பிரமிள் பானுச்சாந்ரெனின் கைகளில் இன்று தமிழும் நிகழ்ந்திருக்கிறது.இந்நிகழ்ச்சியின் ஊற்றுக் கண்ணை, பானுச்சாந்ரெனின் அநுபவ உணர்வுலகின் நிதர்ஸனத்தில் தான் காண வேண்டும். 1961-ம் வருட "எழுத்து" 36-ல் வெளிவந்த கவிதை "விடிவு"

பூமித் தோலில்
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி.

இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில் ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து மற்றொன்றாக தோன்றி மறைகிறது.இது தமிழில் முதன் முதல் படிமக் கவிதை. இதன் பிறப்பிற்குக் காரணங்களாக இன்னொரு படிமக் கவிஞரை நாம் தேட வேண்டிய அவசியத்தை பனுச்சாந்ரென் வைக்கவில்லை. இதன் தோற்றத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, "எழுத்து" தொடங்கிய புதுக்கவிதை மரபு அளித்த சுதந்திர இயக்கம், மற்றொன்று மிக முக்கியமானது. உணர்வுலகக் குணா விசேஷம். "விடிவு" கவிதையில் கண்ட படிம இயல்பின் ஆரம்பங்களைப் படிமக்கவிதை அல்லாத 1960. ஜனவரி "எழுத்து"--வில் வந்த "நான்" கவிதையில் காணலாம்.

இன்னும் வரும் 08/01/2014

ஆரீன்றாள் என்னை
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று பெரும் வெளியில்
ஒன்று மற்ற பாழ் நிறைந்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால்
முடிஎரித் துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களின்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெரு வெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!

யரோ நான்?--ஓ!--ஓ!
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனுகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்?

இக்கருவின் வளர்ச்சியை, இதற்கடுத்து நவம்பர் 1960 23-ம் "எழுத்து" இதழில் வெளிவந்த "பயிர்" என்ற கவிதையில் பார்க்கலாம்.

வேலி கட்டா வானத்தில்
வெள்ளிப்பயிர் வளர்க்க
தாலிகட்டிச் சத்தியினை
ஈர்ப்பென்ற நீர் பாய்ச்சி
காலமெல்லாம் காத்திருக்க
வைத்து விட்டாய்; வைத்து மென்ன?
ஊழியென்ற பட்சி அவன்
அயர்ந்திருக்கும் வேளையிலே
வேலி கட்டா வானத்தில்
வெள்ளி விதைக ளெல்லாம்
அள்ள விழுங்கும் வரை
நீர் பாய்ச்சி என்ன பயன்
வேர்  முளைக்கக் காணோமே!

இதையடுத்து வளர்ந்து முதிர்ந்ததுதான் "விடிவு" கவிதை காட்டும் படிமவியல், நேரிசை வெண்பாவிலிருந்து தாவிய அடுத்த கிளையில்ல பானுச்சாந்ரெனின் படிமங்கள்.

இன்னும் வரும் 09/01/2014

"சமூகம் கெட்டுப் போய் விட்டதடா?
சரி, சோடாப் புட்டி உடைக்கலாம் வாடா"

என்று வேறொருவர் தமது அங்கத சமூகப் பார்வைக்கிளையிலிருந்தும்,

"அடுக்கி வைத்த செங்கற் சூளையிலே
தனித்த செங்கல்லொன்று சரிகிறது"

என்ற செங்கற் சூளை சித்தாளின் காவல் பார்வைக்கிளைக்கு அவரே தாவ முயல்வது போல, படிம உலகுக்குத்தாவ முடியாது.

ஏன்?

பானுச்சாந்ரெனின் மன-- பிரபஞ்ச உணர்வுலகம் தான் படிமங்களாக காட்சி தருகின்றன. இவற்றை இரு வேறு அம்சங்களாக பிரித்து என் விளக்க சௌகர்யங்களுக்காக என நான் முன்னரே சொன்னேன்.

இம் மன-- பிரபஞ்ச உணர்வு கற்றுத் தெரிந்ததல்ல. கலைஞனின் உடன் பிறந்த ஆளுமை. பிரபஞ்சத்தின் பரப்பு அனந்தம் என்ற இடபரிமாணம், மன எழுச்சியின் உக்கிரமாக எழும் உணர்வுப் பரிமாண மாற்றம், படித்தறிந்து கொள்ளும் தகவல் சேர்க்கை அல்ல. ஆளுமையின் உள்ளிருந்து விகசிக்கும் பார்வை அநுபவம். உணர்வின் மலர்ச்சி. சான்றுகளைக் கவிஞனின் வளர்ச்சியில் காணலாம்.

படிமம், உணர்வு ஆகிய இரு குணங்களின் மங்கலான ஆரம்பங்களை, பானுச்ச்ந்ரென் தன் 20,21-ம் வயதில் எழுதிய 'நான்' கவிதையில் பார்க்கலாம். "பயிர்" என்ற கவிதையில் மங்கல் சிறிது நீங்குகிறது. தெளிவு தோன்றுகிறது. முற்றிலும் படிமத் தெளிவு பெறுவது "விடிவு"  "மின்னல்" ஆகிய கவிதைகளில்.

