Monday, 23 September 2013

Enru thaniyum intha suthanthira thaakam




என்று தணியும் இந்த சுதந்திர தாகம் 
என்று முடியும் எங்கள் அவலத்தின் ஓலம் 
என்றெமதன்னை கை விலங்குகள் போகும் 
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் 

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ 
பாரினில் இன்னல்கள் வேறினியார்க்கோ 
தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ 
தாயுந்தன் பிள்ளையைத் தள்ளிடப் போமோ 

அன்றுநம் மண்ணில்நாம் ஆயிரம் மடிந்தோம் 
இன்றுநம் மண்ணில்நாம் போராடிட வாழ்ந்தோம் 
என்றுநம் கனவுகள் வென்றெடுப்போமோ
நம்மை நாம் ஆண்டிடும் நாளும்வாராதோ.







தமிழ் ஆழிக் கரையினிலே
வெறும் சோழி பொறுக்கிடும்
சிறுவனைப்போல் நல்ல சொற்களைத்
தேடியலைகின்றேன்

வாழும்வடிவான கவிதைகள் செய்திடவே 
இவ்வையகந் துயரறவே எந்நாளுந்
தமிழ் ஆழிக் கரையினிலே நானோடி
சிறு சோழி சேகரிப்பேன்

மூழ்கித் தவங்கிடந்து சிலர்நல்
முத்துக்கள் கொண்டு வந்தார்
கூவிக் கடை விரித்து அவர்
கூட்டத்திலே விற்றுவிட்டார்

தமிழ் ஆழிச் சங்கெடுத்து சிலர்
ஆபரணங்கள் செய்தார் அதை
அரிந்து எடுத்ததனால் அவர்
அங்கங்கள் ரணமாக்கிக்கொண்டார்

வலம்புரிச் சங்கெடுத்து சிலர்வானதிலூதி
இனம்புரியாத ஒரு இன்பத்தை நுகர்கின்றார
தினந்தினங் காணும் காட்சிகள்தான் நான்
சோழிகள் தேடிடும் சிறுபிள்ளைதான்.



Ullathellaam ingonre


உள்ளதெல்லாம் இங்கொன்றே

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும் 
பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் 
அதில் உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

உள்ளதெல்லாம் இங்கொன்றே

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும் 
பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் 
அதில் உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

Saturday, 17 December 2011

வைக்கோல் பட்டறை..

சின்ன சிறுவனிவன்..
கன்னி கவிதைகளை..
எண்ணி எழுதையிலே - சிலர்
... எள்ளி நகைப்பார்.

என்ன ஏது என்று
எண்ணியறியாமலே..
திண்ணை காலியானால்..
தள்ளியும் படுக்கார்- தானும் படுக்கார்

புத்தன் அவனுக்கோர்
போதி மரம் - என
எத்தன் இவனுக்கோ - என்ன
விதித்ததென ஏங்கியிருக்கையிலே!

இத்தை உலகத்தில்
போதி மரம் என்று
ஒத்தை மரம் தான்
எஞ்சியிருப்பதைப்போல்...

சத்தக் கவிதைக்கு..
போதியும்.. பேதியும்..
சித்தக் கலக்கத்தில்..
ஒத்து வருவதா????

ரெகு ராமின் பாடலுக்கு ஒரு பதில்

ஞானம் பிறக்க நல்லாசிகள்

கன்னிக் கவிதைகள்
எண்ணிக் கவிபாடும்
சின்னஞ் சிறுவர்களே!
நீங்கள்
பண்ணிப் படைக்கின்ற
பாட்டையும் கேட்டையும்
பார்த்துக் கிடப்பதற்கா?
நாங்கள்
எண்ணித் தவங்கிடந்தோம்?
கண்ணில் படுகின்ற
கருத்துக்கள் பிழை என்றால்
உங்கள்
திண்ணைக் கதைஎதர்க்கு? போதிமர
எண்ணிக்கைதான் எதற்கு?
மண்ணைக் கவ்வியும்
எங்கள்
மீசையில் மண் ஒட்டல்ல
கோஷங்கள் இங்கெதற்கு?
வார்த்தை ஜாலங்கள் ஏனுனக்கு?
தாங்கள்
பாடும் கவிதைகள்
கன்னியா? கிழவியா?
காலங் கணிக்கட்டுமே! உனக்கு
ஞானம் பிறக்கட்டுமே!

அருள்ஜோதிச்சந்திரன்

Friday, 16 December 2011

எங்கே எனது போதிமரம்?


இறை தேடல்...

