* வரலாற்று காலத்துக்கு முன் - இராவணன் ( சைவ சமயத்தவன் ,வட இந்திய வைணவ சமயத்தவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிட்டான்)
* கிமு ?? - கிமு 6ம் நூற்றாண்டு வரை (நாக நாடு/நாகதீபம் - நாகர் இன மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் , தலைநகர் - பூநகரி மற்றும் கந்தரோடை )
#ஈழத்தின் தலைநகராக அனுராதபுரம் இருந்த போது ஆண்ட தமிழ் மன்னர்கள்
* கிமு 367 - கிமு 307 - மூத்தசிவன்
* கிமு 307 - கிமு 267 - தேவநம்பிய தீசன் (சைவ சமயத்தவன் ஆனால் பின்னாளில் இவன் வட இந்தியாவிலிருந்து வந்த அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்த தேரர் என்ற பௌத்த துறவியின் மூலம் பௌத்த மதத்தை தழுவினான் மக்களில் சிலரும் மன்னனை பின்பற்றினர் )
* கிமு 257 - கிமு 247 - மகாசிவன்
* கிமு 237 - கிமு 230 - சேனன்
* கிமு 230 - கிமு 215 - குத்திகன்
* கிமு 205 - கிமு 161 - மாவீரன் எல்லாளன் ( அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு முன்னர் ஆண்டு வந்த இவனின் தந்தையை அசேலன் என்ற தென் ஈழ சிங்கள மன்னன் போரில் வென்று அனுராதபுர ஆட்சியை கைப்பற்றி (கிமு 215- கிமு 205) வரை வைத்திருந்தான் அப்போது சிறுவனாக இருந்த இளவரசன் எல்லாளன் தமிழகம் (முற்கால சோழ நாடு) தப்பி சென்றான் பின்னர் பராயம் அடைந்ததும் மீண்டும் அங்கிருந்து படையெடுத்து வந்து அனுராதபுரத்தை கைப்பற்றி 44 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தான். இவனை பல முறை போரிட்டும் வெல்ல முடியாது இருந்தனர் பல தென் ஈழ சிங்கள மன்னர்கள். இறுதியில் வயோதிபமடைந்த எல்லாளனை துட்ட காமினி என்ற தென் ஈழ சிங்கள மன்னன் வஞ்சகமாக தனிசமருக்கு அழைத்து வீழ்த்தி அனுராதபுர ஆட்சியை கைப்பற்றி கொண்டான் இந்த துட்ட காமினியே சிங்கள பௌத்த மக்களால் தமது மாவீரனாக கருதப்படுகிறான் , எல்லாளனின் மறைவுக்கு பின் ஒரு லட்சம் வரையான தமிழர்கள் மற்றும் தமிழ் படைவீரர்கள் அனுராதபுரத்தில் துட்டகாமினியால் தலை கொய்யபட்டு படுகொலை செய்யபட்டார்கள் )
#பஞ்ச_பாண்டியர்_படையெடுப்பு (கிமு 103- கிமு 88 ) - தமிழகம், பாண்டிய நாட்டிலிருந்து படைதிரட்டி வந்து அனுராதபுர ஆட்சியை மீள கைப்பற்றிய ஐந்து தளபதிகளே பஞ்ச பாண்டியர் என அழைக்கபடுகின்றனர் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக தம்மில் அரசாள்பவனை கொலை செய்து ஆட்சியை பிடித்தனர்
* கிமு 103 - கிமு 100 - புலாகதன் (பஞ்ச பாண்டியருள் முதலாமவன் , இவன் அமைச்சனாக வைத்திருந்த பாகியனால் கொல்லபட்டான்)
* கிமு 100 - கிமு 98 - பாகியன்
* கிமு 98 - கிமு 91 - பாண்டிய மாறன்
* கிமு 91 - கிமு 90 - பழைய மாறன்
* கிமு 90 - கிமு 88 - தாட்டிகன் (இறுதி பஞ்ச பாண்டியன் , வலகம்பன் என்ற சிங்கள மன்னன் இவனை போரில் வீழ்த்தி அனுராதபுர ஆட்சியை கைப்பற்றினான்)
#இராசராட்டிரப்_பாண்டியர்கள்_ஆட்சி (கிபி 436 - கிபி 463) தமிழகத்தில் களப்பிரர்கள் என்ற அரசர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்ட போது பாண்டியர் வம்சத்திலிருந்து இலங்கைக்கு படையெடுத்து சென்று அரசாண்ட பாண்டிய மன்னர்களாவர்.
* பாண்டு (பாண்டியன்) கிபி 436 - 441
* பரிந்தன் கிபி 441 - 444
* இளம் பரிந்தன் கிபி 444 - 460
* திரிதரன் கிபி 460
* தாட்டியன் கிபி 460 - 463
* பிட்டியன் கிபி 463
* கிபி 992 - கிபி 1007 ராஜராஜ சோழன் (வட ஈழத்தை கைப்பற்றினான் 1000 வருடங்களுக்கும் மேலாக ஈழ தீவில் தமிழ் மற்றும் சிங்கள மன்னர்களால் மாறி மாறி தலைநகராக கொண்டு ஆளப்பட்ட அனுராதபுரம் நகர் அடித்து நொருக்கபட்டது , ராஜராஜ சோழன் பொலநறுவையை புதிய தலைநகர் ஆக்கினான்)
* கிபி 1007- கிபி 1044 ராஜேந்திர சோழன் (முழு ஈழ தீவையும் கைப்பற்றி ஆண்டான்)
* கிபி 1044 - கிபி 1070 சோழர் நிர்வாகம் (கிபி 1070 வரை பொலநறுவையை தலைநகராக கொண்டு சோழர் நிர்வாகம் இருந்தது , 1045 வரை காட்டுக்குள் மறைந்து வாழ்ந்து வந்த விஜயபாகு என்ற சிங்கள இளவரசன் 1070 வரை தொடர்ந்து சோழரை எதிர்த்து போராடி இறுதியில் பொலநறுவையை மீள கைப்பற்றினான் )
* கிபி 12 ம் நூற்றாண்டு - உலக நாச்சியார் (சிற்றரசி , தலைநகர் மட்டக்களப்பு- மண்முனை)
* கிபி 1223 - கிபி 1260 - சோழகங்க தேவன் / குளக்கோட்டன் ( ஆண்ட பகுதி தென் தமிழீழம்/கிழக்கிலங்கை , தலைநகர்- திருகோணமலை )
#யாழ்ப்பாண_ராஜ்ஜியம் மற்றும் #வன்னி_மண் - யாழ்ப்பாண ராஜ்ஜியம் நல்லூரை தலைநகராக கொண்டு ஆழப்பட்ட வட தமிழீழ பகுதியாகும். இதன் தெற்கே இன்றைய முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியே வன்னி மண் ஆகும், இதில் பெருமளவு சிற்றரசுகள் இருந்தன இவற்றை வன்னியர்கள் ஆண்டார்கள். வன்னி மண் யாழ்ப்பாண ராஜ்ஜியத்திற்கு தெற்கில் ஓர் வலுவான பாதுகாப்பு அரணாக இருந்தது. வன்னிசிற்றரசர்கள் சிறிய படைகளை வைத்திருந்த போதும் மிகவும் வலிமை மிக்கவர்களாகவும் மண்டியிடாது மூர்க்கதனமாய் போரிடுபவர்களாகவும் இருந்தனர் இதனால் இவர்களை தாண்டிசென்று/போரிட்டு வென்று தெற்கு இலங்கையில் இருந்த இரண்டு சிங்கள ராஜ்ஜிய மன்னர்களாலும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடியவில்லை)
**யாழ்ப்பாண ராஜ்ஜிய மன்னர்கள்**
* கிபி 1210-1246 கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி
* கிபி 1246 - 1256 குலசேகர சிங்கையாரியன்
* கிபி 1256-1279 குலோத்துங்க சிங்கையாரியன்
* கிபி 1279 - 1302 விக்கிரம சிங்கையாரியன்
* கிபி 1302-1325 வரோதய சிங்கையாரியன்
* கிபி 1325-1348 மார்த்தாண்ட சிங்கையாரியன்
* கிபி 1348-1371 குணபூஷண சிங்கையாரியன்
* கிபி 1371-1394 வீரோதய சிங்கையாரியன்
* கிபி 1394-1417 சயவீர சிங்கையாரியன்
* கிபி 1417-1440 குணவீர சிங்கையாரியன்
* கிபி 1440-1450 கனகசூரிய சிங்கையாரியன் ( வடக்கே தமிழகமும் தெற்கே வன்னி சிற்றரசர்களும் பாதுகாப்பு அரணாய் இருந்ததால் எதிரிகள் இன்றி உல்லாசமாய் அந்தபுரத்தில் பொழுதை கழித்தபடி யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்த கனகசூரியன் 1450 ல் கோட்டே சிங்கள ராஜ்ஜியத்திலிருந்து படையெடுத்து வந்த செண்பக பெருமாள் கடுமையாக எதிர்த்து போரிட்ட வன்னி சிற்றரசுகளை வென்று யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்குள் புகுத்ததும் எதிர்த்து போரிட படைகள் தயார் நிலையில் வலுவாக இல்லாததால் வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றான்)
* கிபி 1450-1467 செண்பகப்பெருமாள் (கோட்டே ராஜ்ஜிய சிங்கள அரசனின் வளர்ப்பு மகனான செண்பகப்பெருமாள் பிறப்பால் சைவ சமயத்தவன் ஆவான் ஆனால் சிங்கள ராஜ்ஜிய பிரதிநிதியாக யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை கைப்பற்றினான்)
* கிபி 1467 - 1478 கனகசூரிய சிங்கையாரியன் (1450 ல் தமிழ்நாட்டிற்கு தப்பி சென்ற மன்னன் கனகசூரியன் தமிழகத்திலிருந்து படை திரட்டி வந்து 1467 ல் மீண்டும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை மீள கைப்பற்றி கொண்டான்)
* கிபி1478-1519 - 2ம் கனகசூரிய சிங்கையாரியன்
* கிபி 1519-1560 - 1ம் சங்கிலியன்
* கிபி 1561-1565 - புவிராஜ பண்டாரம்
* கிபி 1565-1570 - காசி நயினார்
* கிபி 1570-1572 - பெரிய பிள்ளை
* கிபி 1572-1591 - புவிராஜ பண்டாரம்
* கிபி 1591-1615 - எதிர்மன்ன சிங்கம்
* கிபி 1615-1617 - அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக)
* கிபி 1617-1620 - 2ம் சங்கிலியன் (கிபி 1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாண ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது)
* கிபி 17??-கிபி17?? - கைலாய வன்னியன் (வன்னி மண்ணை ஆண்ட மன்னன் , போர்த்துகேயர்கள் இலங்கை தீவில் கோட்டே சிங்கள ராஜ்ஜியம் மற்றும் யாழ்ப்பாண தமிழ் ராஜ்ஜியம் ஆகியவற்றை கைப்பற்றிய போதும் அவர்களால் இறுதி வரை வன்னி தமிழ் மண்ணிற்குள்ளும் , கண்டி சிங்கள ராஜ்ஜியத்துக்குள்ளும் நுளையமுடியவில்லை, கைலாய வன்னியன் பற்றி ரொபேட் நாக்ஸ் என்ற ஒல்லாந்த தளபதி தன் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளான்)
* கிபி 18/19 ம் நூற்றாண்டு - காக்கை வன்னியன் ( வன்னி சிற்றரசருள் ஒருவன் - வன்னிமண், பின்நாளில் இவன் துரோகியாக அடையாளபடுகிறான்)
* கிபி 17??- 1803 - மாவீரன் பண்டார வன்னியன் (வன்னி மண் , தலைநகர் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் , ஒல்லாந்தர்(டச்சுக்காரர்கள்) மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த மாவீரன். 1782-ல் வன்னியை கைப்பற்ற ஒல்லாந்தர் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற டச்சுகார வரலாற்று ஆசிரியர் , “ ஒல்லாந்தர்கள் உலகில் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருக்கிறார்கள் ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறு எங்கும் அவர்கள் காணவில்லை” என்று குறிப்பிடுகிறார், இறுதியில் பண்டார வன்னியன் ஆங்கிலேயரால் 1803 ல் தோற்கடிக்கபட்டான். ஆங்கிலேயர் ஆட்சி 1948 வரை இலங்கை தீவில் நீடித்தது )
* கிபி 1983-2009 - மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் ( தலைநகர்- கிளிநொச்சி , தமிழீழ பகுதியில் 80% வரையான நிலத்தை கடுமையாக போரிட்டு மீள கைப்பற்றி அங்கு தமிழீழ நிர்வாகத்தை நிறுவினார், வெறும் 20,000 க்கும் குறைவான தமிழ் போராளிகளை வைத்திருந்த போதும் இவரை 300,000 க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தால் 25 வருடமாக வீழ்த்தமுடியவில்லை முடிவில் 20 க்கும் மேற்பட்ட வல்லாதிக்க நாடுகளின் இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் போரிட்ட சிங்கள ராணுவத்தை தொடர்ந்து எதிர்த்து இலட்சியத்தில் சிறிதும் சமரசம் இன்றி இறிதிவரை போரிட்டார்)
* கிபி 2013- தற்போது வரை - சீ.வீ. விக்னேஸ்வரன் ( வட மாகாண முதலமைச்சர் , தலைநகர் - யாழ்ப்பாணம் ,அதிகாரம் எதுவும் அற்ற டம்மி முதல்வர்)
#தமிழீழ_தாகம்_தணியாது_எங்கள்_தாயகம்_யார்க்கும்_பணியாது. 🐅 — withEelamranjan Eelamranjans and 18 others.