இன்னும் வரும் 10/01/2014

ஒரு ஓவியனின் பண்புகள், "எழுத்து" பத்த்ரிகை அளித்த சந்தர்ப்பவசமாக, இங்கு தூரிகையையும், வண்ணங்களையும் தேடுவதற்குப் பதிலாக, சொற்களைக் கையாள வைத்துக் கவிதைகளைப் பிறப்பித்திருக்கின்றன. "நான்" கவிதையில் எழுந்த ஒரு கருவின், தெளிவும், உருவும் மங்கலாகத் தெரிந்த  ஒரு கருவின், படிமம் பரிணாமம் மாத்திரம் "மின்னல்", "விடிவு", கவிதைகளில் தெளிவும் உருவும் பெறுகிறது. "நான்" கவிதையில் மங்கலாகத் தொடங்கிய, தெளிவும் உருவம் பெறாத இன்னொரு பரிமாணமாகிய, உணர்வு மனவெழுச்சி "பயிர்" கவிதையிலும் தலைகாட்டியது. அதை "விடிவு", "மின்னல்" கவிதைகளில் நாம் காண்பதில்லை.அதன் தெளிவு, ரூப முதிர்ச்சியை "மறைவு" (எழுத்து - 36, டிசம்பர் 61) கவிதையில் காணலாம்.

ஆக இங்கு பரிமாணங்களும் கிளைவிட்டுப் பிரிவது ஆரம்ப காலங்களில்தான். பின் வருடங்களில், காட்சித் தோற்றத்திலும், உணர்வுப் பாங்கிலும் அவை எப்போதும் ஒன்றிணைந்து முழுமையாகின்றன.

இம் முழுமையின் சீரான பிரவாஹத்தை 60-ன் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று எழுதப்பட்ட "கன்னாடியுளிருந்து" என்ற குறுங்காவியம் வரை நாம் காணமுடியும்.

இப் பிரவாஹம் ஒரு மன--பிரபஞ்ச உணர்வுலகம். தெளிவிற்காக சற்று விரித்துச் சொல்வதானால், மனம் என்பது மன உள்வெளிப் பிரபஞ்சம், பிரபஞ்ச உணர்வு என்பது பிரபஞ்ச வெளி மன இயக்கம்.

இன்னும் வரும் 11/01/2014

மன உள் வெளி பிரபஞ்சமாக விரிகிறது (the inner cosmos of the mind). பிரபஞ்ச வெளியின் அனந்த விரிவு மன இயக்கமாக எழுச்சி அடைகிறது (the cosmos as the mind ). இவ்விரண்டும் ஒரு தனித்த புள்ளியிலிருந்து உள் நோக்கியும், வெளியில் விரிந்தும் பெறப்படும் பிரயாணம் என்று சொல்வது புரிந்துகொள்ள சாத்தியமாகத் தரப்படும் விளக்கமாகக் கொள்ளலாமே தவிர, அது உண்மையின் முழுப் பரிமாணமும் ஆகாது. இது தனித்த ஒரு புள்ளியிலிருந்து இரு வேறு பரிமாணங்களில் சஞ்சரிப்பது அல்ல. இவ்விரு உலகங்களும் பரிமாணங்களும் ஒன்றேயாகும். உதாரணத்திற்கு, உள் நுழைந்து வெளி நீளும் ஒன்றேயான டெலஸ் கோப் போல, உட்சுழன்று, விரிந்தாலும் நீர்ச் சுழல்போல, சுழற்காற்றுப் போல எனக் கொள்ளலாம். பிரைக்ஞையின் உள்நோக்கிய பிரயாணந்தான், பிரபஞ்ச வெளியின் அகண்டத்தைப் பார்வையில் அணைக்கும் முயற்சிதான் மன உள் வெளியின் பிரபஞ்சத்திற்கு இட்டுச் செல்கிறது. உபநிஷத ஞானிகள் தம் சிந்தனையை உள்நோக்கிய தியானம் அகண்ட பிரபஞ்சத்தைத் தரிசிக்க உதவியது. பிரபஞ்சத்தின் அனந்த வெளியை நோக்கிச் சென்ற அமெரிக்க அஸ்ட்ரோ நாட்'கள் ஒவ்வொருவரும் திரும்பி வந்தும் கண்டது உள் நோக்கிய மனச் சஞ்ச்சாரம்தான். வெறும் மனித யந்திரங்களாக பயிர்சிக்கப் பெற்று உருவாகிய ஒவ்வொரு அஸ்ட்ரோ நாட்'டும் பிரமிக்கத்தக்க வகையில், கவிஞர்களாகவும் தியானிகளாகவும், உலகு துறந்த ஆன்மிகர்களாகவும், மனிதகுல நேயர்களாகவும் மாறிவிட்டனர். இவ்வாறு மாறுவார்கள் என யூகிக்கக்கூட, அவர்களது விண்வெளிப் பிரயாணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் ஏதும் வாய்ப்பு இருக்கவில்லை. விண்வெளியின் சஞ்சாரம் அவர்கள் மனவியக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.விண்வெளியின் அகன்ற விஸ்தாரத்தில் (அதாவது) ஓர் இடபரிமாண அநுபவத்தில், உள் வெளி பிரபஞ்சத்தின் (அதாவது) உணர்வு பரிமாண அநுபவத்தின் தரிசனம் கிடைத்துள்ளது. ஏக சாதனா (இலக்கிய, மொழி ) விரதிகள் கவனிக்க வேண்டும்.

இங்குதான் நான் முன்னர் சொன்ன, வெளிவட்டத்தில் நிகழும் பரிமாண மாற்றத்தை, அல்ல, ஒன்றியைந்த கலப்பை, பார்க்கிறோம். திரும்பவும், பெருவட்ட அநுபவ உணர்வுலகு, சிறு வட்ட தொடக்கத்தைத் தன்னுள் அணைத்துக் கொண்டுள்ளது.