இறையென்று உண்டென்று நானறிவேனே

இறை தேடும் வழிதன்னை யானறியேனே

வழிதேடும் திசை கூட யாமறியோமே - திரும்பிய

திசையெல்லாம் சுவையாக கண்டேனே


பொருள் தேடும் பூமியில் - நான்

பொருள் வென்ற போதிலே

ஒரு திசை தன்னை வென்றேனே - இனி

பொருள் போதும் என்றேனே




புகழ் தேடும் மனிதருள் - நான்

புகழ் தேடி தானேயோ - இப்

புவிமாறி போனேனோ - இன்னும்

புகழ் தேடல் தொடருதே..




அருள் நாடும் உலகத்துள்

திரும்பிய திசை எல்லாம் நான் வென்று

இறுதியில் இறுமாப்பையும் கொன்று

அருள் கூடி இருள் நீங்கிச்செல்வேனோ - இல்லை




சிறு போக ஆசையில் சுழன்று

பொருள் தேடி.. பின் புகழ் தேடி..

வரன் தேடி..பின் இல் அறம் தேடி - மீண்டும்

சிறை நாடி செக்கிழுபட்டிருப்பேனோ


ரெகுராம்
Posted by Sidharthan at 15:25 1 comments:
அருள்ஜோதிச்சந்திரன் said...
ஒரு பதில்

இரை தேடும் உலகில்
இறை தேடல் உருவில்
உரையாடும் உந்தன்
கவியாடல் கண்டேன்.

குறை கூறி இங்கு
கவி பாட வில்லை
நிறைவாக எதையும்
நீ கூற வில்லை.

இறை யறிந்தாய் இறை
தேடும் வழி யறியாய் தேடிய
திசை எல்லாம் சுவை யறிந்தாய்
சுவைத்தவனை அறிந்தாயா?

பொருள் தேடி ஒருதிசை
வென்றாய் நீ - வாழ்க்கையின்
பொருள் தேடி எத்திசை
சென்றாய் நீ என்றும்?

புகழ் தேடி இப்புலம்
மாறி வந்தாய் நீ
பகல் தேடி கதிரவன்
பயணித்தல் அறிவாயா?

அருள் நாடும் உலகென்று
வைத்தாயே ஒரு ஆப்பு
அதுவே உன் கவிதைக்கு
ஒரு பெரும் முஸ்தாப்பு.

சிறு போக ஆசையில்
எல்லாமே அடங்கிவிட
பெரும் போக ஆசைகளை
பேரிட்டு எழுதிவிடு.

போதி மரத்தடியில் வெறும்
பேதிக்கு ஒதுங்காதே - பாவம்
இன்னும் சில புத்தர்களும்
ஒதுங்க சுத்தமாய் இருக்கட்டும்.

அருள்ஜோதிச்சந்திரன்

16 December 2011 18:33
Post a Comment

Saturday, 10 December 2011

மன வேதனை

தேவனைத் தொழுதேன் மனவேதனை அகல
நாதனைத் தொழுதேன் நரவேதனை அகல
ஆர்தனைத் தொழுதென் ஆரிடம் அழுதென்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

மனதிலோ கவலை உடலிலோ முதுமை
அறிவிலோ அவலம் ஆத்மாவின் சபலம்
தனதில்லா பொருளை தனதென்றலையும்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

உறவினைப் பகையென் றுணர்ந்த பின்னாலே
உறவினர் பகைவர்கள் உறவின் முன்னாலே
கரவில்லா அன்பை காண்பதற்கில்லை என்று
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

நெடுவழிப் பயணம் நெருங்கிய மரணம்
தருமொரு பாடம் சாதனையாக
கருவறை உறவும் கசந்ததைக் கண்டு
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

அருள்ஜோதிச்சந்திரன் 10 /12 /2012

Wednesday, 18 August 2010

Yogar Swamikal Natsinthanai

தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத் 
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத் 
தன்னை அறியச் சகலமு மில்லைத் 
தன்னை அறிந்தவர் தாபத ராமே 

பொன்னை யன்றி பொற்பணி யில்லை 
என்னை யன்றி ஈசன்வே றில்லை 
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத் 
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே 

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை 
நீதியும் இல்லை நெறியும் இல்லை 
சாதியையும் இல்லைச்  சமயமும் இல்லை 
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே 

நம்மையுந் தீமையும் நங்கட் கில்லைத் 
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை 
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லை 
சொன்ன சுருதியின் துணிபிது வாமே 

காலமு மில்லைக் கட்டு மில்லை 
மூலமு மில்லை முடிபு மில்லை 
ஞாலமு மில்லை நமனு மில்லைச் 
சால அறிந்த தவத்தி னோர்க்கே.