Thursday, 2 January 2014
Wednesday, 1 January 2014
கண்ணாடியுள்ளிருந்து
"ஃ" ஓர் எழுத்தாயுத மாத ஏடு
கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973
மணிவிழா கொண்டாடும் சி.சு.செல்லப்பாவுக்கு சமர்ப்பணம்
வெங்கட் சாமிநாதன்
பிரமிள் பானுச்சந்ரென்
நம் உணர்வுலகு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது. உணரக் கிடைக்கும் அனந்தம் முழுமையும் சிந்தனையின் வாய்ப்படுவதில்லை. நம்மில் பெரும்பாலோர்க்கு அவரவர் சிந்தனை மொழிவழிப்பட்டதாகும். இதன் விளைவாக அவர்கள் சிந்தனை மொழியின் பரிமாணச் சிறைக்குள் அடைபட்டுப்போகிறது. இச்சிறைச் சுவருக்குள்ளேயே, அநுபவ உணர்வுலகமும் அடங்கி விட்டதாக அவர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் நமக்குச் சாத்தியமாகவிருக்கும் அநுபவ, உணர்வுலகு ஒரு பெரும் வட்டம் எனக் கொண்டால், அதனுள் ஒரு சிறு வட்டம் சிந்தனை உலகு. அதனுள்ளும் சிறிய வட்டம் மொழி சாத்திய உலகு. ஒரு லட்சிய நோக்கில், மொழி சாத்திய சிறு வட்டம் படிப் படியாக விரிந்து, ஆழ்ந்து, உக்கிரஹித்து அநுபவ உணர்வுலகின் பெரு வட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளவேண்டும். நம் கலைஞனர்கள், இலக்கியாசிரியர்கள், "பெரும் பெரும் " விமரிசக தகைகள் எல்லாம் மொழி சாத்திய உலகான சிறு வட்டத்தையே அநுபவ உணர்வுலக பெருவட்டமாகக் கண்டு மயங்குகிறார்கள். இது பரிதாபத்திற்குரியது.
இன்னும் வரும்...01/01/2014
மொழி சாத்திய சிறு வட்டம் என்று யான் சொன்னது இப்போதைய சந்தர்ப்ப சௌகர்யத்திற்காகத்தான். ஏனெனில் இக்கட்டுரை எழுதும் சந்தர்ப்பத்தில் என் சர்ச்சைக்குட்படுவது மொழி என்னும் குறியீடு. வேறு சந்தர்ப்பங்களில், அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வண்ணம், கோடு, சப்தம், காட்சி என ஆரம்பச் சிறு வட்டத்தின் குறியீடுக் குணத்தை மாற்றிக்கொள்வேன்.இருப்பினும் வெவ்வேறு வகைக் குறியீட்டுச் சாதனங்களின் சிறுவட்டமாக ஆரம்பிக்கும் ஒன்று அநுபவ உணர்வு பெரும் வட்டத்திற்கும் போகும் விரிவில், ஆழத்தில், உக்கிரத்தில் ஒருமை பெற்று இனங்காட்டிப் பிரிக்க முடியாத ஒரு முழுமையை அடைகிறது. அதனால்தான் நம் உணர்வு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது என்றேன்.
பெரு வட்டம், சிறு வட்டம் எனச் சொன்னதால்தான், ஒன்றிலிருந்து மற்றுன்றிற்கு நிகழும் நகர்வு எனக் கொள்வது தவறு. இது நிகழ்வது முழுக்க முழுக்க 'இடமற்ற' மன விஸ்தாரத்தில். சிறு வட்டச் சிறையோ, பெரு வட்ட விரிவோ அவரவர் மனதில், பிரக்ஞையில் நிகழ்வது. ஒருவன் பெருவட்ட இருப்பை மறுத்து தான் சிறைப்படும் சிறு வட்ட அணைப்புதான் வாழும் சந்தர்ப்பங்களையும் அவன் சிந்தனையின் பரிமாணங்களையும் பொறுத்தது.
இன்னும் வரும் 02/01/14
பெரு வட்ட உணர்வுலகோ, சப்தம், மொழி என்ற பரிமாண எல்லைகளில் சிறைப்படுவதில்லை. மொழிச் சாதன சிறு வட்டத்தில், பயிற்சி, வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், ஈடுபாட்டின் ஓரச் சாய்வு ஆகியவற்றின் காரணமாக சிறைப்படுபவன், பெருவட்ட உணர்வுலகில் , மொழியின் பரிமாணம் மூலம் தான் தரிசிப்பதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கிடைப்பது ஒரு சிதைந்த உலகு. மூளியான சத்தியம். "எனக்கு இலக்கியம் ஒன்றில்தான் குறி, மற்றவற்றைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பவன் எவ்வளவு பெரும், பெரும், இலக்கிய கர்த்தாவானாலும் அவன் உலகு சிதைந்த உலகுதான். உண்மையின் தரிசனத் தேடல் கொண்ட இலக்கிய கர்த்தா அவ்வாறு சொல்ல மாட்டான். சிதைபட்ட உலகை மூளியான சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான். அவன் தேடலில் பெருவட்ட உணர்வுலகின் மற்ற பரிமாணங்களின் சாயல் நிழல் தட்டியிருக்கும். இருக்காவிட்டால், சத்தியத் தேட்டையின் வெறும் சாதனமேயாகிய மொழியை சத்தியமாகக் கண்டு மயங்கியவன் அவன். சாதனங்களில் ஏதும் பவித்ரத்வம் இல்லை. சத்தியம் இல்லை.
இன்னும் வரும்...03/01/2014
சந்தர்ப்ப வசமாகவோ, ஈடுபாட்டின் விளைவாகவோ, வண்ணங்களையும், கோடுகளையும் தான் சிறுவட்ட ஆரம்பமாகக் கொண்ட வான்கோ, பெரு வட்ட உணர்வுலகில் உள்மன உளைச்சல் என்ற பரிமாணத்தையும் கண்டான். "முதுமை" கவிதையில் பரிதி, "பரிதிப் பிணம்" ஆகிறது. வான்கோவின் ஓவியத்தில் சூரியனும், ஸிப்ராஸ் மரங்களும் வயல்வெளிகளும் சைத்ரிகனின் மன உளைச்சலை ஸ்வீகரித்துக் கொள்கின்றன. பெரும் சந்தேகக் குறிகளில் ஆரம்பித்து ஐன்ஸ்டின், உணர்வு அநுபவித்தறியாத பிரபஞ்சத்தின் கூறுகளைக் கண்டான். அன்றாட வாழ்வின் பரிதவிப்பில் பிரயாணத்தைத் தொடர்ந்த கார்ல் மார்க்ஸ் சமுதாயத்தின்,மனித சரித்திரத்தின் பிரவாஹ கதியை, அலையாடலை நிர்ணயித்து விட்டான். வண்ணப்புள்ளிகளின் சிறு வட்டத்திலிருந்து காட்சிப் பதிவின் ஒளிச் சேர்க்கைக் கூறுகளைக் காணும் எல்லையை அடைந்தவன் ஸுராட் (Seurat). ஜப்பானிய சித்திர எழுத்துக்களின் அமைப்பு முறை, ஐஸ்ன்டினையும், நரம்பு பலவீனங்களின் ஆராய்ச்சி பாவ்லோவையும், மனித மனத்தின் இயல்புகளுக்குக் கொண்டு சேர்த்தது. இப்படி, மனித வரலாற்றின் சிந்தனா சரித்திரத்தில், ஒரு பரிமாண சாதனா ஆரம்பத்திலிருந்து அதன் வழியே தொடங்கிய பிரயாணம் மற்ற வேறு பரிமாண சாதனா எல்லைகளுக்குத் தாவிய நிகழ்ச்சிகள் அனந்தம். இருந்த இடத்தை விட்டு நகராத பிரகிருதிகள் தாலுகா ஆபீஸ் டெஸ்பாச் கிளார்க்குகள் மாத்திரமல்ல, தமிழ் நாட்டு இலக்கிய விமர்சகப் பெரும் புள்ளிகளும்தான்.
இன்னும் வரும் 04/01/2014
பிரமிள் பானுச்சந்ரென் மொழிவழி சாதனைக்குள் காலெடுத்து வைக்குமுன் இந்த ஆரம்ப அறிமுக எச்சரிக்கை தேவைப்படுகிறது. பானுச்சாந்ரெனின் "கவிதைகள்' இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில்தான் இயங்கும் என நம் தமிழ்தந்த மொழிவழிச் சாதனா சிருவட்டச் சிறைக்குள் இருந்துகொண்டு நிர்ணயிபபதோ, எதிர் பார்ப்பதோ தவறாக முடியும். பானுசந்ரெனின் அநுபவ உணர்வுலகப் பெரு வட்டம் மொழி வழி சாதனா வட்டமாக (கவனிக்கவும், சிறு வட்டமாக அல்ல) தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது. அவர் எழுத்துக்களில் - இங்கு அவர் கவிதைகளில் சிறு வட்டம் பெரு வட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அவ்விரிதலில், உக்கிரஹிப்பில், அதன் பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தி உள்ளவர்கள் ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. வாடிப்பட்டி வைரமுத்துப் பிள்ளையிடம் 'Icicles' (ஐஸ் படிமம்) என்று மட்டுமே சொல்லி அதை உணர்த்த முடியாது. பானுச்ச்ந்ரெனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாமும் உணரும் சக்தி வேண்டும்.