இன்னும் வரும் 12/01/2014

பிரமிள் பானுச்சாந்ரெனின் மன சஞ்சாரம், உள்ளுணர்வுப் பாங்கானது (intuitive). இடசஞ்சாரம் பிரபஞ்சத்தையே அணைத்து உறவாடும் தன்மையது. இந்த ஊஞ்ச்சலாட்டத்தை "நான்" கவிதையிலிருந்து, "கண்ணாடியுள்ளிருந்து" வரை காணமுடியும். தாயின் நினைப்பு, "ஒன்றுமற்ற பாழ் நிறைந்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்றவளிடம்" கொண்டு சேர்க்கிறது. ஆருமற்ற, சூனியம், தளமற்ற பெருவெளி, "இல்" ஆகிற்று. குரல் மண்டிப் போனது, இருள் முனகும் பாதையில் பிறந்திறந்து ஓடுவது, நான் என எஞ்சுகிறது.

கண்ணாடியுள்ளிருக்கும் தன்னை நோக்கிய விசாரம் பிரபஞ்சத்தின் அகன்ற விஸ்தாரம் முழுமையுமே அரவணைத்துக் கொள்கிறது. இட விஸ்தாரம் மன இயக்கமாக எழுச்சி பெறுகிறது. உள் மன இயக்கம் இட விஸ்தாரமாக விரிகிறது.

கண்ணாடியின் படிம விஷேசம், பார்வை சாதனா விஷேசம் இங்கு கவனத்திற்குரியது. கண்ணாடி நமக்கு நம்மைக் காட்டுகிறது.நமது பிரதிபிம்பத்தை,நமது வெளித் தோற்றத்தைக் காட்டுகிறது. நமது வெளித்தோற்றத்தின் கூரிய ஆராய்வு, நம்மிலிருந்து நம்மை வேறுபடுத்தி, ஆராய்பவனிலிருந்து ஆராயப்படும் பொருளை தனித்துக் காட்டுகிறது. ஒரு கூரிய பார்வை, தன்னை, "தான்"ஐ மறந்த பார்வை, வெளித் தோற்றத்தை ஊடுருவுகிறது. இது மன உணர்வு, இயக்க பரிமாணம்.

அதே சமயம்,

வேறு நோக்கில், இடவிஸ்தாரமாக, கண்ணாடி 'தன்'னின் இருப்பை மறைத்து, எல்லையற்ற ஒரு அகண்ட பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.சுற்றியும் உள்ள கண்ணாடிகள் (கண்ணாடிச் சுவர்கள்) சிருஷ்டிக்கும் பிரபஞ்ச வெளி, அதனுள் தோன்றும் கோடானு கோடி பிரதிபிம்பங்கள்:

வெறுமை மீது
ஒன்றை யொன்று உற்று நோக்கும்
இரண்டு கண்ணாடிகளினுள்
வெளியினுள் வெளி
எங்கும் கோடானு கோடி
பிரதிபிம்பங்கள்
கர்ப்பக் கிரஹத்து
வௌவால்களாய்த் தவிக்கும் நிழல்கள்

இங்கு இட-மன வெளி பிரபஞ்ச விஸ்தாரத்தில், இட-கால-மன பரிமாணங்கள் மடிகின்றன. உக்கிரமடைகின்றன.காலம் ஸ்தம்பிக்கிறது. ஒளிவருட வேகமும் கொள்கிறது. எது உண்மை? எது தோற்றம்? எது சத்தியம்? எது நிதர்சனம்?நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒரே புள்ளியில் சமைகின்றன. உணர்வுகள்,பிம்பத் தோற்றங்கள், படிமங்களாக எழுந்து மடிந்து ...

இன்னும் வரும் 13/01/2014

இவ்வுண ர்வுப் பிரவாஹம் படிமப் பிரவாஹம்,பிரபஞ்ச நீட்சி சிரமம் தரும். இப்பிரவாஹம் எனக்குள் பல ஞாபகங்களை எழுப்புகிறது. எல்லா ஞாபகங்களும் அலையாடி ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஒன்று: விண்வெளியில் பிரயாணம் செய்த அஸ்ட்ரோ நாட்'கள், காஸ்மோ நாட்'கள் மூலம் தெரிந்த பிரபஞ்ச வெளி அநுபவங்கள், அவர்களது அப்போதைய மன எழுச்சிகள், பரவசங்கள், பின்னர் அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of Perception என்ற புத்தகம். மெஸ்காளினைச் சாப்பிட்டுத் தன்னுள் அது நிகழ்வித்த  பிரக்ஞை மாற்றங்களை அநுபவங்களை அல்டஸ் ஹக்ஸ்லி அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார். அவரைப் போலவே ஹிப்பிகளும் நிர்மல ஆனந்தம் என, L.S.D.யையும், சரஸ்ஸையும் சாப்பிட்டு அனுபவம் தேடுகிறார்கள். இவ்வற்றின் உந்துதலைப் பற்றியெல்லாம் டிமொதி லிரி (Timothy Leary) எழுதியிருக்கிறார். இக்குறுக்கு வழிகளெல்லாம் மாரீஸத் தோற்றங்கள் என லீரியே ஒப்புக்குக் கொண்டிருக்கிறார். நம் மரபிலும், கஞ்சாவும், அபினியும் உண்ட யோகிகள் உண்டு. இந்த யோகிகளிடமிருந்துதான் ஹிப்பிகள் தங்கள் ஆனந்த மார்க்கத்தைக் கற்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஆதர்ஸனமாக இருந்தது நம் மரபின் புராதன ரிஷிகளின் தியான வழித்தேட்டை. தியான வழித் தேட்டை நிச்சயமானது. முறையும் உண்மையும் ஆனது. மனக் கட்டுப்பாட்டிற்கு அடங்கியது. அல்டஸ் ஹக்க்கியும், ஹிப்பிகளும் தேடுவது நிச்சயமில்லாதது. அநுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை L.S.D.யோ மற்றதோ உட்கொள்ளுமுன் நிர்ணயிக்க இயலாதது. நிகழப் போவது நிர்மல ஆனந்தமா, அல்லது பயங்கர சொப்பனமா என்பது எவ்வளவு நீண்டகால, சரஸ், L.S.D.பழக்கத்திலும், பயிற்சியிலும் தீர்மானிக்க இயலாதது. ஹிப்பிகளுடன் உடன் சேர்ந்து சோதனை செய்த டிமொதி லீரி (Timothy Leary) இதையெல்லாம் உணர்ந்து சொல்லியிருக்கிறார். இந்த அநுபவ மனமயக்கம் பிரக்ஞையின் பேதலிப்பு. இருப்பினும் இவையெல்லாம் (ஹிப்பிகளின் அநுபவத்தில் பல சமயங்களில் நேரும் பயங்கர சொப்பனங்களைத் தவிர்த்து) ஒரு படிம ஒற்றுமை கொண்டவை. ஆனால் சுயமன எழுச்சி அற்றவை.