இன்னும் வரும் 05/01/2014
நமக்கும் பரிச்சயமான, பாதுகாப்புத் தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சாந்ரெனின் உலகில் தகர்க்கப்படுகின்றன. கண்களின் வீச்சுத் தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று, அடிவானத்திற்கப்பால் அகன்று விரியும் உலகத்தைப் பற்றிய ஞானம் இருந்தால்தான், அடிவானம் வரை மொழிவகுத்த பாதை வழியே சென்று அதற்கும் அப்பால் பானுச்சாந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். இல்லையெனில் "எனக்கு இலக்கியம் தான் குறி" என்று தெரு முனையிலேயே டேரா போட்டுக் குருட்டு வாழ்க்கை நடத்த உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.
இன்று பெரும்பாலான தமிழ்க் கவிதை செல்லும் பாதை, ஏற்கனவே மொழி மொழி சிரமைத்துத் தந்துவிட்ட பாதையில் நீங்கள் அமைத்துக்கொண்ட சௌகரியமான ஒரு நடை பாதையேயாகும். இந்த நடைபாதைக்குள்தான் செப்பனிடுதல், கல்பதித்தல், சீரமைத்தல், அரசியலில் அலங்கார தர்ம கோஷங்கள் எழுதுதல் எல்லாம் நடைபெறுகின்றன. இன்னொரு சிலரோடு பானுச்சாந்ரெனும் மொளிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுபவர்.
இன்னும் வரும் 06/01/2014
புதுக்கவிதையில் மரபில், பிரமிள் பானுச்சாந்ரெனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு. ஒன்று அவரது படிம உலகம். இவ்வாறாக நான் பிரித்துக் காட்டியது ஒரு விளக்க சௌகர்யத்திற்காகத்தான். மன--பிரபஞ்ச உணர்வுலகம்தான் படிம ரூபமாக நமக்குக் காட்சியளிக்கிறது. படிமம், காட்சி வழிப்பட்டது. ஓவிய சிற்ப உலகிலிருந்து இடம் பெயர்ந்தது. மன--பிரபஞ்ச உணர்வுலகம், சிந்தனை வழிப்பட்டது. மனோதத்துவ--பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது. ஆகவே "இலக்கியக்குறி" கொண்ட கற்பரசிகள், மொழிக் கண்ணகிகள் இங்கு கால்வைப்பது ஆபத்தானது. அநுபவ உணர்வுலகில் மற்ற பரிமாணங்களும் உண்டு என அறிந்து அவ்வுலகில் சஞ்சரிக்க விரும்புகிறவர்களுக்கு இங்கு இடம் உண்டு.
மேலே செல்லுமுன் இன்னுமொரு விளக்கம் அவசியம். படிமம் என்பது இங்கு உத்தி அல்ல. காட்சி அனுபவம். அநுபவ சத்தியம். அநுபவ உணர்வுலகமும் படித்தறிந்த தகவல் சேர்க்கை அல்ல, அதுவும் அநுபவ சத்தியம். உத்திகளாகவும், புதுமைகளாகவும், அநுபவ சத்தியத்தைக் காண்பவர்கள் வான்கோழி நட்டியமாடுபவர்கள். அவர்களில் ஒருவரின் கவிதை ஒன்றை மாதிருக்கென தரலாம்.
மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத
பூதலத்தின்
கொக்கு போலக்
காலூன்றி
நிற்கும் மரங்கள்
அதற்கப்பால்
எழுந்து வீழ்ந்து
தடுமாறும்
நடக்கத் தெரியாத கடலலைகள்
யார் சென்றாலும்
விரல் நீட்டும்.
இங்கு வான்கோழி படிம நடனம் ஆடுகிறது.
மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத ... போயிற்று. இதற்குள்ளேயே பூனை சாக்குப்பைக்கு வெளியே தலை நீட்டி தப்பித்தோடி விட்டது.
எண்சீர் விருத்தத்திலிருந்து, அறுசீர் விருத்தத்திற்கும், களிப்பாவுக்கும், அகவலுக்கும் என்று கிளைக்குக்கிளை தாவும் பண்டித லாவகம், படிமத்தையும் கிளையாகக் கணித்து தாவியதன் விளைவு இக்கால் முறிவு. இப்படியும் பானுச்சாந்ரென் 70 வருடத்திற்கு முந்தைய ஐரோப்பிய முயற்சிகளிலிருந்து கற்றதல்ல.இன்று இன்னொருவர் பானுச்சந்ரெனிடமிருந்து கற்க.
இன்னும் வரும் 07/01/2014
இவ்வான்கோழி நடனத்திற்குக் காரணமே நம் விமரிசகப் பெருந்தகைகள் தாம். சோதனை என்ற இயக்கத்தின் தாத்பர்யத்தையும், உள்ளார்ந்த உந்துதலையும் முன் வைக்காமல், இப் பெருந்தகைகள், "சோதனை, சோதனை" என்று இலக்கியக் கற்பு நச்சு பண்ணியதன் வினைதான் இவ்வான்கோழி நடனம். சோதனையின் உந்துதலே, ஒரு பரிமாண அநுபவத்திலிருந்து இன்னொரு பரிமாண சோதனைக்குத் தாவும் இயக்கம் தான் என்பதை இலக்கிய கண்ணகிகள் உணரவும் இல்லை, ஆதலால் அதை எடுத்துரைக்கவும் இல்லை.
படிமம் என்பது சம்பிரதாயமாக (கவனிக்கவும்) "சம்பிரதாயமாக" ஓவிய, சிற்ப வழி அநுபவம் ஆகும். மன உளைச்சல்கள், சம்பிரதாயமாக, சொல் வழி, இலக்கிய வழி அநுபவம் ஆவது போல, மன உளைச்சல்கள் வான்கோ என்ற ஓவியனிடம் சாதனையாக பதிவு பெற்றது போல, படிம அநுபவங்கள் மொழிவழி வெளியீடு பெறும் சந்தர்ப்பங்கள் தாம் 70 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த படிம கவிதை முயற்சிகள். இங்கு பிரமிள் பானுச்சாந்ரெனின் கைகளில் இன்று தமிழும் நிகழ்ந்திருக்கிறது.இந்நிகழ்ச்சியின் ஊற்றுக் கண்ணை, பானுச்சாந்ரெனின் அநுபவ உணர்வுலகின் நிதர்ஸனத்தில் தான் காண வேண்டும். 1961-ம் வருட "எழுத்து" 36-ல் வெளிவந்த கவிதை "விடிவு"
பூமித் தோலில்
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி.
இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில் ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து மற்றொன்றாக தோன்றி மறைகிறது.இது தமிழில் முதன் முதல் படிமக் கவிதை. இதன் பிறப்பிற்குக் காரணங்களாக இன்னொரு படிமக் கவிஞரை நாம் தேட வேண்டிய அவசியத்தை பனுச்சாந்ரென் வைக்கவில்லை. இதன் தோற்றத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, "எழுத்து" தொடங்கிய புதுக்கவிதை மரபு அளித்த சுதந்திர இயக்கம், மற்றொன்று மிக முக்கியமானது. உணர்வுலகக் குணா விசேஷம். "விடிவு" கவிதையில் கண்ட படிம இயல்பின் ஆரம்பங்களைப் படிமக்கவிதை அல்லாத 1960. ஜனவரி "எழுத்து"--வில் வந்த "நான்" கவிதையில் காணலாம்.
இன்னும் வரும் 08/01/2014
ஆரீன்றாள் என்னை
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று பெரும் வெளியில்
ஒன்று மற்ற பாழ் நிறைந்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால்
முடிஎரித் துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களின்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெரு வெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!
யரோ நான்?--ஓ!--ஓ!
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனுகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்?
இக்கருவின் வளர்ச்சியை, இதற்கடுத்து நவம்பர் 1960 23-ம் "எழுத்து" இதழில் வெளிவந்த "பயிர்" என்ற கவிதையில் பார்க்கலாம்.
வேலி கட்டா வானத்தில்
வெள்ளிப்பயிர் வளர்க்க
தாலிகட்டிச் சத்தியினை
ஈர்ப்பென்ற நீர் பாய்ச்சி
காலமெல்லாம் காத்திருக்க
வைத்து விட்டாய்; வைத்து மென்ன?
ஊழியென்ற பட்சி அவன்
அயர்ந்திருக்கும் வேளையிலே
வேலி கட்டா வானத்தில்
வெள்ளி விதைக ளெல்லாம்
அள்ள விழுங்கும் வரை
நீர் பாய்ச்சி என்ன பயன்
வேர் முளைக்கக் காணோமே!
இதையடுத்து வளர்ந்து முதிர்ந்ததுதான் "விடிவு" கவிதை காட்டும் படிமவியல், நேரிசை வெண்பாவிலிருந்து தாவிய அடுத்த கிளையில்ல பானுச்சாந்ரெனின் படிமங்கள்.
இன்னும் வரும் 09/01/2014
"சமூகம் கெட்டுப் போய் விட்டதடா?
சரி, சோடாப் புட்டி உடைக்கலாம் வாடா"
என்று வேறொருவர் தமது அங்கத சமூகப் பார்வைக்கிளையிலிருந்தும்,
"அடுக்கி வைத்த செங்கற் சூளையிலே
தனித்த செங்கல்லொன்று சரிகிறது"
என்ற செங்கற் சூளை சித்தாளின் காவல் பார்வைக்கிளைக்கு அவரே தாவ முயல்வது போல, படிம உலகுக்குத்தாவ முடியாது.
ஏன்?
பானுச்சாந்ரெனின் மன-- பிரபஞ்ச உணர்வுலகம் தான் படிமங்களாக காட்சி தருகின்றன. இவற்றை இரு வேறு அம்சங்களாக பிரித்து என் விளக்க சௌகர்யங்களுக்காக என நான் முன்னரே சொன்னேன்.
இம் மன-- பிரபஞ்ச உணர்வு கற்றுத் தெரிந்ததல்ல. கலைஞனின் உடன் பிறந்த ஆளுமை. பிரபஞ்சத்தின் பரப்பு அனந்தம் என்ற இடபரிமாணம், மன எழுச்சியின் உக்கிரமாக எழும் உணர்வுப் பரிமாண மாற்றம், படித்தறிந்து கொள்ளும் தகவல் சேர்க்கை அல்ல. ஆளுமையின் உள்ளிருந்து விகசிக்கும் பார்வை அநுபவம். உணர்வின் மலர்ச்சி. சான்றுகளைக் கவிஞனின் வளர்ச்சியில் காணலாம்.
படிமம், உணர்வு ஆகிய இரு குணங்களின் மங்கலான ஆரம்பங்களை, பானுச்ச்ந்ரென் தன் 20,21-ம் வயதில் எழுதிய 'நான்' கவிதையில் பார்க்கலாம். "பயிர்" என்ற கவிதையில் மங்கல் சிறிது நீங்குகிறது. தெளிவு தோன்றுகிறது. முற்றிலும் படிமத் தெளிவு பெறுவது "விடிவு" "மின்னல்" ஆகிய கவிதைகளில்.
இன்னும் வரும் 10/01/2014
ஒரு ஓவியனின் பண்புகள், "எழுத்து" பத்த்ரிகை அளித்த சந்தர்ப்பவசமாக, இங்கு தூரிகையையும், வண்ணங்களையும் தேடுவதற்குப் பதிலாக, சொற்களைக் கையாள வைத்துக் கவிதைகளைப் பிறப்பித்திருக்கின்றன. "நான்" கவிதையில் எழுந்த ஒரு கருவின், தெளிவும், உருவும் மங்கலாகத் தெரிந்த ஒரு கருவின், படிமம் பரிணாமம் மாத்திரம் "மின்னல்", "விடிவு", கவிதைகளில் தெளிவும் உருவும் பெறுகிறது. "நான்" கவிதையில் மங்கலாகத் தொடங்கிய, தெளிவும் உருவம் பெறாத இன்னொரு பரிமாணமாகிய, உணர்வு மனவெழுச்சி "பயிர்" கவிதையிலும் தலைகாட்டியது. அதை "விடிவு", "மின்னல்" கவிதைகளில் நாம் காண்பதில்லை.அதன் தெளிவு, ரூப முதிர்ச்சியை "மறைவு" (எழுத்து - 36, டிசம்பர் 61) கவிதையில் காணலாம்.
ஆக இங்கு பரிமாணங்களும் கிளைவிட்டுப் பிரிவது ஆரம்ப காலங்களில்தான். பின் வருடங்களில், காட்சித் தோற்றத்திலும், உணர்வுப் பாங்கிலும் அவை எப்போதும் ஒன்றிணைந்து முழுமையாகின்றன.
இம் முழுமையின் சீரான பிரவாஹத்தை 60-ன் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று எழுதப்பட்ட "கன்னாடியுளிருந்து" என்ற குறுங்காவியம் வரை நாம் காணமுடியும்.
இப் பிரவாஹம் ஒரு மன--பிரபஞ்ச உணர்வுலகம். தெளிவிற்காக சற்று விரித்துச் சொல்வதானால், மனம் என்பது மன உள்வெளிப் பிரபஞ்சம், பிரபஞ்ச உணர்வு என்பது பிரபஞ்ச வெளி மன இயக்கம்.
இன்னும் வரும் 11/01/2014
மன உள் வெளி பிரபஞ்சமாக விரிகிறது (the inner cosmos of the mind). பிரபஞ்ச வெளியின் அனந்த விரிவு மன இயக்கமாக எழுச்சி அடைகிறது (the cosmos as the mind ). இவ்விரண்டும் ஒரு தனித்த புள்ளியிலிருந்து உள் நோக்கியும், வெளியில் விரிந்தும் பெறப்படும் பிரயாணம் என்று சொல்வது புரிந்துகொள்ள சாத்தியமாகத் தரப்படும் விளக்கமாகக் கொள்ளலாமே தவிர, அது உண்மையின் முழுப் பரிமாணமும் ஆகாது. இது தனித்த ஒரு புள்ளியிலிருந்து இரு வேறு பரிமாணங்களில் சஞ்சரிப்பது அல்ல. இவ்விரு உலகங்களும் பரிமாணங்களும் ஒன்றேயாகும். உதாரணத்திற்கு, உள் நுழைந்து வெளி நீளும் ஒன்றேயான டெலஸ் கோப் போல, உட்சுழன்று, விரிந்தாலும் நீர்ச் சுழல்போல, சுழற்காற்றுப் போல எனக் கொள்ளலாம். பிரைக்ஞையின் உள்நோக்கிய பிரயாணந்தான், பிரபஞ்ச வெளியின் அகண்டத்தைப் பார்வையில் அணைக்கும் முயற்சிதான் மன உள் வெளியின் பிரபஞ்சத்திற்கு இட்டுச் செல்கிறது. உபநிஷத ஞானிகள் தம் சிந்தனையை உள்நோக்கிய தியானம் அகண்ட பிரபஞ்சத்தைத் தரிசிக்க உதவியது. பிரபஞ்சத்தின் அனந்த வெளியை நோக்கிச் சென்ற அமெரிக்க அஸ்ட்ரோ நாட்'கள் ஒவ்வொருவரும் திரும்பி வந்தும் கண்டது உள் நோக்கிய மனச் சஞ்ச்சாரம்தான். வெறும் மனித யந்திரங்களாக பயிர்சிக்கப் பெற்று உருவாகிய ஒவ்வொரு அஸ்ட்ரோ நாட்'டும் பிரமிக்கத்தக்க வகையில், கவிஞர்களாகவும் தியானிகளாகவும், உலகு துறந்த ஆன்மிகர்களாகவும், மனிதகுல நேயர்களாகவும் மாறிவிட்டனர். இவ்வாறு மாறுவார்கள் என யூகிக்கக்கூட, அவர்களது விண்வெளிப் பிரயாணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் ஏதும் வாய்ப்பு இருக்கவில்லை. விண்வெளியின் சஞ்சாரம் அவர்கள் மனவியக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.விண்வெளியின் அகன்ற விஸ்தாரத்தில் (அதாவது) ஓர் இடபரிமாண அநுபவத்தில், உள் வெளி பிரபஞ்சத்தின் (அதாவது) உணர்வு பரிமாண அநுபவத்தின் தரிசனம் கிடைத்துள்ளது. ஏக சாதனா (இலக்கிய, மொழி ) விரதிகள் கவனிக்க வேண்டும்.
இங்குதான் நான் முன்னர் சொன்ன, வெளிவட்டத்தில் நிகழும் பரிமாண மாற்றத்தை, அல்ல, ஒன்றியைந்த கலப்பை, பார்க்கிறோம். திரும்பவும், பெருவட்ட அநுபவ உணர்வுலகு, சிறு வட்ட தொடக்கத்தைத் தன்னுள் அணைத்துக் கொண்டுள்ளது.
இன்னும் வரும் 12/01/2014
பிரமிள் பானுச்சாந்ரெனின் மன சஞ்சாரம், உள்ளுணர்வுப் பாங்கானது (intuitive). இடசஞ்சாரம் பிரபஞ்சத்தையே அணைத்து உறவாடும் தன்மையது. இந்த ஊஞ்ச்சலாட்டத்தை "நான்" கவிதையிலிருந்து, "கண்ணாடியுள்ளிருந்து" வரை காணமுடியும். தாயின் நினைப்பு, "ஒன்றுமற்ற பாழ் நிறைந்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்றவளிடம்" கொண்டு சேர்க்கிறது. ஆருமற்ற, சூனியம், தளமற்ற பெருவெளி, "இல்" ஆகிற்று. குரல் மண்டிப் போனது, இருள் முனகும் பாதையில் பிறந்திறந்து ஓடுவது, நான் என எஞ்சுகிறது.
கண்ணாடியுள்ளிருக்கும் தன்னை நோக்கிய விசாரம் பிரபஞ்சத்தின் அகன்ற விஸ்தாரம் முழுமையுமே அரவணைத்துக் கொள்கிறது. இட விஸ்தாரம் மன இயக்கமாக எழுச்சி பெறுகிறது. உள் மன இயக்கம் இட விஸ்தாரமாக விரிகிறது.
கண்ணாடியின் படிம விஷேசம், பார்வை சாதனா விஷேசம் இங்கு கவனத்திற்குரியது. கண்ணாடி நமக்கு நம்மைக் காட்டுகிறது.நமது பிரதிபிம்பத்தை,நமது வெளித் தோற்றத்தைக் காட்டுகிறது. நமது வெளித்தோற்றத்தின் கூரிய ஆராய்வு, நம்மிலிருந்து நம்மை வேறுபடுத்தி, ஆராய்பவனிலிருந்து ஆராயப்படும் பொருளை தனித்துக் காட்டுகிறது. ஒரு கூரிய பார்வை, தன்னை, "தான்"ஐ மறந்த பார்வை, வெளித் தோற்றத்தை ஊடுருவுகிறது. இது மன உணர்வு, இயக்க பரிமாணம்.
அதே சமயம்,
வேறு நோக்கில், இடவிஸ்தாரமாக, கண்ணாடி 'தன்'னின் இருப்பை மறைத்து, எல்லையற்ற ஒரு அகண்ட பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.சுற்றியும் உள்ள கண்ணாடிகள் (கண்ணாடிச் சுவர்கள்) சிருஷ்டிக்கும் பிரபஞ்ச வெளி, அதனுள் தோன்றும் கோடானு கோடி பிரதிபிம்பங்கள்:
வெறுமை மீது
ஒன்றை யொன்று உற்று நோக்கும்
இரண்டு கண்ணாடிகளினுள்
வெளியினுள் வெளி
எங்கும் கோடானு கோடி
பிரதிபிம்பங்கள்
கர்ப்பக் கிரஹத்து
வௌவால்களாய்த் தவிக்கும் நிழல்கள்
இங்கு இட-மன வெளி பிரபஞ்ச விஸ்தாரத்தில், இட-கால-மன பரிமாணங்கள் மடிகின்றன. உக்கிரமடைகின்றன.காலம் ஸ்தம்பிக்கிறது. ஒளிவருட வேகமும் கொள்கிறது. எது உண்மை? எது தோற்றம்? எது சத்தியம்? எது நிதர்சனம்?நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒரே புள்ளியில் சமைகின்றன. உணர்வுகள்,பிம்பத் தோற்றங்கள், படிமங்களாக எழுந்து மடிந்து ...
இன்னும் வரும் 13/01/2014
இவ்வுண ர்வுப் பிரவாஹம் படிமப் பிரவாஹம்,பிரபஞ்ச நீட்சி சிரமம் தரும். இப்பிரவாஹம் எனக்குள் பல ஞாபகங்களை எழுப்புகிறது. எல்லா ஞாபகங்களும் அலையாடி ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஒன்று: விண்வெளியில் பிரயாணம் செய்த அஸ்ட்ரோ நாட்'கள், காஸ்மோ நாட்'கள் மூலம் தெரிந்த பிரபஞ்ச வெளி அநுபவங்கள், அவர்களது அப்போதைய மன எழுச்சிகள், பரவசங்கள், பின்னர் அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of Perception என்ற புத்தகம். மெஸ்காளினைச் சாப்பிட்டுத் தன்னுள் அது நிகழ்வித்த பிரக்ஞை மாற்றங்களை அநுபவங்களை அல்டஸ் ஹக்ஸ்லி அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார். அவரைப் போலவே ஹிப்பிகளும் நிர்மல ஆனந்தம் என, L.S.D.யையும், சரஸ்ஸையும் சாப்பிட்டு அனுபவம் தேடுகிறார்கள். இவ்வற்றின் உந்துதலைப் பற்றியெல்லாம் டிமொதி லிரி (Timothy Leary) எழுதியிருக்கிறார். இக்குறுக்கு வழிகளெல்லாம் மாரீஸத் தோற்றங்கள் என லீரியே ஒப்புக்குக் கொண்டிருக்கிறார். நம் மரபிலும், கஞ்சாவும், அபினியும் உண்ட யோகிகள் உண்டு. இந்த யோகிகளிடமிருந்துதான் ஹிப்பிகள் தங்கள் ஆனந்த மார்க்கத்தைக் கற்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஆதர்ஸனமாக இருந்தது நம் மரபின் புராதன ரிஷிகளின் தியான வழித்தேட்டை. தியான வழித் தேட்டை நிச்சயமானது. முறையும் உண்மையும் ஆனது. மனக் கட்டுப்பாட்டிற்கு அடங்கியது. அல்டஸ் ஹக்க்கியும், ஹிப்பிகளும் தேடுவது நிச்சயமில்லாதது. அநுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை L.S.D.யோ மற்றதோ உட்கொள்ளுமுன் நிர்ணயிக்க இயலாதது. நிகழப் போவது நிர்மல ஆனந்தமா, அல்லது பயங்கர சொப்பனமா என்பது எவ்வளவு நீண்டகால, சரஸ், L.S.D.பழக்கத்திலும், பயிற்சியிலும் தீர்மானிக்க இயலாதது. ஹிப்பிகளுடன் உடன் சேர்ந்து சோதனை செய்த டிமொதி லீரி (Timothy Leary) இதையெல்லாம் உணர்ந்து சொல்லியிருக்கிறார். இந்த அநுபவ மனமயக்கம் பிரக்ஞையின் பேதலிப்பு. இருப்பினும் இவையெல்லாம் (ஹிப்பிகளின் அநுபவத்தில் பல சமயங்களில் நேரும் பயங்கர சொப்பனங்களைத் தவிர்த்து) ஒரு படிம ஒற்றுமை கொண்டவை. ஆனால் சுயமன எழுச்சி அற்றவை.