இன்னும் வரும் 14/01/2014

எதற்காக இவ்வளவும் சொல்ல நேர்ந்தது என்றால் பானுச்சந்ரெனின் "கண்ணாடியுள்ளிருந்து" காவியத்தில் தோன்றும் படிமங்கள் இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தியும், ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்,மேற்சொன்னவர்கள் எல்லோரின் அக்கண அனுபவத்திற்கும், அவர்களது எஞ்சிய வாழ்க்கைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஒன்றிற்கொன்று உறவு கொண்டு பிறப்பன அல்ல. அது மாத்திரமல்ல இவை பானுச்சாந்ரெனின் கவிதை இயக்க முழுமையுடனும் இக்காவியத்தின் படிமப் பிரவாஹம் உறவு கொண்டது. எல்லாமே ஒரு முழுமையும், சம்பந்தமும் கொண்டவை.

"கண்ணாடியுள்ளிருந்து" குறுங்காவியத்தின் படிமப் பிரவாகமும், உணர்வு எழுச்சிகளும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவை. பிரக்ஞை விழிப்பில் உள்ளுணர்வின் (intuitive) இயக்கத்தில் பிறப்பவை. ஒவ்வொன்றிற்கும் ஆதார நிதர்ஸனம் உண்டு.

"தசைச் சுவர்கள் வீசும் இப்
புவன நிழல் வெளியில்
சுடர்கள் ஆடுகின்றன
ஒவ்வொரு சுடரும்
பெண்குறி விரிப்பு
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி
(எனத் தொடர்ந்து)

....   ....   ....   ....

கண்ணாடி
இக்கணம்.
இக்கணம்,"  (வரை)

இது போல ஒவ்வொன்றிற்கும் ஆதார சிந்தனை உண்டு.

"மூடிய கதவின்
சாவித் துவாரத்தில்

(இங்கே ஒரு பக்கம் விடுபட்டிருக்கலாம்)

இன்னும் வரும் 15/01/2014

தர்சனம்

புதுக்கவிதை என்ற பெயர் தற்காலீகமானது. கவிதையின் பெயர் கவிதையே. இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள்; செய்யப்பட்டவை. கவிதை எல்லாவகையான சொற்களையும் உதறுகிறது.நிதர்சனத்தில் திளைக்கிறது. யாப்பு என்ற திட்டமிடப்பட்ட உருவத்தை துறக்கும் கவிஞன் ஒரு புதிய உருவை நாடி இத்துறவை மேற்கொள்ளவில்லை.நிதசர்ணத்தை உணராத செய்யுள் வாதிகள், யாப்பு என்ற உருவில் ஒரு சௌகர்யத்தைக் கண்டு அதன் கதிக்குள் இயற்கைப் பொருள்களின் வர்ணனைகளையும், சாமான்ய மனிதனுக்குக்கூடத் தெரியும் அற முறைகளையும் அதீதமானவை என்று பிரமை காட்டி எழுதினர். இவர்கள் ஆழ்ந்த வாழ்வின் அதீத ரகசியங்களையோ மானுஷ்ய தர்மங்களையோ உணராதவர்கள். பிரத்தியட்சத்தின் மீது காதல் கொண்ட மனிதன் செய்யுள் வாதியிலிருந்து உயர எழுந்து ஸ்தூல நிதர்சனங்கள் வாழ்வின் அதீத ரகசியங்களுக்குக் குறியீடுகளாக, தார்மிக சக்திக்கு உரமாகக்கண்டான். போலி வர்ணனைகளையும் போலி தர்மங்களையும் துறந்தான். அந்தத் துறவோடு உடனிகழ்வாக யாப்பையும் துறந்தான். கவிதை தமிழில் புனர்ஜன்மம் பெற்ற கதை இது.

வசனத்தை உடைத்துப்போட்டு கவிதையை சாதித்துவிட முடியாது.

இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள், சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள். பஸ்கள், பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராஷஸ சொரூபமான கட்டிடங்களிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி, கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய், மறையும் நண்பர்கள். இவையாவும் பிரத்தியட்சம். யாப்பின் கதிக்கு இந்த பிரத்தியட்சத்தில் இடமேது? எமது இன்றைய பிரக்ஞையின் இந்த சீரற்ற ஒரு புதிய தன்மையில் யாப்பு அங்கதத்திற்கே உதவும்.

In the room women come and go Talking of Michelangelo
என்ற வரியிலும்
I grow old, I grow old
I shall wear the bottoms of my frousers rolled
என்ற வரியிலும் சப்தம் அதீத உணர்வுக்காக உபயோகமாகவில்லை. கேலிக்கு அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று.

பண் என்பார் பாட்டென்பார்
கண்ணைச் சொருகிக் கவியென்பார்
அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?

என்ற யாப்புருவம் கேலிக்கே -- அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று. அன்றைய சாவதானம் இல்லை. எனவே சாவதானத்தில் விளைந்த யாப்பு எமது பிரக்ஞையின் நடுவே நிகழும் போது அங்கதமாகிறது.பழைய வாழ்வின் கதியையோ, நாம் அதன் யாப்புருவோடு சேர்த்தே பருகுகிறோம்.

இன்னும் வரும் 16/01/2014

சீரும், அடியும், தளையும் யாப்பின் ஆதாரங்கள். சப்த அணிகளையும் யாப்பு மேற்கொள்ளும். இந்த அம்சங்களிலேயே உழல்வது சௌகர்யம். செய்யுள்வாதிகள் கவிதை என்ற ஆதாரத்தை இழந்தே இந்த உழலில் ஈடுபட்டனர். கவிதை என்பது அதன் பொருளாகவே உருப் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய சித்தாந்தம். நிதர்சனத்தை ஹ்ருதயமும் புத்தியும் தத்துவ தார்மிக உணர்வும் கொண்ட கண்களோடு சந்தித்தால்தான் 'பொருள்' என்ற அம்சம் செழிக்கும். செய்யுள்வாதிகளோ புலமைவாதிகளாயினர்.பழைய கவிஞர்களும் புலவர்கள் என்றே அவர்களது சமயத்தில் அழைக்கப்பட்டிருந்ததால் புலமையை நூல்களின் மூலமும் செய்யுள் இயற்றும் பயிற்சி மூலமும் பெற்று இவர்களும் புலவர்களாயினர். இதன் அபத்தத்தை உணர்ந்து பழைய புலவர்களை இந்த புதிய புலவர்களிளிருந்து பிரித்த கவிஞன்,

கண்டவன் கலைஞன்
பொருள் சொன்னவன் புலவன்
என்ற புதிய சித்தானந்தத்தை எழுதினான்.

இன்றைய கவிஞனுக்கு யாப்பின்மை ஒரு குற்றமாக முடியாது. கவிதையின் பொருளம்சத்தில் குற்றம் இருக்கக் கூடாது என்பதே இவனது அக்கறை. தங்கள் தங்கள் அளவில், அந்தந்த பிரசுர கர்த்தாக்கள் இன்று தமது திறமைக்கேற்ப பொருளம்சத்தையே யாப்பற்ற கவிதைகளில் முக்கியமானதாகக் கண்டு அந்த அடிப்படையிலேயே கவிதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கேதான் கூறியது கூறல்,மிகைப்படக் கூறல், சென்று தேய்ந்திறுதல் என்றெல்லாம் பொருளம்சத்தைப்பற்றிக் குறிப்பிட்ட குற்றங்களை அவதானிக்கும் சாத்யம் இருக்கிறது. இது போன்ற குற்றங்கள் எக்காலத்திலும் குற்றங்களே. யாப்பை மீறிய கவிதை பிறக்கக் காரணமே யாப்புருவக் கவிதையுள் இவ்வகைக் குற்றங்கள் களைகளாக வளர்ந்து மலிந்தமைதான் என்போரும் உளர். களைகளைப் பிடுங்கி எறிந்த போது ஒழுங்கற்று, திட்டுத் திட்டாக உண்மையான கவிதைப் பயிர் தெரிந்த நிலைமை யாப்பின்மையாயிற்று. அதுவே ஓர் அழகாயிற்று.

இன்னும் வரும் 17/01/2014

யாப்பற்ற கவிதைக்கு யாப்பாக அமைவது பொருளின் ஒழுங்கு. வசனத்தை உடைத்துத் தூவி இந்த ஒழுங்கை நிகழ்விக்க இயலாது. அறிவிற்கு போருட்கிடை தரும் அதிர்ச்சிகளின் ஒழுங்கிற்கேற்பவே யாப்பற்ற கவிதையின் வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது வசனத்தை உடைத்துத் தூவுவதாகாது.

வசனத்தை
உடைத்துப்
போடுவதல்ல
கவிதை

என்ற ஒழுங்கு எவ்வித அதிர்ச்சியையும் தரவில்லை. எனவே இது செய்யுள்! யாப்புருவினுள் மட்டும் அல்ல, யாப்பற்ற உருவினுள் கூட செய்யுள் சாத்தியம் என்பதற்கு இன்றைய நிலைமையில் ஆதாரங்கள் உள. விகடக் கூற்றுக்களை மேற்படி ஒழுங்கைப் போன்ற வகையில் உடைத்துப் போட்டுப் பிரசுரித்துக் கொள்வோருமுளர்.

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் என்று
விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன
வாயேன்.

என்ற ஒழுங்கு செய்யுள்தான். இதை வசனமாக எழுதிப்பார்த்தால் தன போலித்தன்மையை இது காட்டி விடுவதை உணரலாம்.

நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன, வாயேன்.

ஒரு முதிர்ச்சியற்ற, மனிதத்தன்மையற்ற, செக்ஸின் ஆழத்தை உணராத இளம்பிள்ளை (adolescent) மன நிலையில் பிறக்கும் விகடத்தனமான கூற்று. இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப்படாது.

மேலே உள்ள இரண்டு உதாரணங்களில் வரிக்கு வரி நாம் நிறுத்த வேண்டிய அவசியத்தை அந்த வரிகள் ஏற்படுத்த வில்லை. 'வசனத்தை' என்ற பிரயோகம் ஒரு தனி வரியாக நிகழ வேண்டுமானால், அது பொருள்வழியில் நிகழ வேண்டும். அவ்வரியின் பொருள் தொடர்ந்து வரும் சொல்லான 'உடைத்து' என்ற வரியுடன் வசன கதியில்தான் உறவு கொள்கிறது.எனவே இந்த வரிக்குத் தன்நிகழ்வு இல்லை.