இன்னும் வரும் 14/01/2014
எதற்காக இவ்வளவும் சொல்ல நேர்ந்தது என்றால் பானுச்சந்ரெனின் "கண்ணாடியுள்ளிருந்து" காவியத்தில் தோன்றும் படிமங்கள் இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தியும், ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்,மேற்சொன்னவர்கள் எல்லோரின் அக்கண அனுபவத்திற்கும், அவர்களது எஞ்சிய வாழ்க்கைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஒன்றிற்கொன்று உறவு கொண்டு பிறப்பன அல்ல. அது மாத்திரமல்ல இவை பானுச்சாந்ரெனின் கவிதை இயக்க முழுமையுடனும் இக்காவியத்தின் படிமப் பிரவாஹம் உறவு கொண்டது. எல்லாமே ஒரு முழுமையும், சம்பந்தமும் கொண்டவை.
"கண்ணாடியுள்ளிருந்து" குறுங்காவியத்தின் படிமப் பிரவாகமும், உணர்வு எழுச்சிகளும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவை. பிரக்ஞை விழிப்பில் உள்ளுணர்வின் (intuitive) இயக்கத்தில் பிறப்பவை. ஒவ்வொன்றிற்கும் ஆதார நிதர்ஸனம் உண்டு.
"தசைச் சுவர்கள் வீசும் இப்
புவன நிழல் வெளியில்
சுடர்கள் ஆடுகின்றன
ஒவ்வொரு சுடரும்
பெண்குறி விரிப்பு
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி
(எனத் தொடர்ந்து)
.... .... .... ....
கண்ணாடி
இக்கணம்.
இக்கணம்," (வரை)
இது போல ஒவ்வொன்றிற்கும் ஆதார சிந்தனை உண்டு.
"மூடிய கதவின்
சாவித் துவாரத்தில்
(இங்கே ஒரு பக்கம் விடுபட்டிருக்கலாம்)
இன்னும் வரும் 15/01/2014
தர்சனம்
புதுக்கவிதை என்ற பெயர் தற்காலீகமானது. கவிதையின் பெயர் கவிதையே. இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள்; செய்யப்பட்டவை. கவிதை எல்லாவகையான சொற்களையும் உதறுகிறது.நிதர்சனத்தில் திளைக்கிறது. யாப்பு என்ற திட்டமிடப்பட்ட உருவத்தை துறக்கும் கவிஞன் ஒரு புதிய உருவை நாடி இத்துறவை மேற்கொள்ளவில்லை.நிதசர்ணத்தை உணராத செய்யுள் வாதிகள், யாப்பு என்ற உருவில் ஒரு சௌகர்யத்தைக் கண்டு அதன் கதிக்குள் இயற்கைப் பொருள்களின் வர்ணனைகளையும், சாமான்ய மனிதனுக்குக்கூடத் தெரியும் அற முறைகளையும் அதீதமானவை என்று பிரமை காட்டி எழுதினர். இவர்கள் ஆழ்ந்த வாழ்வின் அதீத ரகசியங்களையோ மானுஷ்ய தர்மங்களையோ உணராதவர்கள். பிரத்தியட்சத்தின் மீது காதல் கொண்ட மனிதன் செய்யுள் வாதியிலிருந்து உயர எழுந்து ஸ்தூல நிதர்சனங்கள் வாழ்வின் அதீத ரகசியங்களுக்குக் குறியீடுகளாக, தார்மிக சக்திக்கு உரமாகக்கண்டான். போலி வர்ணனைகளையும் போலி தர்மங்களையும் துறந்தான். அந்தத் துறவோடு உடனிகழ்வாக யாப்பையும் துறந்தான். கவிதை தமிழில் புனர்ஜன்மம் பெற்ற கதை இது.
வசனத்தை உடைத்துப்போட்டு கவிதையை சாதித்துவிட முடியாது.
இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள், சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள். பஸ்கள், பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராஷஸ சொரூபமான கட்டிடங்களிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி, கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய், மறையும் நண்பர்கள். இவையாவும் பிரத்தியட்சம். யாப்பின் கதிக்கு இந்த பிரத்தியட்சத்தில் இடமேது? எமது இன்றைய பிரக்ஞையின் இந்த சீரற்ற ஒரு புதிய தன்மையில் யாப்பு அங்கதத்திற்கே உதவும்.
In the room women come and go Talking of Michelangelo
என்ற வரியிலும்
I grow old, I grow old
I shall wear the bottoms of my frousers rolled
என்ற வரியிலும் சப்தம் அதீத உணர்வுக்காக உபயோகமாகவில்லை. கேலிக்கு அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று.
பண் என்பார் பாட்டென்பார்
கண்ணைச் சொருகிக் கவியென்பார்
அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?
என்ற யாப்புருவம் கேலிக்கே -- அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று. அன்றைய சாவதானம் இல்லை. எனவே சாவதானத்தில் விளைந்த யாப்பு எமது பிரக்ஞையின் நடுவே நிகழும் போது அங்கதமாகிறது.பழைய வாழ்வின் கதியையோ, நாம் அதன் யாப்புருவோடு சேர்த்தே பருகுகிறோம்.
இன்னும் வரும் 16/01/2014
சீரும், அடியும், தளையும் யாப்பின் ஆதாரங்கள். சப்த அணிகளையும் யாப்பு மேற்கொள்ளும். இந்த அம்சங்களிலேயே உழல்வது சௌகர்யம். செய்யுள்வாதிகள் கவிதை என்ற ஆதாரத்தை இழந்தே இந்த உழலில் ஈடுபட்டனர். கவிதை என்பது அதன் பொருளாகவே உருப் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய சித்தாந்தம். நிதர்சனத்தை ஹ்ருதயமும் புத்தியும் தத்துவ தார்மிக உணர்வும் கொண்ட கண்களோடு சந்தித்தால்தான் 'பொருள்' என்ற அம்சம் செழிக்கும். செய்யுள்வாதிகளோ புலமைவாதிகளாயினர்.பழைய கவிஞர்களும் புலவர்கள் என்றே அவர்களது சமயத்தில் அழைக்கப்பட்டிருந்ததால் புலமையை நூல்களின் மூலமும் செய்யுள் இயற்றும் பயிற்சி மூலமும் பெற்று இவர்களும் புலவர்களாயினர். இதன் அபத்தத்தை உணர்ந்து பழைய புலவர்களை இந்த புதிய புலவர்களிளிருந்து பிரித்த கவிஞன்,
கண்டவன் கலைஞன்
பொருள் சொன்னவன் புலவன்
என்ற புதிய சித்தானந்தத்தை எழுதினான்.
இன்றைய கவிஞனுக்கு யாப்பின்மை ஒரு குற்றமாக முடியாது. கவிதையின் பொருளம்சத்தில் குற்றம் இருக்கக் கூடாது என்பதே இவனது அக்கறை. தங்கள் தங்கள் அளவில், அந்தந்த பிரசுர கர்த்தாக்கள் இன்று தமது திறமைக்கேற்ப பொருளம்சத்தையே யாப்பற்ற கவிதைகளில் முக்கியமானதாகக் கண்டு அந்த அடிப்படையிலேயே கவிதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கேதான் கூறியது கூறல்,மிகைப்படக் கூறல், சென்று தேய்ந்திறுதல் என்றெல்லாம் பொருளம்சத்தைப்பற்றிக் குறிப்பிட்ட குற்றங்களை அவதானிக்கும் சாத்யம் இருக்கிறது. இது போன்ற குற்றங்கள் எக்காலத்திலும் குற்றங்களே. யாப்பை மீறிய கவிதை பிறக்கக் காரணமே யாப்புருவக் கவிதையுள் இவ்வகைக் குற்றங்கள் களைகளாக வளர்ந்து மலிந்தமைதான் என்போரும் உளர். களைகளைப் பிடுங்கி எறிந்த போது ஒழுங்கற்று, திட்டுத் திட்டாக உண்மையான கவிதைப் பயிர் தெரிந்த நிலைமை யாப்பின்மையாயிற்று. அதுவே ஓர் அழகாயிற்று.
இன்னும் வரும் 17/01/2014
யாப்பற்ற கவிதைக்கு யாப்பாக அமைவது பொருளின் ஒழுங்கு. வசனத்தை உடைத்துத் தூவி இந்த ஒழுங்கை நிகழ்விக்க இயலாது. அறிவிற்கு போருட்கிடை தரும் அதிர்ச்சிகளின் ஒழுங்கிற்கேற்பவே யாப்பற்ற கவிதையின் வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது வசனத்தை உடைத்துத் தூவுவதாகாது.
வசனத்தை
உடைத்துப்
போடுவதல்ல
கவிதை
என்ற ஒழுங்கு எவ்வித அதிர்ச்சியையும் தரவில்லை. எனவே இது செய்யுள்! யாப்புருவினுள் மட்டும் அல்ல, யாப்பற்ற உருவினுள் கூட செய்யுள் சாத்தியம் என்பதற்கு இன்றைய நிலைமையில் ஆதாரங்கள் உள. விகடக் கூற்றுக்களை மேற்படி ஒழுங்கைப் போன்ற வகையில் உடைத்துப் போட்டுப் பிரசுரித்துக் கொள்வோருமுளர்.
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் என்று
விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன
வாயேன்.
என்ற ஒழுங்கு செய்யுள்தான். இதை வசனமாக எழுதிப்பார்த்தால் தன போலித்தன்மையை இது காட்டி விடுவதை உணரலாம்.
நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன, வாயேன்.
ஒரு முதிர்ச்சியற்ற, மனிதத்தன்மையற்ற, செக்ஸின் ஆழத்தை உணராத இளம்பிள்ளை (adolescent) மன நிலையில் பிறக்கும் விகடத்தனமான கூற்று. இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப்படாது.
மேலே உள்ள இரண்டு உதாரணங்களில் வரிக்கு வரி நாம் நிறுத்த வேண்டிய அவசியத்தை அந்த வரிகள் ஏற்படுத்த வில்லை. 'வசனத்தை' என்ற பிரயோகம் ஒரு தனி வரியாக நிகழ வேண்டுமானால், அது பொருள்வழியில் நிகழ வேண்டும். அவ்வரியின் பொருள் தொடர்ந்து வரும் சொல்லான 'உடைத்து' என்ற வரியுடன் வசன கதியில்தான் உறவு கொள்கிறது.எனவே இந்த வரிக்குத் தன்நிகழ்வு இல்லை.
'நிரோத் உபயோகியுங்கள் என்று....
என்று? அதற்கப்புறம்?
'விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன' அதுதான் தெரியுமே, என்று சலித்துக் கொள்கிறோம். 'நிரோத் உபயோகியுங்கள் என்று' என நிறுத்தப்பட்டவுடன் நாம் தயாராவது ஒரு அதிர்ச்சிக்காகும். கடைசி வரியான 'வாயேன்' கூட அறிவுக்கு அதிர்ச்சி தரவில்லை. முகச் சுளிப்பையோ கேலியுணர்வையோதான் தருகிறது. அறிவு அதிர்ந்து விரியவில்லை.
கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கிறேன்,
சுமைமாற்றி, ஏதேனும்
இருக்கலாகாதா?