'நிரோத் உபயோகியுங்கள் என்று....
என்று? அதற்கப்புறம்?

'விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன' அதுதான் தெரியுமே, என்று சலித்துக் கொள்கிறோம். 'நிரோத் உபயோகியுங்கள் என்று' என நிறுத்தப்பட்டவுடன் நாம் தயாராவது ஒரு அதிர்ச்சிக்காகும். கடைசி வரியான 'வாயேன்' கூட அறிவுக்கு அதிர்ச்சி தரவில்லை. முகச் சுளிப்பையோ கேலியுணர்வையோதான் தருகிறது. அறிவு அதிர்ந்து விரியவில்லை.

கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கிறேன்,
சுமைமாற்றி, ஏதேனும்
இருக்கலாகாதா?

இன்னும் வரும் 18/01/2014

இங்கே ஒவ்வொரு வரியும் தன்னிகழ்வு பெறுகிறது. 'கழுத்திறுக்க, கண்பிதுங்க, நெற்றியில் வேர்வை முத்தாகி உருண்டோட, சந்தைக்கு சுமையோடு செல்கிறேன். சுமைமாற்றி ஏதேனும் இருக்கலாகாதா?' என்று இதை வசனமாக எழுதிப் பார்க்கும் போதும் நாம் இதை வாசிப்பதும் கவிதையின் கதியில்தான். நெற்றியில் வேர்வை' என்றவுடனேயே நம் பிரக்ஞை நிற்கின்றது. காரணம் கழுத்திறுக்க-- கண்பிதுங்க--என்று ஒரு பெரிய பாரத்தைச் சுமப்பதன் விளைவுகள் நின்று நின்று பிறந்து முதல் இரண்டு சொற்களுமே தனித் தனி வரிகளாக ஒரு கதியை ஏற்படுத்துவதுதான். ஒரு புடவையை வித்துக் கிடத்தி அதன் ஒரு கோடியில் பிடித்து உதறி ஓர் அலையைப் பிறப்பித்ததும் அவ அலை புடவையின் முழுப் பரப்பிலும் ஓடி வருவது போல, முதல் இரண்டு வரிகளிலும் ஏற்பட்ட லயம் முன்றாவது வரியிலும் தொற்றிக் கொள்கிறது. நான்காவது வரி ஆரம்பம் 'நெற்றிக்கும் முத்து'க்கும் ஒற்றேளுத்துச் சப்த உறவு கொண்டு எதிரொலிக்கிறது. 'சந்தைக்குச் சுமையோடு' என்ற வரிக்கு அடுத்து 'செல்கிறேன்' ஆரம்பித்து ச, செ யிலுள்ள சகர உறவோடாகும்.

இங்கே இக்கவியே குறிப்பிடும் வகையாக சப்த அணிகூட ஒரேயடியாக நீக்கப்படவில்லை. சிக்கனமாகிறது. "சவுக்கந் தோப்பினூ டே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி அளவுக்கு சப்தம் சிக்கனமாகிறது.

இக் கவிதை வரிகளில் வரிக்கு வரி ஒருமனநிலையின் பிரதிமை படிப்படியாக எழும்புவதில்தான் அறிவு விருந்தடைகிறது. படிப்பவன் மௌனம் கொள்கிறான். பிரத்தியட்ச வாழ்வின் பங்கங்களில் ஒன்றைக் கவியோடு பகிர்ந்து கொள்கிறான். 'முத்தாகி உருண்டோட'என்பது வரை ஒரு கடினமான சமயத்தில் உடல் கொள்ளும் இயல்புகள். சந்தைக்குச் சுமையோடு செல்கிறேன் என்றதும் இயல்பின் காரியம் காரணம் கொண்டு விரிவடைகிறது. கவி வெறும் ஸ்தூலச் சுமையைப் பற்றிப் பேசவில்லை. 'சுமை'என்ற ஸ்தூல நிதர்சனம் ஒரு ஆழ்ந்த பரிமாணத்திலுள்ள நிதர்சனத்துக்கு இட்டுச் செல்கிறது.

கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
தானே அழுதழுது
பிள்ளைபெற வேணுமென்று
நெஞ்சற்ற டாக்டர்களும்
முதியவரும் சொன்னபடி
செய்ய முயன்றேன்,
முயல்கிறேன்.
இடுப்பில் கையும்
இருளூடே முனகலுமாய்
ஒடிந்து குமைகின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
உணர்வை விளக்கி
உள்ளொளியை எள்ளி
தன்னறிவு வழிச் செல்லும்
தனிச்சுமையை ஏற்று
வாழ்வின் அடிப்படையைக்
குடைந்தறிய முற்பட்டேன்
சப்பாத்திப்பழம் சடைத்த
வெறுமையே வாழ்வாயிற்று
வேதனையே அரசாயிற்று......

சரீரத் தளத்திலிருந்து கவி சுமை என்ற படிமத்தை ஆன்மிக பிரச்னை வரை ஈர்த்துச் செல்லும் ஒழுங்கு அற்புதமானது.

இன்னும் வரும் 19/01/2014

இது புலனாகிய பின்பு மீண்டும் 'கழுத்திறுக்க' என்று இரண்டாவது தடவை படிக்கிறோம். முதற் சொல்லே அதிர்ச்சி தருகிறது.தன்னறிவின் தனிச்சுமைக்கும் இந்த கழுத்திறுப்ப்தற்கும் உள்ள உறவு இப்போது பலமாகிவிட்டது. எனவே திரும்பத் திரும்பப் படிப்பதற் கேற்ப எதிரொலிகளின் செறிவு உள்ளதுதான் கவிதை. நிரோத்தைப் போன்று உபயோகித்து விட்டு கழற்றி வீசுவதற்கல்ல கவிதை.முன் குறிப்பிட்ட நிரோத் 'கவிதை'யில் 'வாயேன்' என்ற பிரயோகத்தோடு 'கவிதை' தீர்ந்தே விடுகிறது. திரும்பப் படித்து அதிசயிக்க அங்கே ஏதுமில்லை.

துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்

மேலே குறிப்பிட்ட 'ஓயுமொலி' என்ற அம்சம் கூட குறைவாகவே உள்ள கவிதை இது. இங்கே உடைவு நேர்வதற்கு, சப்தத்தின் அனுகூலம் கிஞ்சித்தும் இல்லை. பொருளே யாப்பு. 'கோடு'என்பது ஒரு குணம். இரும்புக் 'கோடு'என்ற பிரயோகம் ஒரு அதிர்ச்சி தருவது.'துருப்பிடித்த' அம்சத்தில் நிறுத்துவதானால் நாம் எதற்கோ தயாராகிறோம். எதிர்பார்த்ததற்கேற்ப இரும்புக்கோடுகளினூடே, என்ற பிரயோகம் 'துறுத்' தன்மையையும் ஏற்று அதிர்வுதந்து விரிகிறது.'இரும்புக்கோடு' என்பது தனிச் செறிவுள்ள பிரயோகம். எனவே தனிவரியாகக் கூடியது. இத்தகைய தகுதி பெறாத பிரயோகங்கள் ஒன்றன் பின்னாக  ஒன்று வந்தும், கவித்துவத்தின் சாயலே மிகுதியாக உள்ள பிறவிகளைத்தான் 'வசன கவிதைகள்' என வேண்டும். 'சிதறும்' 'பயனற்ற' என்று நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சிதறல், பயனின்மை ஆகிய இரண்டு தன்மைகளும் தனித் தனியாக அழுத்தம் பெருவதாலாகும். தொடர்ந்து  வரும் பிரயோகத்தைக் கவனித்தால் அது, இதுவரை வந்த பிரயோகங்களை வெற்றென விளக்குவதாக இல்லை.விளக்கி விரிவு கொள்வதாகவே உள்ளது. 'சிதறும் பயனற்ற அலைகள்' என்றிருந்தால் வெற்றின் விளக்கம். அதே சமயத்தில் தர்க்கத்துக்கு ஒவ்வாதது. அலைகள் சிதறலாம். பயனற்றவையா? என நம் அறிவு முகம் சுளிக்கும்.பயனின்மைக்குக் காரணம் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால்

சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்

எனும்போது, 'அலைகள்' என்று குறிப்பிடாமலே 'அலைகள்' குறிப்பிடப்பட்டு, பயனின்மைக்கு உப்பு நீரும் இணங்கி விரிகின்றன. முன்னிரு வரிகளும் மூன்றாவது வரியில் பொருள்வாயிலாகக் கலக்கிறது. இக்கலப்பிலேயே அறிவு சமாதானம் கொள்ளும், விரியும்,வியப்படையும். இக்கலப்பு 'அலைகள்' என்ற பிரயோகத்தில் நிகழாமல் அறிவும் ஏமாறும். வெறுப்படையும்.தொயும். கவிதையும் ஊர்வனவற்றைச் சாரும்.

இன்னும் வரும் 20/01/2014

தீட்சண்யத்தோடு இயங்கக் கூடியவனுக்குத்தான் கவிதையுலகில் இடமுண்டு. வரிக்கு வரி பொருளம்சத்தில் தர்க்கம் நிகழ்ந்துகொண்டு போவதுதான் சிருஷ்டி முறை. இன்றைய பெரும்பாலான யாப்பற்ற கவிதைகளிலோ இந்த தீட்சண்யம் இல்லை. ஒரு புறத்தில் விகடக்கூற்றுக்களும், ஹிருதய மின்மையையே 'பரிசோதனை' என்று சொல்லி உருவாகும் பிதற்றல்களும்,மறுபுறத்தில் கட்சி அரசியலுக்கு ஒத்தூதி அதீத சொற்பிரயோகங்களை எவ்வித கவித்வ நியாயமுமற்று அடுக்குவோரும் மலிந்திருக்கின்றனர்.பயங்கர ஆடை மொழிகளை இவ்வகையினர் கவித்வ தர்க்கம் அற்று பிரயோகிக்கின்றனர்.

அடைமொழிகளின் கடமையை பெயர்ச சொற்களும் வினைச் சொற்களும் ஏற்று தனித்து வரும்போது கவிதையின் உறுதி பெருகுகிறது. அடைமொழி உபயோகப்படும் பட்சத்தில், அது பெயர்ச் சொல்லுடன் பின்னிப் பிணைந்து தீவிரம் பெற்றாக வேண்டும். இன்றைய பிரக்ஞையில் சாங்கோபாங்கமான அடைமொழி அடுக்குகளுக்கு இடமில்லை.அத்தகைய அடுக்குகள் யாப்பின் சாவதான பிரக்ஞியைச் சார்ந்தவை.அடைமொழியும் உவமையும் எழுவாய்ப் பெயரைவிட்டுத் தனித்து நிற்பவை. எனவே எழுவாய்க்கு, வினைக்கு,கவிதைக்கு தீவிரம் தரமாட்டாதவை. இந்நிலையில் இருமுறைகள் கையாளப்படும் சமயத்தில் இவை புதிய பிரக்ஞையின் படிமங்களாகவே பிறந்தாக வேண்டும். இன்றைய பிரத்தியட்சத்தின் கவி நிகழ்ச்சிகளாக வேண்டும்.