இன்னும் வரும் 18/01/2014
இங்கே ஒவ்வொரு வரியும் தன்னிகழ்வு பெறுகிறது. 'கழுத்திறுக்க, கண்பிதுங்க, நெற்றியில் வேர்வை முத்தாகி உருண்டோட, சந்தைக்கு சுமையோடு செல்கிறேன். சுமைமாற்றி ஏதேனும் இருக்கலாகாதா?' என்று இதை வசனமாக எழுதிப் பார்க்கும் போதும் நாம் இதை வாசிப்பதும் கவிதையின் கதியில்தான். நெற்றியில் வேர்வை' என்றவுடனேயே நம் பிரக்ஞை நிற்கின்றது. காரணம் கழுத்திறுக்க-- கண்பிதுங்க--என்று ஒரு பெரிய பாரத்தைச் சுமப்பதன் விளைவுகள் நின்று நின்று பிறந்து முதல் இரண்டு சொற்களுமே தனித் தனி வரிகளாக ஒரு கதியை ஏற்படுத்துவதுதான். ஒரு புடவையை வித்துக் கிடத்தி அதன் ஒரு கோடியில் பிடித்து உதறி ஓர் அலையைப் பிறப்பித்ததும் அவ அலை புடவையின் முழுப் பரப்பிலும் ஓடி வருவது போல, முதல் இரண்டு வரிகளிலும் ஏற்பட்ட லயம் முன்றாவது வரியிலும் தொற்றிக் கொள்கிறது. நான்காவது வரி ஆரம்பம் 'நெற்றிக்கும் முத்து'க்கும் ஒற்றேளுத்துச் சப்த உறவு கொண்டு எதிரொலிக்கிறது. 'சந்தைக்குச் சுமையோடு' என்ற வரிக்கு அடுத்து 'செல்கிறேன்' ஆரம்பித்து ச, செ யிலுள்ள சகர உறவோடாகும்.
இங்கே இக்கவியே குறிப்பிடும் வகையாக சப்த அணிகூட ஒரேயடியாக நீக்கப்படவில்லை. சிக்கனமாகிறது. "சவுக்கந் தோப்பினூ டே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி அளவுக்கு சப்தம் சிக்கனமாகிறது.
இக் கவிதை வரிகளில் வரிக்கு வரி ஒருமனநிலையின் பிரதிமை படிப்படியாக எழும்புவதில்தான் அறிவு விருந்தடைகிறது. படிப்பவன் மௌனம் கொள்கிறான். பிரத்தியட்ச வாழ்வின் பங்கங்களில் ஒன்றைக் கவியோடு பகிர்ந்து கொள்கிறான். 'முத்தாகி உருண்டோட'என்பது வரை ஒரு கடினமான சமயத்தில் உடல் கொள்ளும் இயல்புகள். சந்தைக்குச் சுமையோடு செல்கிறேன் என்றதும் இயல்பின் காரியம் காரணம் கொண்டு விரிவடைகிறது. கவி வெறும் ஸ்தூலச் சுமையைப் பற்றிப் பேசவில்லை. 'சுமை'என்ற ஸ்தூல நிதர்சனம் ஒரு ஆழ்ந்த பரிமாணத்திலுள்ள நிதர்சனத்துக்கு இட்டுச் செல்கிறது.
கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
தானே அழுதழுது
பிள்ளைபெற வேணுமென்று
நெஞ்சற்ற டாக்டர்களும்
முதியவரும் சொன்னபடி
செய்ய முயன்றேன்,
முயல்கிறேன்.
இடுப்பில் கையும்
இருளூடே முனகலுமாய்
ஒடிந்து குமைகின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
உணர்வை விளக்கி
உள்ளொளியை எள்ளி
தன்னறிவு வழிச் செல்லும்
தனிச்சுமையை ஏற்று
வாழ்வின் அடிப்படையைக்
குடைந்தறிய முற்பட்டேன்
சப்பாத்திப்பழம் சடைத்த
வெறுமையே வாழ்வாயிற்று
வேதனையே அரசாயிற்று......
சரீரத் தளத்திலிருந்து கவி சுமை என்ற படிமத்தை ஆன்மிக பிரச்னை வரை ஈர்த்துச் செல்லும் ஒழுங்கு அற்புதமானது.
இன்னும் வரும் 19/01/2014
இது புலனாகிய பின்பு மீண்டும் 'கழுத்திறுக்க' என்று இரண்டாவது தடவை படிக்கிறோம். முதற் சொல்லே அதிர்ச்சி தருகிறது.தன்னறிவின் தனிச்சுமைக்கும் இந்த கழுத்திறுப்ப்தற்கும் உள்ள உறவு இப்போது பலமாகிவிட்டது. எனவே திரும்பத் திரும்பப் படிப்பதற் கேற்ப எதிரொலிகளின் செறிவு உள்ளதுதான் கவிதை. நிரோத்தைப் போன்று உபயோகித்து விட்டு கழற்றி வீசுவதற்கல்ல கவிதை.முன் குறிப்பிட்ட நிரோத் 'கவிதை'யில் 'வாயேன்' என்ற பிரயோகத்தோடு 'கவிதை' தீர்ந்தே விடுகிறது. திரும்பப் படித்து அதிசயிக்க அங்கே ஏதுமில்லை.
துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்
மேலே குறிப்பிட்ட 'ஓயுமொலி' என்ற அம்சம் கூட குறைவாகவே உள்ள கவிதை இது. இங்கே உடைவு நேர்வதற்கு, சப்தத்தின் அனுகூலம் கிஞ்சித்தும் இல்லை. பொருளே யாப்பு. 'கோடு'என்பது ஒரு குணம். இரும்புக் 'கோடு'என்ற பிரயோகம் ஒரு அதிர்ச்சி தருவது.'துருப்பிடித்த' அம்சத்தில் நிறுத்துவதானால் நாம் எதற்கோ தயாராகிறோம். எதிர்பார்த்ததற்கேற்ப இரும்புக்கோடுகளினூடே, என்ற பிரயோகம் 'துறுத்' தன்மையையும் ஏற்று அதிர்வுதந்து விரிகிறது.'இரும்புக்கோடு' என்பது தனிச் செறிவுள்ள பிரயோகம். எனவே தனிவரியாகக் கூடியது. இத்தகைய தகுதி பெறாத பிரயோகங்கள் ஒன்றன் பின்னாக ஒன்று வந்தும், கவித்துவத்தின் சாயலே மிகுதியாக உள்ள பிறவிகளைத்தான் 'வசன கவிதைகள்' என வேண்டும். 'சிதறும்' 'பயனற்ற' என்று நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சிதறல், பயனின்மை ஆகிய இரண்டு தன்மைகளும் தனித் தனியாக அழுத்தம் பெருவதாலாகும். தொடர்ந்து வரும் பிரயோகத்தைக் கவனித்தால் அது, இதுவரை வந்த பிரயோகங்களை வெற்றென விளக்குவதாக இல்லை.விளக்கி விரிவு கொள்வதாகவே உள்ளது. 'சிதறும் பயனற்ற அலைகள்' என்றிருந்தால் வெற்றின் விளக்கம். அதே சமயத்தில் தர்க்கத்துக்கு ஒவ்வாதது. அலைகள் சிதறலாம். பயனற்றவையா? என நம் அறிவு முகம் சுளிக்கும்.பயனின்மைக்குக் காரணம் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால்
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்
எனும்போது, 'அலைகள்' என்று குறிப்பிடாமலே 'அலைகள்' குறிப்பிடப்பட்டு, பயனின்மைக்கு உப்பு நீரும் இணங்கி விரிகின்றன. முன்னிரு வரிகளும் மூன்றாவது வரியில் பொருள்வாயிலாகக் கலக்கிறது. இக்கலப்பிலேயே அறிவு சமாதானம் கொள்ளும், விரியும்,வியப்படையும். இக்கலப்பு 'அலைகள்' என்ற பிரயோகத்தில் நிகழாமல் அறிவும் ஏமாறும். வெறுப்படையும்.தொயும். கவிதையும் ஊர்வனவற்றைச் சாரும்.
இன்னும் வரும் 20/01/2014
தீட்சண்யத்தோடு இயங்கக் கூடியவனுக்குத்தான் கவிதையுலகில் இடமுண்டு. வரிக்கு வரி பொருளம்சத்தில் தர்க்கம் நிகழ்ந்துகொண்டு போவதுதான் சிருஷ்டி முறை. இன்றைய பெரும்பாலான யாப்பற்ற கவிதைகளிலோ இந்த தீட்சண்யம் இல்லை. ஒரு புறத்தில் விகடக்கூற்றுக்களும், ஹிருதய மின்மையையே 'பரிசோதனை' என்று சொல்லி உருவாகும் பிதற்றல்களும்,மறுபுறத்தில் கட்சி அரசியலுக்கு ஒத்தூதி அதீத சொற்பிரயோகங்களை எவ்வித கவித்வ நியாயமுமற்று அடுக்குவோரும் மலிந்திருக்கின்றனர்.பயங்கர ஆடை மொழிகளை இவ்வகையினர் கவித்வ தர்க்கம் அற்று பிரயோகிக்கின்றனர்.
அடைமொழிகளின் கடமையை பெயர்ச சொற்களும் வினைச் சொற்களும் ஏற்று தனித்து வரும்போது கவிதையின் உறுதி பெருகுகிறது. அடைமொழி உபயோகப்படும் பட்சத்தில், அது பெயர்ச் சொல்லுடன் பின்னிப் பிணைந்து தீவிரம் பெற்றாக வேண்டும். இன்றைய பிரக்ஞையில் சாங்கோபாங்கமான அடைமொழி அடுக்குகளுக்கு இடமில்லை.அத்தகைய அடுக்குகள் யாப்பின் சாவதான பிரக்ஞியைச் சார்ந்தவை.அடைமொழியும் உவமையும் எழுவாய்ப் பெயரைவிட்டுத் தனித்து நிற்பவை. எனவே எழுவாய்க்கு, வினைக்கு,கவிதைக்கு தீவிரம் தரமாட்டாதவை. இந்நிலையில் இருமுறைகள் கையாளப்படும் சமயத்தில் இவை புதிய பிரக்ஞையின் படிமங்களாகவே பிறந்தாக வேண்டும். இன்றைய பிரத்தியட்சத்தின் கவி நிகழ்ச்சிகளாக வேண்டும்.
இன்னும் வரும் 21/01/2014
இனி,
கவிதையில் ஏற்படும் சிக்கல் தெளிவின் அடிப்படையில் நிகழ்ந்தாக வேண்டும்.
சிலையை உடை
என் சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
உறுதிமயமான சிலையை உடைக்கும்படி சொல்வது தெளிவாகிறது. கடலோரம் காலடிச் சுவடு இருப்பதும் தெளிவாகிறது. இரண்டு பிரயோகங்கள். மற்ற பரிமாணங்களும், அனுபவங்ககளும், கலைச் சாதனங்களும் இலக்கியத்துடன் சம்பந்தமற்றவை என்பவர்கள், எங்கோ பெரும் தவறு செய்கிறார்கள். இத்தகையவர்களின் இயக்கமும் சாதனையும் கலையாவதில்லை.
அது வெறும் தொழிற்திறன். சொல்வழி தொழிற்திறன். வியாபாரப் பொருள். சத்தியத்தின் தரிசனமற்றது. தச்சன் மரத்தைக் கையாளுவதைப் போல, சொல் அவர்களது படைப்புகளுக்கு ஒரு மரச் சாதனம். வியாபார raw material. இவ்வாறான அஞ்சறைப் பெட்டி நோக்கு (அனுபவம் ஓர் அறையில், படிப்பு ஓர் அறையில், சொந்த வாழ்வும் தர்மமும் ஓர் அறையில்,எழுத்து ஓர் அறையில்.....) இத்தொழில் காரர்களுக்கு பல சௌகர்யங்களைக் கொடுக்கிறது.
மனித நேயமற்றவர்கள், சதிக்குணம் கொண்டவர்கள், சூழ்ச்சி மனத்தவர்கள், சுயநலக்காரர்கள், மற்றவர்களை அழுத்தி தான் முன்னேற விரும்புகிறவர்கள் எல்லாம் மிக அழகாக கேடிழைக்கப்படும்.பரிதவிக்கும் மனிதர்களுக்காக, அல்லல்படும் ஜீவன்களுக்காக இரக்கம் சொட்டச் சொட்ட கண்ணீர் உகுத்துக் கதைகள் புனையலாம், மிகுந்த தொழில் திறனோடு.
சுல்ச்சிக்காரனும், சதிகாரனுமான தச்சன் செய்த நாற்காலி பயனுள்ளதாகவே இருக்கும்.ஏன்னெனில் தச்சனின் மனத்திற்கும் நாற்காலிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கற்பழிப்பை அன்றாட வேலையாகக் கொண்டவர் செய்யும் ராமாயணக் காலட்சேபம் அசத்தியமாவது போல, வெறும் தொழில் ஆவது போல சூழ்ச்சிக்காரனும் சதிகாரனுமான ஒருவன் எழுத்தும் கைத்திறன் வாய்ந்த எழுத்தில், நிறைந்து வழியும் இரக்கமும் கருணையும் அசத்தியமானது.
ஏன்னெனில் தான் வாழ்வுக்கும் எழுத்துக்கும் பொதுவாகவும் ஒருமையாகவும் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கவேண்டிய மனவெழுச்சி,இங்கு முரண்படுகிறது. எழுத்துக்கு வரும்போது தான் வாழ்வுண்மைக்கு மாறான ஒரு அசத்திய மனவெழுச்சி தயார் செய்து கொள்ளப்படுகிறது.
அந்தத் தயாரிப்புப் பொருள் தொழிலுக்கு வேண்டிய raw material. அவன் எழுத்து வெறும் தச்சு வேலை.
இருப்பினும் எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? எழுத்து நன்றாக இருக்கிறதா இல்லையா பார் என்கிறார்கள்.இது தொழில் திறனுக்கும் சத்திய தரிஸ னமேயாகும் கலைக்கும் வித்தியாசம் தெரியாத குறைதான்.
மனித நேயமும், 'தான்' அழிந்த பார்வையும் அடிப்படையான தர்மங்களும் சத்தியத்தின் பரிமாணங்கள் எனக் காணாது, 'இலக்கியக் குறி' கொண்டவர்களுக்கு மேற்கண்ட தொழில் திறனாளர்கள், இலக்கியாசிரியர்களாகத் தென்படலாம். சத்தியத்தின் இக்குறியிட்ட பரிமாணங்கள் அற்ற மனிதனும் அவன் தொழில் திறனான எழுத்தும் வேறுபடும் பொழுது அவ்வெழுத்து கலையோ.இலக்கியமோ ஆகாது என்பது இன்னும் நம் 'பெருந்தகைகள்' பலருக்குத் தெரியவில்லை. மனிதனும் எழுத்தும்,பார்வையும், அடிப்படை தர்மங்களும் வேருபடுத்தப்படமுடியாத ஒரு முழுமை. அம்முழுமை புரிந்துகொள்ளப்படும் பொழுது,பிரமில் பானுச்சந்ரென் அவர் கவிதைகள், அவர் அநுபவ உலகம், அவர் எழுத்துக்கள், ஓவியங்கள், சிந்தனை நிலை, இன்னும் மற்றவை எல்லாமே வேறுபடுத்தப்படி முடியாத ஒரு முழுமையாக இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
வெங்கட் சாமிநாதன்
புதுடில்லி
ஜனவரி 16 1973
இன்னும் வர இருப்பது பிரமில் பானுசாந்ரெனின் 'கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு.
22/01/2014

Wednesday, 18 December 2013
வஜனாம்ருதம் தொடர்ச்சி 2
வஜனாம்ருதம் தொடர்ச்சி
100. மயிலுக்கு தேவாங்கு ஜன்ம விரோதியாய் இருப்பது போன்று காமம் ஞானத்துக்கு ஜன்ம சத்துரு ஆகின்றது.
76. அசுர குணம் படைத்தவர்களுக்கு நல்லுபதேசம் செய்தல், குளிர் ஜுரம் உடையவர்களுக்கு கொடுக்கும் அன்னம் போன்று விஷமாக மாறும்.
77. அறநெறி ஒழுங்கில்லாத அரசியல்வாதிகளின் ஆட்சியில், பஞ்சமா பாதகங்கள் பெருகும்.
78. சொந்தச் சுக துக்கங்களுகுத் தானே காரணமென்பதை தன்னை ஆராய்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு நாளடைவில் நிறைந்த சாந்தியும் ஆத்ம சுகமும் கிடைக்கின்றது.
79. அறமில்லாதவனுக்கு இறைவனும், இறை உணர்வு இல்லாதவனுக்கு அறமுமில்லை.
80. அறநெறியும், அரசாட்சியும் பிராணனும் சரீரமும் போன்றவை. ஆறாம் குன்றிய ஆட்சி வீ ழ்ச்சியடைகிறது.
81. உலோகாயுதக் கல்வியால் புத்திக்குட்பட்ட காரியங்களைத்தான் கற்பிக்க முடியும். சமயக் கல்வியால் புத்திக்கும் அப்பாற்பட்ட விஷயங்களையும் அறியமுடியும்.
82. எல்லா மனிதருடைய அடிப்படைத் தேவைகளும் ஒன்றாயிருந்த போதிலும் அவை நிறைவேறும் முறைதான் கால தேச வர்த்தமானகளுக்கு ஏற்ப மாறுபடும்.
83. பன்றியின் சயன சுகம் சேற்றில் தங்கியிருப்பது போன்று நெறி கெட்டவர்களுக்குப் பஞ்சமா பாதகங்கள் சுகமாய்த் தோன்றும்.
84.எருதிலிருந்து பால் சுரந்தாலும், வஞ்சகர்களிடத்திலிருந்து அன்பு சுரப்பது அரிதிலும் அரிது.
85. உருக்கினால் உருகாத உலோகப் பொருள் உலகில் இல்லாதிருக்கலாம், எனினும் மூக்கரின் உள்ளம் உருகுவது மிகக் கடினம்.
86. வித்தினின்றும் மரம், மரத்திலிருந்து பூ, காய், பழம் உண்டானாலும் மரத்தில் காய்த்துப் பழுத்த பழம் மரத்திற்குரியதன்று. இது மரத்தின் நியதி. அதேபோன்று தவத்திலிருந்து ஞானம், ஞானத்திலிருந்து சுகம் பிறக்கும். ஞானசுகம் ஞானிக்கு மட்டும் உரியதன்று.
87. ஞானியின் ஞானசுகம் ஞானகாரகனாகிய ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் பொழுது இறை சிருஷ்டிகள் அதனைப் பகிர்ந்து கொள்கின்றன.
88. பிறருடைய நலத்தைப் பேணி வளப்பவர்களின் சுய சுகம், பர சுகமாக மாறிவிடுகிறது.
89. உனது சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறக்கணித்து இறைவனுடைய விருப்பத்திற்கு உன்னை ஆளாக்கி விடும் போதே இறை அருளுக்கும், அன்புக்கும் நீ பாத்திரமாகிறாய்.
90. உன்னிடமிருக்கும் சகலவிதமான உடைமைகள், உரிமைகளை முற்றாக விட்டுவிடு. உன்னை நிர்க்கதிக்கு உட்படுத்து. உனது சுயசிந்தனையிளிருந்தும் விலகு. பட்டம் பதவிகளை உதறு. கற்ற கல்வியை நிஷ்பிரயோசனப்படுத்து. இங்ஙனம் நீ செய்யமுடியுமானால் "சரணாகதி" என்ற உயர்ந்த நிலையால் ஞானத்தின் உச்சநிலை அடைவாய்.
91. இரத்த சோகையால் துன்புறும் நோயாளிக்கு இரத்த விருத்திக்குரிய மருந்தினாலன்றி வேறு ஒன்றினாலும் சுகம் கிடைக்காதது போன்று, அஞ்ஞானத்தினால் துன்பப்படுகிறவர்களுக்கு, ஞானத்தால் அன்றி, வேறொன்றினாலும் சுகம் கிடைப்பதில்லை.
92. தவத்தினாலன்றி உபதேசத்தினால் ஞானசக்தி உண்டாவதில்லை.
93. உபதேசத்தினாலும், உபதேசம் பெறுவதினாலும் பூரணத்துவம் அடையமுடியாது.பற்றின்மையாலேயே அதை அடையலாம்.
94. மதமும் தர்மமும், முத்துச்சிப்பியும் முத்தும் போன்றது.
95. சரிரம் இருக்கும்வரை ஞானிக்கும் பசி, தாகம், உறக்கம், பிணி போன்ற சரீர உபாதைகள் இருக்கத்தான் செய்யும்.
96. குளிர்ந்த கார்முகிலை உஷ்ணமுகில் உராயும் பொழுது இடியும்,மின்னலும் உண்டாவது போன்று தர்மத்திற்கும்,அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் சத்தியம் என்ற மின்னல் தோன்றுகிறது.
97. குருவை குருவாகவும், தெய்வத்தை தெய்வமாகவும் கருதுகின்றவர்களுக்குத்தான் குரு தேவை. தெய்வம்தான் குரு என்று காணுகின்ற பேரறிஞனுக்கு குருவின் தேவைதான் என்ன?
98. நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற சில பறவைகள் போன்று ஞானியும், இகத்திலும் பரத்திலும் சஞ்ச்சரிக்கக்ககூடிய தகுதியுடையவர்.
99. பறவைகள் உண்பது, கூடுகட்டுவது, தேகசுத்தம் செய்வதாகிய மூவகைக் கருமங்களையும் தமது ஒரே ஒரு அலகினால் மாத்திரஞ் செய்து முடிக்கின்றன. அதேபோன்று ஞானியின் ஞானமும் அநேக கருமங்களைச் செய்து முடிக்கும் வல்லமையுடையது.
100. மயிலுக்கு தேவாங்கு ஜன்ம விரோதியாய் இருப்பது போன்று காமம் ஞானத்துக்கு ஜன்ம சத்துரு ஆகின்றது.
.வஜனாம்ருதம் தொடர்ச்சி 1
Saturday, 7 December 2013
உதயம்
உதயம்
படமும் போட்டு தலைப்பும் போட்டாயிற்று. படைப்பு எதுவாக இருக்கும் என்று இதுவரை எனக்கும் தெரியாது. நிறைய எழுத வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அனால் ஒரு சோம்பேறித்தனம் தாமச குணம் தடுத்து நிற்கும். "உதயம் " உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். நாம்தான் அதைக் காண அடுத்த நாளுக்காக ஏங்கிக் கொண்டிருப்போம். ஏனெனில் எம்மால் காலத்தோடு ஓடமுடியாது.
இருந்த இடத்தில் இருந்துகொண்டு உதயத்தைக் காண இருபத்துநான்கு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கும் எமக்கு வாழ்வின் உதயமும் நீண்ட நாள் போராட்டத்தின் பின்னர் அல்லது எதிர்பார்ப்பின் பின்னர் வருமென்று ஏங்குகிறோம். உண்மையில் உதயம் என்பது கணத்துக்குக் கணம் எம்முள் நிகழ்கிறது. அதை நாம் காணத் தவறிவிடுகிறோம். அதுமட்டுமல்ல ஒரு அற்புதமாக அது நிகழ வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறோம்.