இன்னும் வரும் 21/01/2014

இனி,
கவிதையில் ஏற்படும் சிக்கல் தெளிவின் அடிப்படையில் நிகழ்ந்தாக வேண்டும்.

சிலையை உடை
என் சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு

உறுதிமயமான சிலையை உடைக்கும்படி சொல்வது தெளிவாகிறது. கடலோரம் காலடிச் சுவடு இருப்பதும் தெளிவாகிறது. இரண்டு பிரயோகங்கள். மற்ற பரிமாணங்களும், அனுபவங்ககளும், கலைச் சாதனங்களும் இலக்கியத்துடன் சம்பந்தமற்றவை என்பவர்கள், எங்கோ பெரும் தவறு செய்கிறார்கள். இத்தகையவர்களின் இயக்கமும் சாதனையும் கலையாவதில்லை.

அது வெறும் தொழிற்திறன். சொல்வழி தொழிற்திறன். வியாபாரப் பொருள். சத்தியத்தின் தரிசனமற்றது. தச்சன் மரத்தைக் கையாளுவதைப் போல, சொல் அவர்களது படைப்புகளுக்கு ஒரு மரச் சாதனம். வியாபார raw material. இவ்வாறான அஞ்சறைப் பெட்டி நோக்கு (அனுபவம் ஓர் அறையில், படிப்பு ஓர் அறையில், சொந்த வாழ்வும் தர்மமும் ஓர் அறையில்,எழுத்து ஓர் அறையில்.....) இத்தொழில்  காரர்களுக்கு பல சௌகர்யங்களைக் கொடுக்கிறது.

மனித நேயமற்றவர்கள், சதிக்குணம் கொண்டவர்கள், சூழ்ச்சி மனத்தவர்கள், சுயநலக்காரர்கள், மற்றவர்களை அழுத்தி தான் முன்னேற விரும்புகிறவர்கள் எல்லாம் மிக அழகாக கேடிழைக்கப்படும்.பரிதவிக்கும் மனிதர்களுக்காக, அல்லல்படும் ஜீவன்களுக்காக இரக்கம் சொட்டச் சொட்ட கண்ணீர் உகுத்துக் கதைகள் புனையலாம், மிகுந்த தொழில் திறனோடு.

சுல்ச்சிக்காரனும், சதிகாரனுமான தச்சன் செய்த நாற்காலி பயனுள்ளதாகவே இருக்கும்.ஏன்னெனில் தச்சனின் மனத்திற்கும் நாற்காலிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கற்பழிப்பை அன்றாட வேலையாகக் கொண்டவர் செய்யும் ராமாயணக் காலட்சேபம் அசத்தியமாவது போல, வெறும் தொழில் ஆவது போல சூழ்ச்சிக்காரனும் சதிகாரனுமான ஒருவன் எழுத்தும் கைத்திறன் வாய்ந்த எழுத்தில், நிறைந்து வழியும் இரக்கமும் கருணையும் அசத்தியமானது.

ஏன்னெனில் தான் வாழ்வுக்கும் எழுத்துக்கும் பொதுவாகவும் ஒருமையாகவும் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கவேண்டிய மனவெழுச்சி,இங்கு முரண்படுகிறது. எழுத்துக்கு வரும்போது தான் வாழ்வுண்மைக்கு மாறான ஒரு அசத்திய மனவெழுச்சி தயார் செய்து கொள்ளப்படுகிறது.

அந்தத் தயாரிப்புப் பொருள் தொழிலுக்கு வேண்டிய raw material. அவன் எழுத்து வெறும் தச்சு வேலை.

இருப்பினும் எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? எழுத்து நன்றாக இருக்கிறதா இல்லையா பார் என்கிறார்கள்.இது தொழில் திறனுக்கும் சத்திய தரிஸ னமேயாகும் கலைக்கும் வித்தியாசம் தெரியாத குறைதான்.

மனித நேயமும், 'தான்' அழிந்த பார்வையும் அடிப்படையான தர்மங்களும் சத்தியத்தின் பரிமாணங்கள் எனக் காணாது, 'இலக்கியக் குறி' கொண்டவர்களுக்கு மேற்கண்ட தொழில் திறனாளர்கள், இலக்கியாசிரியர்களாகத் தென்படலாம். சத்தியத்தின் இக்குறியிட்ட பரிமாணங்கள் அற்ற மனிதனும் அவன் தொழில் திறனான எழுத்தும் வேறுபடும் பொழுது அவ்வெழுத்து கலையோ.இலக்கியமோ ஆகாது என்பது இன்னும் நம் 'பெருந்தகைகள்' பலருக்குத் தெரியவில்லை. மனிதனும் எழுத்தும்,பார்வையும், அடிப்படை தர்மங்களும் வேருபடுத்தப்படமுடியாத ஒரு முழுமை. அம்முழுமை புரிந்துகொள்ளப்படும் பொழுது,பிரமில்  பானுச்சந்ரென் அவர் கவிதைகள், அவர் அநுபவ உலகம், அவர் எழுத்துக்கள், ஓவியங்கள், சிந்தனை நிலை, இன்னும் மற்றவை எல்லாமே வேறுபடுத்தப்படி முடியாத ஒரு முழுமையாக இருப்பதை  நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

வெங்கட் சாமிநாதன்
புதுடில்லி
ஜனவரி  16 1973

இன்னும் வர இருப்பது பிரமில் பானுசாந்ரெனின் 'கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு.

22/01/2014