ஒவ்வொரு நாள் காலையிலும் எழும்போது எமது எதிர்பார்ப்புகள் ஏக்கங்களை ஒரு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு நின்மலமான மனதோடு அந்த நாளை எதிர் கொள்ளப் பழகுவோம். எந்தவொரு சம்பவங்களையும் உறவுகளையும் இருகரம் நீட்டி வரவேற்போம். நமது குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட புதியவர்களாகக் காணப் பழகுவோம். அவர்கள் பற்றிய இறந்தகால விம்பங்க்களை உடைத் தெறிந்துவிட்டு புதிய உறவுகளாகக் கொண்டாடுவோம்.
இதை ஒரு பயிற்சியாகக் கொள்ளாமல் இயல்பாகவே செய்து பாருங்கள். நீங்களே உங்களளவில் ஒரு புதிய மனிதராக மாறியிருப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு புதிய உதயமாகும். உங்கள் உள்ளம் உவகை கொள்ளும். முதல் நாள் பகைமையோ மனதைப் புண்படுத்திய செயல்களோ உங்களைப் பாதிக்காது. அன்று பிறந்த குழந்தை போல ஒவ்வொன்றையும் உற்று நோக்கத் தொடங்குவீர்கள்.
உதயம் உங்கள் இதயத்தின் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தால் உங்களைவிட அதிஸ்டசாலி வேறேவராகவும் இருக்கமுடியாது.
Sunday, 1 December 2013
மனைவி
மனைவிளங்க வந்ததனால் மனைவியானாள் - ஒரு
துணையாக நின்றதனால் துணைவியானாள் - வாழ்வின்
சாரத்தை புரியவைத்து சம்சாரமானாள் - ஒரு
ஆதார சுருதியாகி என்தாரமானாள்.
ஆட்டிப் படைத்ததனால் பெண்டாட்டியானாள் - ஏதோ
சாதிக்க வந்ததனால் பெஞ்சாதியானாள் - சம்மதம்பெற
சதிசெய்வதனால் சதியுமானாள் - தினம்
பத்துமணிக் கினிப்பதனால் பத்தினியானாள்.
அரிசியில்லை பருப்பில்லை என்பதனால் இல்லாளானாள்
அச்சம் மடம் நாணங்கொண்டு குடும்பத்தலைவியுமானாள்
பாரிய சுமைகள் தாங்கி பாரியாரானாள் - அவள்சொல்
மீறிவிட்டால் மனையே ஆட்டி மனையாட்டியுமானாள்.
கூறிவிட்டேன் மனைவிக்கு பன்னிரு மறுபேர்கள்
குறையிருந்தால் மன்னிக்கவும் இதையிங்கு மறுப்போர்கள்
பாடிவிட்டேன் பக்கத்திலே அவளிருக்கின்றாள் - பயமிருக்கு
பன்னிரண்டில் என்னவாக மாறப் போகிறாள்.
நேரடி ஒளிபரப்பிற்காக நடாமோகன் நடத்திய கவியரங்கிற்கு என் மனைவி அருகிலிருக்க எழுதிய கவிதை. இன்று அவள் இவ்வுலகில் இல்லை என்றாலும் அன்று அவள் சிரித்த சிரிப்பொலி இன்னும் என் செவியில் ஒலிக்கிறது. என் மனைவியின் நினைவோடு இதைப் பகிர்கிறேன்.
Saturday, 23 November 2013
வஜனாம்ருதம் தொடர்ச்சி 1
வஜனாம்ருதம் தொடர்ச்சி
51. மனதை ஆத்மாவில் லயம் செய்தது நிறுத்தும் நிலைதான் மனோலயம். மன நாசம், மனத்தைக் கடந்தநிலை என்றெல்லாஞ் சொல்லப்படுவதுமஃதே.
52. அரசியல், பொருளாதாரத் தத்துவங்கள் சமயக்கொள்கைகளுக்கு மாரானதன்று. அவை சில மகத்தான உண்மைகளின் அடிப்படையில் சிந்தனை செய்து செயற்படுத்தும் பொழுது சமயம் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும்.
53. ஆத்ம சுகம், மனச்சுகம், சரீரசுகம் என்ற மூவகைச் சுகங்கள் மனிதனுக்குத் தேவை. சரீரசுகம் இல்லாதவனுக்கு மனச் சுகம் இல்லை. மனச் சுகம் இல்லாதவனுக்கு ஆத்ம சுகம் இல்லை.ஆத்மசுகம் பூரணமாயிருப்பவனுக்கு மனச் சுகத்திலும், சரீர சுகத்திலும் நாட்டமுமில்லை.
54. தர்மத்தையுணர்ந்து அதன் வழி நில்லாதவர்க்கு ஞானம் என்பது பிறப்பதில்லை.
55. தர்மம் காய் போன்றது எனில், ஞானம் பழம் போன்றதாகும். வாழ்க்கையில் தர்மம் என்ற காய் முற்றி ஞானம் என்ற பழமாகப் பழுக்கிறது.
56. அடிப்படையில் விடுதலை வெளிப்படையில் உலக ஷேமமும் தான் ஒரு மத விசுவாசியின் இலட்சியமாக இருக்கவேண்டும்.
57. தர்மத்திற்கு இருக்கும் அதே ஆயுள் அதர்மத்திற்கும் இருக்கின்றது.
58. உயர்வதும் தாழ்வதுமாகிய இயற்கை நியதிகளைப் போன்று தர்மமும் அதர்மமும் காலாகாலத்தில் தேய்வதும் வளர்வதுமாகத் தோற்றமளிக்கிறது.
59. மத விசுவசமுடைய சிறந்த அரசாட்சியின் துணையால்தான் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நிறுத்த முடியும். மக்கள் தர்மத்தை அனுஷ்டிக்கும் வகையில் ஆட்சி செலுத்தி தர்ம நெறியில் மக்கள் ஒழுகத் தொடங்கும் பொழுது ஆட்சியின் அவசியம் மக்களுக்கு தேவையற்றதாகிவிடுகிறது.
60. தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி இருந்தால்தான், மதகுருமார்களினாலும் மதப்பிரசாரத்தாலும் பிரயோசனம் ஏற்படும்.
61. தர்ம சிந்தனைக்கு இடமில்லாத நிர்வாகமும், கல்வி முறையும் இருக்கும் இடத்தில், எக்காலமும் அமைதி நிலவுவதற்கு இடமில்லை.
62. தர்ம சிந்தனை இல்லாத மக்கள் இருக்குமிடத்தில் எத்தகைய அரசாட்சியும் நிலைத்திருப்பதில்லை.
63. அரசாட்சியை விட தர்மம் பெரியதென்று மக்கள் நினைக்கும் பொழுதுதான் அரசாட்சி அதன் உண்மையான குறிக்கோளை அடையும்.
64. வேற்றுமையில் ஒற்றுமையிருக்கும் இயற்கை இரகசியத்தை அறிந்தவகள் உள்ளத்தில் சமரசம் தானாகவே பிறக்கிறது.
65. பிராணன், மனம், புத்தி மூன்றும் ஆத்மாவில் லயக்கும்பொழுதுஅதி அற்புதமான சுகம் பிறக்கிறது.
66. எங்கு பண்பு குறைந்திருக்கின்றதோ அங்கு தருமமில்லை. தர்மத்தின் செயலுருவம்தான் பண்பு.
67. தாய் தந்தையின் அந்தரங்க எண்ணங்களின் உருவ வடிவமாகத்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
68. தாய் தந்தையர்களின் அடிமனதில் பதிந்திருக்கும் எண்ணங்களுக்கு தக்கபடி, பிறக்கும் குழந்தைகளின் அடிப்படைச் சுபாவமும், அமைந்திருக்கும்.
69. தர்ம சிந்தனைகள் அடி மனதில் பதியாதவர்களுக்கு நன்மக்கள் பிறப்பதில்லை.
70. தர்மத்தை உபாசிக்கின்றவர்களுக்குத் தர்ம தேவதை புத்திரனாகப் பிறக்கின்றது.
71. நல்லறமிக்க இல்லறத்திலிருந்து ஒழுக்கமுடைய மக்கள் பிறக்கின்றனர்.
72. நல்லறமில்லாத இல்லறமே ஒழுக்கங் கெட்ட பிரஜைகளுக்குக் காரணம்.
73. மாதா, பிதா, குரு, அரசன் இந்நால்வரும் அறநெறியில் வாழ்பவராகில், கெட்ட பிள்ளையும், கெட்ட சிஷ்யனும், கெட்ட பிரஜையும் இருக்க முடியாது.
74. சத்தியம், தர்மம் இவற்றை இரு கண்களாக வைத்து வாழ்கின்றவர்களுக்கு அரசியல் சலுகையும் பாதுகாப்பும் எதற்கு?
75. சுயநலம் கருதி கடமையும், சேவையும் செய்கின்றவர்களுக்கு இறுதியில் அதுவே துன்பத்திற்குக் காரணமாகின்றது.

Thursday, 21 November 2013
கவிஞனின் அனுபவம்
கடகட எனவொரு இசைபட வருகிற
ரெயிலினி லனுதின மிடர்பல படுகிற
கவிஞனி னனுபவ மிகைபட மிகைபட
தினமொரு கவிய மனதினி லமைவுற
அதையொரு காகித மிசைபட இயம்பிட
பலரதை ஒருமுறை புகழுரை நயம்பட
உரைத்திட உணர்வது தாய்மையி னின்பம்.
படபட எனபல உரைபல உரைத்திடு
மடமயில் மங்கையர் குரல்பல இணைந்திட
கடகட ரயிலொலி காற்றினி லோய்ந்திட
இடையிடை கூவிடும் இஞ்சினி னொலியது
தொலைவினி லொருரெயில் வருவது போலவே
செவியினில் விழுவதால் தலையினை அடிக்கடி
வெளியினில் விடுவதால் விழியினில் விழுவது
கரித்திடவருவது கண்களில் கண்ணீர்.
ஒருகர மதிற்சில பொருள்பல இருந்திட
மறுகர மதுவொரு துணைஎனு மளவிலே
அகப்படு பொருளினை குரங்கென பிடித்திட
பரபர எனவொரு துருதுருப் புடன்ரெயில்
புறப்படு வேளையில் நாணலாய் வளைவரேல்
சடசட வெனவொரு சரிவது காண்கிலர்
முதலதை பயின்றிட லவசியம் 'அரிவரி'
முழுவதும் பயின்றவ ரதிசயம் சரிவரின்.
பலபல நிறங்களில் பாவையர் சேலை
பலவித வகையினிற் பார்ப்பவர் சேட்டை
தினமிதைப் பொறுத்திட செல்வதோ ஆலை
இடையிடை நினைத்திட செய்வதே வேலை
ஒருபடி ஓய்ந்திட வந்திடும் மாலை
மறுபடி தொடர்ந்திடு மதுதான் வாழ்க்கை
அதையிதைச் சொன்னதால் ஆத்திரம் வேண்டாம்
அடுத்தவர் சுதந்திரம் காத்திட வேண்டும்.
கடகட எனவொரு இசையொடு போகிற
ரெயிலினி லனுதின மிடர்படசாகிற
கவிஞனி னனுபவ மதுவொரு தனிரகம்.
எழுபதுகளில் காகிதாலை வேலைக்குப் போகும் காலங்களில் கவிஞனின் பார்வையில் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை காகித ஆலைக்கு நாளாந்தம் ரெயிலில் செல்லுகையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை இக் கவிதையில் தந்தேன்.

Subscribe to:
Posts (Atom)